தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய படம் ‘பரியேறும் பெருமாள்’.
2018ல் வெளியான இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை அனைவருமே பாராட்டினர். பல விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வு கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அந்த கேள்வியில் ‘தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும்’ என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த கேள்வியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
TNPSC asks questions on Pariyerum Perumal movie



சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், நந்திதா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’.
பேட்ட, பிகில், தர்பார், பட்டாஸ் உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக் .
இயக்குநர் பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறியிருக்கிறார்.
