10-12 Std ஸ்டூண்டன்ஸ்.. அக்டோபர் 1 முதல் ஆசைப்பட்டா ஸ்கூலுக்கு போங்க.. டவுட்ட க்ளியர் பண்ணிக்குங்க!

10-12 Std ஸ்டூண்டன்ஸ்.. அக்டோபர் 1 முதல் ஆசைப்பட்டா ஸ்கூலுக்கு போங்க.. டவுட்ட க்ளியர் பண்ணிக்குங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn school studentsகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் கிட்டத்தட்ட 7 மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில்… அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவிகித ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்றும் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைய சூழ்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

இரண்டு பிரிவுகளாக வகுப்புகளை பிரித்து நடத்தலாம் என்று வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.

அதன்படி ஒரு பிரிவு மாணவர்களுக்கு திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இரண்டாவது பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வர வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் பள்ளிகளில் மாணவர்கள் 6 அடி இடைவெளி விட்டு பள்ளிகளில் அமர வைக்க வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்குள் வருவதற்கு முன்பு அவர்களுடைய உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும்.

மாணவர்கள் வருகைப் பதிவேட்டிற்கான பயோ மெட்ரிக் பதிவு முறையை பயன்படுத்துதல் கூடாது.

பள்ளிகளுக்கு வரக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமிநாசினி சோப் போன்றவற்றை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

TN Schools set to reopen from Oct 1 for classes 10 to 12- check complete SOPs here

விசித்திரன் படத்திற்காக பாலா & ஜிவி பிரகாஷ் & ஆர்கே. சுரேஷ் கூட்டணி

விசித்திரன் படத்திற்காக பாலா & ஜிவி பிரகாஷ் & ஆர்கே. சுரேஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

visithiran first lookஎம். பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த மலையாள படம் ‘ஜோசப்’.

இதில் ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், மாளவிகா மேனன், அத்மியா ராஜன் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றார்.

சில தினங்களுக்கு முன்பு ஜோசப் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார்.

தமிழில் நாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

விசித்திரன் எனப் பெயர் வைத்து இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

Director Balas next film is titled Visithiran

குஜராத் தமிழ் பள்ளியை மூட வேண்டாம்.; பள்ளி செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் கடிதம்

குஜராத் தமிழ் பள்ளியை மூட வேண்டாம்.; பள்ளி செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Edappadi Palanisamy Vijay Rupaniமகாத்மா காந்தி பிறந்த மண்ணான குஜராத் மாநிலத்தில் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக அங்கு அகமதாபாத், மணிநகர் பகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

இதனால் தமிழ் பள்ளிகள் & தமிழ்ச் சங்கங்கள் செயல்படுகின்றன.

சுமார் 81 ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளதாம்.

இந்த பள்ளியில் படித்த பலரும் உயர் பதவியில் உள்ளனர்.

தற்போது வகுப்புகளுக்கு போதுமான மாணவர்கள் சேர்க்கை இல்லை என கூறி தமிழ்பள்ளியை மூடுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

எனவே எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில் குஜராத் முதலமைச்சர் விஜர் ரூபானிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அகமதாபாத்தில் செயல்பட்டுவரும் தமிழ்பள்ளி மூடப்பட்டதை கேட்டு வேதனை அடைந்தேன்.

குஜராத்தில் உள்ள தமிழர்களுக்கு இந்த பள்ளி முகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது.

தற்போது மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி பள்ளியை மூடியுள்ளது அங்குள்ள தமிழ் மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ் வரலாற்று சிறப்புமிக்க மொழி, அங்குள்ள தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

வரும் காலத்தில் குஜராத்தில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களும் தமிழ் மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே தற்போது மணிநகரில் மூடப்பட்டுள்ள தமிழ்பள்ளியை திறக்க குஜராத் அரசு ஆணையிட வேண்டும்.

அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கான அனைத்து செலவுகளையும் ஏற்க தமிழக அரசு தயாராகவுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

TN Cm writes letter to Gujarat Cm

திருநங்கை என தெரியாமல் காதலித்த ஹீரோ..; ‘தாதா 87′ பட தெலுங்கு ரீமேக் அப்டேட்

திருநங்கை என தெரியாமல் காதலித்த ஹீரோ..; ‘தாதா 87′ பட தெலுங்கு ரீமேக் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhadha 87கமலின் மூத்த சகோதரர் சாருஹாசன் நடிப்பில் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ரிலீசான திரைப்படம் ‘தாதா 87.

இப்படத்தில் சாருஹாசன், ஜனகராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க ஆனந்த், பல்லவி இளம் காதலர்களாக நடித்திருந்தனர்.

ஆண் & பெண் காதலைப் போல திருநங்கையின் காதலை உணர்வுபூர்வமாக இயக்கியிருந்தார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

ரஜினியின் காலா படத்தோடு போட்டி போடும் தாதா 87 என்றெல்லாம் படத்திற்கு பலத்த புரோமாசன் கொடுத்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில், இப்படத்தினை தெலுங்கிலும் தான் இயக்கப் போவதாக இயக்குனர் விஜய்ஸ்ரீ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அவரின் ட்விட்டர் பதிவு இதோ…

விரைவில் #தாதா87 படத்தை தெலுங்கில் இயக்குகிறேன் திருநங்கை என்று தெரியாமல் காதலித்த நாயகனை ஏற்றுக் கொண்டாளா என்பதை தமிழில் ஆதரித்தது போல் தெலுங்கிலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கையுடன்…

விரைவில் திரையில்…

Director Vijay Sri G to remake Dhadha 87 in telugu

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா.; மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா.; மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் என மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.

சினிமாவிலிருந்து விலகி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை 2005ல் தொடங்கினார்.

கடந்த சில மாதங்களாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் (வயது 68) உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

DMDK Leader Vijayakanth tests Corona Positive

ஓடிடி-யில் படம் பார்க்க ரூ. 199 கட்டணமா..? தயாரிப்பாளர் தனஞ்செயன் எதிர்ப்பு

ஓடிடி-யில் படம் பார்க்க ரூ. 199 கட்டணமா..? தயாரிப்பாளர் தனஞ்செயன் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ka pae ranasingamவிஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க/பெ/ ரணசிங்கம் படம் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகப்பட்டுள்ளது.

ஜீ ப்ளக்ஸ் (zee plex) என்ற ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதனை அக்டோபர் 2ஆம் தேதி ஆன்லைனில் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளைப் போலவே காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை பார்க்க ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்… “ஓடிடி தளத்தில் எந்த ஒரு படத்தையும் நேரடியாகப் பார்க்க ரூ.199 கட்டணம் வசூலிப்பது மிக அதிகமானது. மாதம் சந்தா தொகை கட்டியதன் மூலம் இலவசமாக படம் பார்க்கவே நமது பார்வையாளர்கள் தயாராகியுள்ளனர்.

கட்டணம் நிர்ணயிக்கப்பட்டால் முக்கியமான படத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள். இந்த புதிய கட்டண முறை எப்படி வரவேற்பைப் பெறப்போகிறது என பார்க்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் பதிலளிக்கையில்…

தியேட்டரில் 4 பேர் சென்று படம் பார்க்க டிக்கெட் விலை, பார்க்கிங் கட்டணம், ஸ்நாக்ஸ் என அனைத்துக்கும் சேர்த்து ரூ.2000 செலவாவதை விட ரூ.199 கட்டணம் செலுத்துவது சரிதான் எனவும் தெரிவித்துள்ளார் தனஞ்செயன்.

#OTT premiere charges of Rs.199/- is too expensive for any film. Our audience are prepared for only free content through subscription. The moment payment comes, they will watch only if it’s an exciting & unavoidable film. Let’s see how this new pricing strategy works for a film

Kollywood Producer G Dhananjayan about OTT price rate for Vijay Sethupathi film

More Articles
Follows