வகுப்புக்கு 25 மாணவர்கள்.. வைட்டமின் மாத்திரைகள்..; 19ஆம் தேதி முதல் 10 & 12-ஆம் வகுப்புகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் ஊரடங்கால் 2020 கடந்தாண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

பின்னர் 5-6 மாதங்களுக்கு பிறகு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த ஜனவரி 6 முதல் 8 தேதி வரை பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க ஆதரவு அளித்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி ஜனவரி வரும் 19-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் அமர ஏற்பாடு செய்யவும், பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு விடுதிகளை திறக்கவும் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TN govt announced school reopening date

Overall Rating : Not available

Latest Post