JUST IN சினிமா தியேட்டர்களில் 50% சீட் அனுமதி..; ஸ்பெஷல் ஷோ போட்டுக்கலாம்.. தமிழக அரசின் தடாலடி சலுகை

JUST IN சினிமா தியேட்டர்களில் 50% சீட் அனுமதி..; ஸ்பெஷல் ஷோ போட்டுக்கலாம்.. தமிழக அரசின் தடாலடி சலுகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

சினிமா தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுடன் படங்கைளை பார்க்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.

திரையரங்கு என்பது மூடிய அரங்கு என்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் மத்திய அரசும் தமிழக அரசின் உத்தரவை கண்டித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது 100% அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

ஆனால் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்துள்ளது.

பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் & சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

TN government announced only 50% occupancy till next announcement

தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை உதயநிதி நிரூபித்துவிட்டார்..; டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை உதயநிதி நிரூபித்துவிட்டார்..; டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் தொடர்புபடுத்தி அண்மையில் பேசினார் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி.

எனவே பெண்கள் மத்தியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில்…

‘’பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்.

கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார்.

அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.

TTV Dhinakaran slams Udhayanidhi Stalin
ttv dinakaran

உங்க ஊருக்கு போக எங்கே பஸ் ஏறனும்..? பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள்… முழு விவரம் இதோ

உங்க ஊருக்கு போக எங்கே பஸ் ஏறனும்..? பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள்… முழு விவரம் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pongal special bus 2021பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்…

‘இந்த ஆண்டு பொங்கல் பண்டிகயை முன்னிட்டு 11-ம் தேதியிலிருந்து 13-ம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சென்னையிலிருந்து 10,228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,993 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,221 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு… பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தினசரி இயங்கக் கூடிய 2,050 பேருந்துகளுடன் 3,393 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,270 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

*பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள்:*

*மாதவரம் புதிய பேருந்து நிலையம் – செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்

*கே.கே.நகர் பேருந்து நிலையம் – ஈ.சி.ஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

*தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் – திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ரூட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

*தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையம் –

திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி வழியாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ரூட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

*பூந்தமல்லி பேருந்து நிலையம்*

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தசி செல்லும் பேருந்துகள்

*கோயம்பேடு பேருந்து நிலையம்*

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத் தவிர இதர ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள்…

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், கோயம்புத்தூர், பெங்களூரு.

Pongal special buses 2021 complete details

D43 படத்தலைப்பு என்ன..? சூப்பர் அப்டேட் கொடுத்தார் நடிகர் தனுஷ்

D43 படத்தலைப்பு என்ன..? சூப்பர் அப்டேட் கொடுத்தார் நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’, கோலிவுட்டில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

மேலும் தாணு தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை யுவன்.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43வது படமாகும் என்பதால் தற்காலிகமாக D43 என்று அழைக்கின்றனர்.

இதில் நாயகியாக ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்த நிலையில் மற்றொரு நாயகியாக ஸ்மிருதி வெங்கட் இணைந்துள்ளதை படக்குழுவினர் அறிவித்தனர்.

தடம், மூக்குத்தி அம்மன் படங்களில் ஸ்மிருதி நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தனுஷ்.

அதில்…

As I type #D43 we just finalised the title .. title announcement soon. #D43 shoot starts from today .. om namashivaaya https://t.co/CKY9FFMfXg

விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Dhanush on D43 movie title

அரசியல் கட்சி இல்லை…; ரஜினி முடிவுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி

அரசியல் கட்சி இல்லை…; ரஜினி முடிவுக்கு நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi rajinikanthலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இவ்வாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி தமிழ், ஹிந்தி & தெலுங்கு மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த நிலையில் ஒரு பிரபல பத்திரிகைக்கு இப்படம் பற்றி விஜய்சேதுபதி பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அரசியல் கட்சி இல்லை என ரஜினி கூறியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டு்ளது

அதற்கு விஜய்சேதுபதி பதிலளிக்கும் போது.. “அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வச்சிட்டார் ரஜினி.

அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். அதில் கருத்து சொல்ல எனக்கு உரிமை இல்லை.

ஆனால் ரொம்ப நாளா அவர் வருவாருன்னு எதிர்ப்பார்த்தோம். சினிமாவிலும் விழாக்களிலும் அந்த எதிர்பார்ப்புக்கு பதில் சொல்லிட்டு இருந்தார்.

அதுக்கெல்லாம் இப்போ முற்றுப்புள்ளி வச்சிட்டார். அதுக்கு என் நன்றி.”

இவ்வாறு விஜய்சேதுபதி பேசியுள்ளார்.

Vijay Sethupathi thanked Rajinikanth for his political decision

காதலர் தினம் ஸ்பெஷல்..; சமந்தாவின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ்

காதலர் தினம் ஸ்பெஷல்..; சமந்தாவின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samanthaகடந்தாண்டில் அமேசான் பிரைமில் வெளியான ’த ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் இந்தியாவில் அனைவரது கவனத்தையும் பெற்றது.

இப்போது, தி ஃபேமிலி மேன் இரண்டாவது சீசனும் உருவாகி வருகிறது.

ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி.கே இயக்கியுள்ளனர்.

ஃபேமிலி மேன் சீசன் 2 தொடர் மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார் நடிகை சமந்தா.

இது தான் அவர் நடிக்கும் முதல் வெப்சீரிஸ்.

இதில் சமந்தா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த தொடரில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, ஷரத் கெல்கர் மற்றும் ஸ்ரேயா தன்வந்தரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள் போன்ற தமிழ் நடிகர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த ஃபேமிலி மேன் 2 அமேசான் பிரைம் வீடியோவில் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

Samantha in Family man 2 from Feb 12

More Articles
Follows