திருச்சி ,திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து..? சத்தியபிரத சாகு விளக்கம்

sathyaprabha sahoo (1)நாளை ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

சானிடைசர் போட்டு கை கழுவி மாஸ்க் போட்டு வலது கைக்கு மட்டும் க்ளவுஸ் போட்டு வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளை காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு முடிவடைகிறது.

எனவே இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையில் தேர்தல் செலவின பொறுப்பாளர்கள் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் அந்த தகவலில் உண்மையில்லை எனவும் திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடத்துவற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

பதற்றமான மிகவும் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் காலை 7 மணியிலிருந்து 6 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் (ஒரு மணி நேரம்) வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குசாவடிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

TN Election Commission head clarifies on canceling election in 7 consituencies

Overall Rating : Not available

Latest Post