தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அக்டோபர் 28ஆம் தேதி இரவு 9 மணியளவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
இது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினிகாந்த் நலமுடன் வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ரஜினி ஓரிரு நாட்களில் குணமுடன் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு வெளியிட்டது.
அதில், `நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு தற்போது சரி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார். சிகிச்சை முடிந்து இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார்.’ எனத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பிரபல மருத்துவர் ஒருவரும் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…
“இதயத்திலிருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் கழுத்துப்பகுதி வழியாக செல்லும்.
அந்த குழாய்யில் அடைப்பு ஏற்பட்டுள்ளது- எனவே லேசான மயக்கமோ, நினைவு தப்பிப் போவதற்கோ வாய்ப்புகள் உள்ளது.
எனவே பாதிப்பு வராமல் தடுக்கவும் சீரான ரத்தம் ஒட்டம் நடக்கவும் Carotid Artery revascularization முறையில் சரிசெய்துள்ளனர்.
ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட 2 காரணங்கள் உண்டு. ஒன்று கொலஸ்ட்ரால். மற்றொன்று ரத்தக்குழாய் சுருங்குதல்.
எனவே அப்போது அடைப்பை சரிசெய்து ஸ்டண்ட் வைத்து ரத்த ஓட்டத்தை சரிசெய்யலாம். எனவே அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்.” என பிரபல மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று ரஜினியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.
இத்துடன் ரஜினிகாந்துக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்து சென்றார்.