இந்தியா சீனா மோதல்: பழனி வீரமரணம்; குடும்பத்தாருக்கு முதல்வர் 20 லட்சம் நிதியுதவி

இந்தியா சீனா மோதல்: பழனி வீரமரணம்; குடும்பத்தாருக்கு முதல்வர் 20 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN CM hails Armys sacrifice in Ladakh grants Rs 20 lakh to kin of Jawan இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்த மோதல் தொடர்கிறது.

மோதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு படை வீரர்களும் வீர மரணம் அடைந்தனர்.

உயிரிழந்த அந்த 2 படை வீரர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்பது தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலால் லடாக்கில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீடில், “லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தாக்கியதில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த

தமிழக வீரர் பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!” என பதிவிட்டுள்ளார்.

நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்காக ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் ராணுவ வீரர் பழனி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என ஆணை பிறப்பித்துள்ளார்.

வீர மரணம் அடைந்த பழனிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

”லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்!

22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி, தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்.

TN CM hails Armys sacrifice in Ladakh grants Rs 20 lakh to kin of Jawan

E PASS வச்சிருந்தாலும் NO ENTRY.; MASK இல்லனா DOUBLE FINE.. முதல்வர் அதிரடி

E PASS வச்சிருந்தாலும் NO ENTRY.; MASK இல்லனா DOUBLE FINE.. முதல்வர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Puducherry CM Narayanasamy says even E Pass persons not allowed in stateகொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகிறது. கிட்டதட்ட இந்த போராட்டம் 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு தொடர் நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் இரண்டு கட்டங்களாக இன்றும், நாளையும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, முதல் நாளான இன்று 21 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பிற நாடுகளை ஒப்பிடும்போது கொரோனாவால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இதேபோன்று கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் சிகிச்சைக்கு பின் குணமடைவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 50 சதவீதத்துக்கு மேலாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் என்றார்.

பிரதமருடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளார்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி…

பிரதமருடன் பேச இன்று எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

ஆனால் ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியை வழங்க பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். மாநில அரசு வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

புதுச்சேரி மாநில அரசுக்கு பிரதமர் உதவி செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது

“ஈ- பாஸ் இருந்தாலும் சென்னை – கடலூர் – விழுப்புரத்தில் இருந்து வருபவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டோம்.

கொரோனா நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற புதுச்சேரிய முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க மாட்டோம். அப்படி வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்ப்படுவார்கள்.

வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் தான் புதுச்சேரியில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதனால் அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இன்று நடந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து மருத்துவ உதவிக்கு தவிர வேறு யார் வந்தாலும் சரி ஈ பாஸ் கொண்டு வந்தாலும் புதுச்சேரிக்குள் விடமாட்டோம்.

தமிழகத்துடனான புதுச்சேரி எல்லைகள் நாளை முதல் மூடப்படும். மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்படும்.

அதேபோல், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வரும்போது நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால்தான் புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.

நாளை முதல் முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் இரட்டிப்பாக விதிக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அபாரதம் அதிகப்படுத்தப்படும்” என தெரிவித்தார் நாராயணசாமி.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி மாநில காரைக்கால் நிரவி பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Puducherry CM Narayanasamy says even E Pass persons not allowed in state

உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்…; பழனியின் வீரமரணத்துக்கு கமல் இரங்கல்

உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள்…; பழனியின் வீரமரணத்துக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal salutes Indian soldier Pazhani killed in Chinese attackஇந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வீர மரணமடைந்த வீரர்களில் ஒருவர் பழனி என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி வயது 40. இவர் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

அவருக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர்.

அவரது உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பழனியின் வீரமரணத்துக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்.. “எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம்.

அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Kamal salutes Indian soldier Pazhani killed in Chinese attack

ஊரடங்கால் பாதிக்கப்படும் 4 மாவட்ட மக்களுக்கு வீட்டுக்கே வரும் ரூ 1000 நிவாரணம்

ஊரடங்கால் பாதிக்கப்படும் 4 மாவட்ட மக்களுக்கு வீட்டுக்கே வரும் ரூ 1000 நிவாரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN 4 districts shut down Rs 1000 relief fund for Ration cardகொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.

இதனையடுத்து இந்த வைரஸ் பரவலைத் தடுக்க செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அதாவது வரும் ஜீன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அந்த 4 மாவட்டங்களிலும் பொதுமுடக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதகவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடை அட்டைதாரர்களின் வீடு தேடி வந்து 22 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாக என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

TN 4 districts shut down Rs 1000 relief fund for Ration card

கமல் ரஜினி அஜித் படத்தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி

கமல் ரஜினி அஜித் படத்தயாரிப்பாளருக்கு கிடைத்த புதிய பதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathya Jyothi Thyagarajan is the new Chairman of CII Media and Entertainment Southகமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் படங்களைத் தயாரித்தவர் சத்ய ஜோதிஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.

அஜித் நடித்த விஸ்வாசம், தனுஷ் நடித்த தொடரி உள்ளிட்ட படங்களை அண்மையில் தயாரித்திருந்தனர்.

இந்த நிறுவனம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் தியாகராஜன்.

விரைவில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43-வது படத்தையும் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

டிவி தொடர்களையும் தயாரித்துள்ள டி.ஜி.தியாகராஜன் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக தேர்வாகியுள்ளார்.

முன்னதாக இவர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராகவும் இருந்துள்ளார்.

இதுகுறித்து டி.ஜி.தியாகராஜன் கூறுகையில்…

திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில் முக்கியமான பதவி கிடைத்துள்ளது.

சவாலான பொறுப்பை சரியாக செய்து முடிப்பேன். என்னைத் தேர்வு செய்து இந்த பதவியை அளித்த இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.

Sathya Jyothi Thyagarajan is the new Chairman of CII Media and Entertainment South

ஈரம் 2 படத்தை இயக்க அறிவழகன் ஆர்வம்.; ஷங்கர் ஓகே சொல்வாரா?

ஈரம் 2 படத்தை இயக்க அறிவழகன் ஆர்வம்.; ஷங்கர் ஓகே சொல்வாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Eeram 2 happen Arivazhagan waiting for Shankars OK Statement ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த ஆர்வம் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.

டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பயமுறுத்திய படம் ஈரம். இந்த படத்தை இயக்கியிருந்தார் அறிவழகன்.

பெரும்பாலும் பேய் படங்கள் என்றால் அதில் மனிதர்களே பேய்களாக இருப்பார்கள். ஆனால் தண்ணீரை மட்டும் வைத்துக் கொண்டு மனிதர்களை பழிவாங்குவதை வித்தியாமாக செய்திருந்தார் இயக்குனர் அறிவழகன்.

இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் நடித்து இருந்தனர்.

தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

பெரும்பாலும் 2ஆம் பாக படங்கள் தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே தயாரிப்பாளர் ஷங்கர் என்ன சொல்லப்போகிறார்? என்பதை பார்ப்போம்.

தற்போது சுந்தர் சியின் அரண்மனை படத்தின் 3ம் பாகம். விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களின் 2ம் பாகத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர்.

Will Eeram 2 happen Arivazhagan waiting for Shankars OK Statement

More Articles
Follows