தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் தவசாயி அம்மாள், சேலம் மருத்துவமனை,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக சேலம் தனியார் (லண்டன் ஆர்த்தோ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 13 நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்று இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு தவசாயி அம்மாளின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோவை ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
TN Chief Minister Edappadi Palanisamy mother passed away