தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாஜக-வின் கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இன்று காலை இணையத்தளங்களில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராகவன்.
இது தொடர்பாக, இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்.
நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன்.
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன்.
நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!”.
இவ்வாறு கே.டி.ராகவன் பதிவிட்டுள்ளார்.
மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.
பாஜக வினர் மீது இதுபோல பல குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில்…
“பாஜகவினர் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும்.
“ராகவன் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
TN BJP leader KT Raghavan quits after YouTuber accuses him of sexual harassment