தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓவியர், நடிகர், மேடை பேச்சாளர் என் பன்முகம் கொண்டவர் சிவகுமார்.
அதே சமயம் சிவகுமாரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் சில நேரம் சர்ச்சையை கிளப்பும்.
அனுமதியில்லாமல் சிவகுமாரை செல்ஃபி எடுத்த ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டது சர்ச்சையாகவே பின்னர் மன்னிப்பு கேட்டு புதிய செல்போனை வாங்கி கொடுத்தார்.
அதன்பின்னரும் ஒருமுறை செல்போனை தட்டிவிட்டார்.
இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய பேச்சு ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்…
கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழைகள் திருப்பதி கோயிலுக்கு போனால் 4 நாட்கள் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டும்.
ஆனால் கோடீஸ்வரன் தண்ணியடித்துவிட்டு கொஞ்சும் குமரியுடன் விடிய விடிய இருந்துவிட்டு குளிக்காமல் கோயிலுக்கு போனால் கூட கும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது.
இதை சும்மா சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன் என பேசியிருந்தார்.
தற்போது இந்த பேச்சுதான் அவர் மீது வழக்கு பதிய காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது.
தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tirupati Devasthanam filed complaint against Actor Sivakumar