மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரீ கொடுக்கும் ‘கருவாப்பையா’ பாடல் புகழ் கார்த்திகா

karthika (2)‘தூத்துக்குடி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா.

அப்படத்தில் இடம்பெற்ற ‘கருவாப்பையா’ என்ற பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

சில வருடங்கள் திரையுலகை விட்டு ஒதுங்கிய கார்த்திகா தற்போது மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறாராம்.

இதுபற்றி கார்த்திகா கூறியதாவது…

“தமிழில் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான், திடீரென தங்கையின் படிப்புக்காக மும்பை சென்று தங்க வேண்டிய சூழல் உருவானது.

மீண்டும் சென்னை வந்தபோது…இத்தனை நாளாக எங்கே சென்றீர்கள்..? நீங்கள் ஏன் மீண்டும் நடிக்கக் கூடாது? என தவறாமல் கேட்டனர்.

உடன் இருந்த உறவினர்கள் கூட, உன்னை எவ்வளவு பேர் மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதற்காகவாவது மீண்டும் நீ நடிக்கவேண்டும் என்றனர்

ரசிகர்களின் அன்பை இவ்வளவு நாள் நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் என புரிந்தது.

அப்போது தெலுங்கு, தமிழ் என இருமொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.

இதுதான் சரியான தருணம் என அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இன்னும் 2 தெலுங்கு படங்களிலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது.

அதேபோல இங்கே தமிழிலும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இனி வெள்ளித்திரையில் என்னை அடிக்கடி நீங்கள் பார்க்கலாம்” என்றார் கார்த்திகா.

Thoothukudi fame Karthika re entry in films

Overall Rating : Not available

Latest Post