நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…; மீண்டும் இயக்கத்தில் ‘தினந்தோறும்’ நாகராஜ்

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…; மீண்டும் இயக்கத்தில் ‘தினந்தோறும்’ நாகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாற்றம் ஒன்றே மாறாதது’.. என்பது எத்தனை சத்தியமானது என்பதற்கு இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜின் வாழ்க்கையும் உதாரணம்.

1998 ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் ‘தினந்தோறும்’.

முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம் வெளிவந்தபோது பத்திரிகை உலகம் கொண்டாடி தீர்த்தது.

இந்தபடம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அன்றை முன்னணி தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் நாகராஜுடன் இணைந்து பணியாற்ற தூதனுப்பினர்.

இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘வானம் நீதானா அந்த நிலவும் நீதானா’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது.

தெலுங்கில் ’மனசிச்சி சூடு’ பெயரில் படம் ரீமேக்கானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து நாகராஜின் பெயருடன் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார்.

என்னசெய்வது காலத்தின் வெள்ளத்தில் நாகராஜ் திசை மாற, தொடர்ந்து படங்கள் இயக்க முடியாமல் போனது.

பிறகு கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ் இயக்கத்தில் 2013 ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படம் வெளியானது.

அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா பட விவாதங்கள் பலவற்றில் பங்கேற்ற நாகராஜ், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பதுபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார்.

Q சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார். R இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.

பெயரிடப்படாத இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் C. சத்யா இசையமைக்கிறார்.

காடன், இடிமுழக்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடனம் – சாண்டி
ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன்.

OTT வெளியீட்டிற்கு முன்னதாக, ‘பிரம்மாஸ்திரா’ வில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த மௌனி ராய்

OTT வெளியீட்டிற்கு முன்னதாக, ‘பிரம்மாஸ்திரா’ வில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த மௌனி ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிரம்மாஸ்திரா’ டிஜிட்டல் வெளியீட்டிற்கு முன்னதாக, நடிகை மௌனி ராய் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி பேசினார்.

மேலும் ‘பிரம்மாஸ்திரா’வில் தான் பெற்ற அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பதாக பகிர்ந்து கொண்டார் மௌனி.

“பிரம்மாஸ்திரம் எப்போதுமே மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

இது போன்ற புராணக்கதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.

பிரம்மாஸ்திராவில் பணியாற்றிய நாட்களை நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக கருதுவேன் என்றார்.

விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..?

விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்பவர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி.தற்போது, நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் ஆண்டனி இயக்குனர் பாபு யோகேஸ்வரனுடன் இணைந்து உருவான படம் ‘தமிழரசன்’.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, சோனு சூட் மற்றும் சுரேஷ் கோபி முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெரிய திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொற்றுநோய் காரணமாக, இரண்டு வருடங்களாக ரிலீஸை தள்ளப்பட்டது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி படம் நவம்பர் 18ஆம் தேதி பெரிய திரைக்கு வெளியாகிறது.

தமிழரசன்

Vijay Antony’s ‘Tamilarasan’ release date is November 18

மிஸ் பண்ணாதீங்கோ.; தள்ளுபடி விலையில் ‘பேய காணோம்’ பட டிக்கெட்

மிஸ் பண்ணாதீங்கோ.; தள்ளுபடி விலையில் ‘பேய காணோம்’ பட டிக்கெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குளோபல் எண்டர்டெயிண்மெண்ட் தேனி. பாரத். டாக்டர்.R.சுருளிவேல் தயாரிப்பில் மீராமிதுன் நடித்து செல்வ அன்பரசன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பேய காணோம்’.

இத்திரைப்பட பணிகள் முடிவடைந்து சென்சார் ஆன நிலையில் பேய காணோம் திரைப்படத்தைப் பார்த்த Hi Creators நிறுவனம் இப்படத்தை வெளியிடுவதற்கான உரிமையை வாங்கியுள்ளார்கள்.

‘பேயகாணோம்’ படம் விரைவில் திரைக்கு வந்து மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் எனவும், நல்ல காமெடியான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இத்திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் முதல் நாள் டிக்கெட் கட்டணத்தில் இருந்து 60% தள்ளுபடியும் இரண்டாம் நாள் 40% தள்ளுபடியும் செய்து டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான பேச்சுவார்த்தை வினியோகஸ்தர்களிடமும் திரையரங்கு உரிமையாளர்களிடமும் Hi Creators நிறுவனத்தினர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது என் கொடி பறக்கும் நேரம் என்ற பாடலை செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி மற்றும் கெர்ஷோமும் சுடு காட்டுலதான் இருப்பேண்டி நடு சாமத்துல வருவேண்டி என்ற பாடலை வேல்முருகனும் பாடியுள்ளார்கள்.

இப்படத்தின் பாடல்கள் hi creators யூ டியூப் சேனலில் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழை மதிக்காத ‘வாரிசு’ விஜய்.; ‘துணிவு’ மூலம் கெத்தான அஜித்

தமிழை மதிக்காத ‘வாரிசு’ விஜய்.; ‘துணிவு’ மூலம் கெத்தான அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் விஜய்க்கும் அஜித்துக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரங்களாக கடந்த 20 வருடங்களாக திகழ்கின்றனர்.

விஜய்யின் ‘வாரிசு’ படமும் அஜித்தின் ‘துணிவு’ படமும் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இங்கிலீஷ் மற்றும் தமிழில் வெளிவந்தன.

ஆனால் ‘வாரிசு’ படத்தின் பல போஸ்டர்கள் வெளியான நிலையில் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி உள்ளது.

இதுவரை ஒரு போஸ்டர் கூட தமிழ் தலைப்பில் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கும் இதே நிலைதான்.

‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் பீஸ்ட் தலைப்பை தமிழில் வெளியிட ஆரம்பித்தனர்.

எடுப்பது தமிழ் படம். ஆனால் தமிழ் மொழியை விஜய் மறப்பது ஏனோ?

இதனால் சமீப காலமாக விஜய் தமிழை மதிக்கவில்லையா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

துணிவு

Vijay and Varisu team never mind Tamil language Is it true?

‘வாரிசு’ பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ..; முழுவீச்சில் விஜய் ரசிகர்கள்

‘வாரிசு’ பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ..; முழுவீச்சில் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் மூலம் முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

இது ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகி வருகிறது..

இந்த நிலையில் இன்று 10:45AM-க்கு அறிவிப்பு என ட்விட்டரில் பதிவிட்டிருந்தது வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்.

அதன்படி தற்போது ‘வாரிசு’ அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.

இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உடனடியாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

More Articles
Follows