சூரியனுக்கு பயப்படுபவரா? மஞ்ச கரு சாப்பிடாதவரா? அப்படின்னா உங்க வில்லனே ’கொரோனா’-தான்

சூரியனுக்கு பயப்படுபவரா? மஞ்ச கரு சாப்பிடாதவரா? அப்படின்னா உங்க வில்லனே ’கொரோனா’-தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

The role of Vitamin D in the prevention of Coronaஉலகையை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரபல மருத்துவமனை ஒன்று சென்னையில் 1500 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் 55 சதவீத பேரின் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக சென்னை பெண்கள் தங்கள் மீது சூரிய ஒளி பட்டுவிடக்கூடாது என்று உடல் முழுவதும் துணியால் மூடி கொண்டே செல்வர்.

அதுபோல் சென்னையில் பலரும் கோடையில் ஏசி ரூம்களிலேயே இருப்பார்கள். இவர்களுக்கும வைட்டமின் டி குறைபாடு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 12 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை தங்கள் உடலில் 30 நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி நின்றாலே போதும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்.

அப்போது நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி நிறைந்த வைட்டமின் டி கிடைத்துவிடும் என்கின்றனர்.

அதுபோல் உடல் எடை அதிகரித்துவிடும் என ஒதுக்கும் முட்டையின் மஞ்சள் கருவிலும் வைட்டமின் டி அதிகம் உள்ளதாம்.

சீஸ் பாலாடைகட்டி, கிழங்கா மீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் அதுவும் நல்லது எனவும் தெரிவிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

The role of Vitamin D in the prevention of Corona

மருந்து கடையில் மது.?; நெட்டிசனுக்கு சூர்யா-கார்த்தி பட நடிகை பதிலடி

மருந்து கடையில் மது.?; நெட்டிசனுக்கு சூர்யா-கார்த்தி பட நடிகை பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul Preet Singh clarifies her recent viral video சூர்யாவுடன் என்ஜிகே, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ரகுல் பிரத்தி சிங்.

இவரைப் பற்றிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

அதாவது… இவர் முகத்தில் மாஸ்க் அணிந்த படி கையில் சில பாட்டில்களுடன் ரோட்டில் நடந்து செல்வது போல ஒரு காட்சியை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

மேலும் அதில் ரகுல் பிரித்தி சிங் மது வாங்கி செல்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரகுல் பிரித்தி சிங்.

அதாவது.. மருந்து கடையில் சரக்கு கிடைக்குமா? அது எனக்கு தெரியாதே என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

எந்த உண்மையும் தெரியாமல் அடுத்தவர்களை கிண்டலடிக்கும் நபர்களுக்கு இது போன்ற பதிலடி தேவையான ஒன்றுதான்.

Rakul Preet Singh clarifies her recent viral video

டாஸ்மாக் பர்ஸ்ட் டே கலெக்சன்.: நியூ இயர் வசூலை விட 50 கோடி அதிகம்

டாஸ்மாக் பர்ஸ்ட் டே கலெக்சன்.: நியூ இயர் வசூலை விட 50 கோடி அதிகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tasmac first day collection crossed Rs 170 crores கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17 வரை இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் உள்ள நிலையில் 45 நாட்களுக்கு பின்னர் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும் 5300 கடைகளில் 3850 டாஸ்மாக் கடைகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து குடிகாரர்கள் அதிகளவில் திரண்டனர்.

அவர்களுக்கு குடிகார்ர்கள் என்று சொன்னால் பிடிக்காது என்பதால் மதுபிரியர்கள் என்றே சொல்வோம்.

கொளுத்தும் அக்னி வெயிலை பொருட்படுத்தாமல், வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர் மதுபிரியர்கள்.
நேற்று மட்டும் 170 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுள்ளன.

சென்னையில் உள்ள கடைகள் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டிருந்தால் ரூ. 200 கோடியை கடந்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

வழக்கமான மற்ற நாட்களில் நாளொன்றுக்கு 85 முதல் 90 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகும்.

மேலும், தீபாவளி, நியூ இயர் போன்ற பண்டிகை நாட்களில் ரூ. 110 முதல் 120 கோடி வரை மது விற்பனையாகும்.
தற்போது இந்த புதிய வசூல் புதிய உச்சம் தொட்டுள்ளது.

நிறைய கடைகளில் மாலை 5 மணிக்கு முன்பே சரக்குகள் தீர்ந்துவிட்டன.

இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு உயர்த்தியதால் மதுபாட்டில் சில்லறை விலை 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இந்த புதிய விலை உயர்வால் அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் மூலம் கடந்த நிதியாண்டில் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை தமிழக அரசு ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மட்டும் மது பிரியர்களால் பல இடங்களில் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

தந்தை மதுகுடித்து விட்டு வந்ததால் ஒரு பெண் தீக்குளித்து இறந்துள்ளார்.

நண்பர்கள் சண்டை, அண்ணன் தம்பி அரிவாள் வெட்டு என பல இடங்களில் பல புகார்கள் வந்துள்ளன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Tasmac first day collection crossed Rs 170 crores

ஆண்டவர்களும் ஆள்பவர்களும்‌ வசூல்‌ கொள்ளை‌ பங்குதாரர்கள்‌.. – கமல்

ஆண்டவர்களும் ஆள்பவர்களும்‌ வசூல்‌ கொள்ளை‌ பங்குதாரர்கள்‌.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM Leader Kamal slams TN Govt for opening Tasmac shopsமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தினம் தினம் அரசியல் கருத்துக்களை தன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இன்று மே 7ல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது குறித்து நீண்ட ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்..

ஒரு வைரஸ்‌ கிருமிக்கு இருக்கும்‌ உயிர்‌ வாழும்‌ ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும்‌ ஒரு அரசு நமக்கு வாய்த்தது.

ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம்‌ நம்‌ வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன்‌ விளைவு தான்‌.

பஞ்சத்தை நெருங்கிக்‌ கொண்டிருக்கும்‌ தமிழ்நாட்டில்‌, மதுக்கடைகளை திறந்து விட்டால்‌ மக்களின்‌ கவனம்‌ திரும்பிவிடும்‌ என நம்பும்‌ அரசுக்கு பெயர்‌ அம்மாவின்‌ அரசா?. தாயுள்ளம்‌ கொண்டோர்‌ அனைவருக்கும்‌ அவமானமல்லவா அது.

இலவசமாக எத்தனை தாலிகள்‌ தந்தாலும்‌, வேலையில்லாத குடிகாரன்‌ வீட்டுத்‌ தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்கு போகும்‌, பின்‌ அரசு நடத்தும்‌ சாராய கடைகள்‌ மூலம்‌ அரசுக்கே வந்து சேரும்‌ என்று தெரியும்‌.

தமிழ்‌ நாட்டை ஆள்பவர்களுக்கு ஓட்டுக்கு இத்தனை ஆயிரம்‌, விலையில்லா பொருள்‌ இத்தனை ஆயிரம்‌ என 5 வருடத்திற்கு ஏழைத்‌ தமிழர்களை குத்தகைக்கு எடுத்த அரசு, இன்று ஆட்சி கவிழும்‌ தருவாயில்‌ வசூல்‌ வேட்டையில்‌ இறங்கி இருக்கிறது.

ஆண்டவர்களும்‌, ஆள்பவர்களும்‌ இந்த வசூல்‌ கொள்ளையில்‌ பங்குதாரர்கள்‌ என்பது ஊரறிந்த ரகசியம்‌.

இந்த அரசு செய்யும்‌ தொடர்‌ அபத்தங்களை நிறுத்தாவிட்டால்‌, சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில்‌, அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்‌.

அப்படி எதுவும்‌ நடந்தால்‌, தமிழகத்தின்‌ தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும்‌ தொடரும்‌ இந்த ஊழல்‌ சங்கம்‌, கொரோனாவை விட அதிக தமிழ்‌ மக்களைக்‌ கொல்லும்‌.

கிராமங்களெங்கும்‌ டாஸ்மாக்‌ வாசலில்‌ திருவிழாக்கூட்டம்‌. கொள்ளை நோய்‌ ஒரு பக்கம்‌, அரசுகளின்‌ தொடர்‌ கொள்ளை இன்னொரு பக்கம்‌. தாங்குமா தமிழகம்‌ ?

வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, இந்த கொள்ளையரையும்‌ வெளியேற்றும்‌ காலம்‌ நெருங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

அரசுக்கு ஒரு சிறுகுறிப்பு:

இன்றும்‌ தாமதமாகி விடவில்லை. நேர்மை குரல்களுக்கு செவி சாய்த்தால்‌, மக்களுக்கு இருக்கும்‌ நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால்‌, நடக்கும்‌ இந்த ஆட்சியின்‌ முடிவு, அசிங்கமானதாக இல்லாமல்‌ தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது.

உண்மையில்‌ இது யாருக்கான அரசோ? இது வரை கிடைத்த தடையங்களை பார்க்கையில்‌ மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால்‌ அதை தொட்டுச்‌ சொல்லுங்கள்‌. இல்லையேல்‌ மேலிடத்தில்‌ கேட்டுச்‌ சொல்லுங்கள்‌.

MNM Leader Kamal slams TN Govt for opening Tasmac shops

சூர்யா படத்தை இயக்கும் ஹரி 25% சம்பளத்தை குறைத்தார்.; ஏன்..?

சூர்யா படத்தை இயக்கும் ஹரி 25% சம்பளத்தை குறைத்தார்.; ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aruvaa director Hari reduces his salary by 25 percentசூர்யா நடிக்கவுள்ள அருவா படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் ஹரி.

இந்த படத்தில் ராஷி கண்ணா நாயகியாக நடிக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்பட ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதமே துவங்கயிருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் தள்ளி போய் உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கால் சினிமா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

நடிகர் விஜய் ஆண்டனி தான் அடுத்து நடிக்கும் மூன்று படங்களில் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தார்.

அதாவது அவரது சம்பளத்தில் அவர் சுமார் 1 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ஹரி தான் அடுத்து இயக்கும் அருவா படத்திற்காக பேசப்பட்டுள்ள சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன் என அறிவித்துள்ளார்.

இது பற்றி ஹரி வெளியிட்டுள்ளார் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..

“வணக்கம்… இந்த கொரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்தஹ் பாதிப்பு அடைந்துள்ளது , நம்முடைய தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும்.

இந்த சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்ததாக இயக்கப்போகும் “அருவா” திரைப்படத்திற்கு என்னுடைய சம்பத்தில் இருபத்து ஐந்து சதவிகிதம் (25%) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.

Aruvaa director Hari reduces his salary by 25 percent

‘மாஸ்டர்’ டைரக்டருக்கு நோ சொன்ன ரஜினி; ஓகே சொன்ன கமல்.?

‘மாஸ்டர்’ டைரக்டருக்கு நோ சொன்ன ரஜினி; ஓகே சொன்ன கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth walks out Lokesh will direct Kamalhassanரஜினி கமல் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் கிட்டதட்ட 35 வருடங்களாக இவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

பல இயக்குனர்கள் முயற்சித்தும் இது நடைபெறவில்லை. ஆனால் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜீக்கு இந்த வாய்ப்பு அமைந்தது.

கமலஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்க அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பார் எனவும் அவ்வப்போது சொல்லப்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால் ரஜினி கமல் இணையும் பட வேலைகளை லோகேஷ் செய்து வந்துள்ளார்.

கதையை முடித்து விட்டு அதை ரஜினியிடம் சொன்னாராம்.

ஆனால் கமர்ஷியல் விஷயங்கள் குறைவாக உள்ளதால் அந்த கதையை ரஜினி நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கன்ப்யூஸ் ஆன லோகேஷ் கதையை கமலிடம் சொல்ல அவரே இந்த கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டாராம்.

தான் கமலின் மிகப்பெரிய ரசிகர் என்றும் அவரின் விருமாண்டி மற்றும் நம்மவர் ஆகிய படங்களின் கதையை முன்மாதிரியாக வைத்துதான் கைதி மற்றும் மாஸ்டர் படங்களை உருவாக்கியதாக சொல்லியிருந்தார்.

எனவே தற்போது தன் ஆஸ்தான நாயகன் கமலை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் மாஸ்டர் லோகேஷ்.

Rajinikanth walks out Lokesh will direct Kamalhassan

More Articles
Follows