தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்றுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த பாடலை பாடிய ரஞ்சித் தமிழ், தெலுங்கு, மலையாளம் என சுமார் 170க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தற்போது விரைவில் ஹாரர் திரில்லராக வெளியாக உள்ள படம் ஒன்றின் பைலட் படமாக உருவாகியுள்ள படத்தில் ‘வெண்பனி இரவில்’ என்கிற பாடலை பாடியுள்ளார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தேவ் என்பவர் இயக்கியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி நடித்த காளி படத்திற்கு பாடல் எழுதிய தமிழணங்கு தான் இந்தப்பாடலை எழுதியுள்ளார்.
இந்த பாடலுக்கு ஜுபின் இசை அமைத்துள்ளார். இவர் பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட ஐந்து படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
குறிப்பாக பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் உன்னத்தான் நினைக்கையிலே என்கிற பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
Thandalkaran Song fame Ranjiths next song is Venpani Iravil