‘மாஸ்டர்’ சூட்டிங்ல வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன்.. – விஜய்

‘மாஸ்டர்’ சூட்டிங்ல வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன்.. – விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijays upset and stress in Master Shooting மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதாவது…

மாநகரம் படம் மூலம் நம்மள திரும்பி பாக்க வச்சாரு டைரக்டர் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தை திரும்பி திரும்பி பாக்க வச்சாரு.

இப்போ மாஸ்டர்ல என்ன பண்ண போறாருன்னு தெரிஞ்சிக்க நானும் காத்திருக்கேன்.

லோகேஷ் கையில சீன் பேப்பர் இருக்காது. யார் கிட்டயும் இருக்காது. பர்ஸ்ட் 2 3 நாட்கள் வெறியாகி மன உளைச்சல் ஆகிட்டேன். நான் கோவப்பட்டு இவரோட இன்னும் 4 மாசம் என்ன பண்ண போறாம்னு நெனச்சேன்.

இவ்வாறு பேசினார் விஜய்.

Thalapathy Vijays upset and stress in Master Shooting

நண்பர் அஜித் மாதிரி வந்துட்டேன்; மாஸ்டர் இசை விழாவில் விஜய் பேச்சு

நண்பர் அஜித் மாதிரி வந்துட்டேன்; மாஸ்டர் இசை விழாவில் விஜய் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay talks about his friend Ajith at Master Audio launchமாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது…

என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே…

எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும்.

இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண்காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க.

விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு.

ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு.

உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு.

மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அழகான முகம். அவர் உடனே தமிழ் கத்துகிட்டாரு.

நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்றார் (அப்போது கரவொலி அடங்க வெகு நேரம் ஆனது.

என பேசினார் விஜய்.

Vijay talks about his friend Ajith at Master Audio launch

‘மாஸ்டர்’ பட 3 போஸ்டர்ல 3 விஷயம் இருக்கு… – லோகேஷ் கனகராஜ்

‘மாஸ்டர்’ பட 3 போஸ்டர்ல 3 விஷயம் இருக்கு… – லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master posters has story lines says Lokesh Kanagaraj விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இப்பட இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது…

எனக்கு நடுக்கமாக உள்ளது. என் படத்தின் முதல் இசை வெளியீடு இதுதான்.

இந்த பட வாய்ப்பு ஜெகதீஷ் அவர்களால் கிடைத்தது. இப்படத்தின் 3 போஸ்டர்கள் வெளியானது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹீரோ அறிமுகம்.

இதன் 2வது போஸ்டர்.. இடைவேளையும் குறிக்கும்.

இதன் 3வது போஸ்டர்… க்ளைமாக்ஸை குறிக்கும்.

இப்படத்தின் ஸ்கிரிப்டை எழுதும்போதே விஜய்சேதுபதி வேண்டும் என முடிவெடுத்துவிட்டோம்.

என் யூனிட் ஆட்களுக்கே இப்பட தலைப்பு மாஸ்டர் என தெரியாது. அவர்கள் வாத்தி என நினைத்திருந்தனர்.

இப்படம் விஜய்யை வேறு பரிமாணத்தில் காட்டும்.

என பேசினார் லோகேஷ்.

Master posters has story lines says Lokesh Kanagaraj

நானே மாஸ்டர் ஹீரோ.; எங்க அப்பா தான் மாஸ்டர்..- விஜய்சேதுபதி

நானே மாஸ்டர் ஹீரோ.; எங்க அப்பா தான் மாஸ்டர்..- விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

i am master movie hero my father is master says Vijay Sethupathiவிஜய்யின் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பது எல்லாருக்கும் தெரியும். அவருடன் நடிப்பது ஒரு நல்ல அனுபவம்.

பட போஸ்டர்களில் அவர் பேர் பக்கத்துல என் பேரும் இருக்கட்டும் சொல்லியிருக்காரு.

ஒரு முறை நான் விஜய் சார் கிட்ட கேட்டேன். ஏன் சார்? நீங்க அவ்வளவு பேச மாட்டுறீங்க கேட்டேன். நான் பேசுவதை விட மற்றவர்கள் சொல்வதை கேட்க ஆசைப்படுகிறேன் என்றார். இதுபோல அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

மாஸ்டர் பட போட்டோ சூட்டிங்கில்தான் நான் முதன்முறையாக சந்தித்தோம். அப்போவே அவர் எனக்கு ஒரு நல்ல கம்பர்ட்டாக இருக்கும்மாறு நடந்துக் கொண்டார்.

அவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வைங்க. ரொம்ப அழகா வெட்கப்படுவாருன்னு சொன்னேன்.

இந்த படத்தோட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ என் ரசிகர்களுக்கு என்ட்ரி பாஸ் கிடைக்காம பண்ணிட்டாரு.

அவரே நிறைய எடுத்துக்கிட்டாரு. ஆனா அவரு நல்ல மனுசன். ஆனா சம்பளம்தான் சரியான டைமுக்கு தர மாட்டாரு.

ஆனா 96 படம் ரிலீசுக்கு உதவி செஞ்சாரு.

டைரக்டர் லோகேஷ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையே மாஸ் ஆக இருக்கும். அதையே ஒரு படமாக எடுக்கலாம்.

அவரு என்னைய டா போட்டு கூப்பிட சொன்னாரு. அதான் அப்படியே கூப்புறேன். நாங்க 2013ல் சந்தித்து கொண்டோம்.

இந்த மாஸ்டர் படத்துல நான்தான் ஹீரோ. எப்படின்னா நான் விஜய்க்கு வில்லன்னா அவருக்கு எனக்கு வில்லன். அப்படின்னா நான்தான் ஹீரோ.

இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.

எனக்கு எங்க அப்பாதான் மாஸ்டர். அவர அடிச்சிக்க ஆளே கிடையாது. நான் சரக்கு அடிச்சிட்டு அவர் போட்டோவ பாத்து திட்டுவேன்.

நான் நல்லா இருக்கும்போது அவரு பாக்கமா போய்ட்டாரு.

விஜய் நல்ல மனுசன். நான் மட்டும் சொல்லல.. எல்லாருமே சொல்றாங்க” என பேசினார் விஜய்சேதுபதி.

i am master movie hero my father is master says Vijay Sethupathi

படைகள் இருந்தாலும் தளபதி வேனும்ல.. ECRல ரெய்டு போகாதீங்க… – தீனா

படைகள் இருந்தாலும் தளபதி வேனும்ல.. ECRல ரெய்டு போகாதீங்க… – தீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay tv fame Dhina slams IT Raid at Actor Vijays homeவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இசை விழா நிகழ்ச்சியில் டிவி தொகுப்பாளர், கைதி பட நடிகர் தீனா பேசியதாவது…

ஒருத்தனுக்கு கீழ எவ்வளவுதான் படைகள் இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு தளபதி வேண்டும். உங்க கிட்ட பைக் இருந்தால் அடிக்கடி ஈசிஆர்.ல ரெய்டு போகாதீங்க என மறைமுகமாக விஜய் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறையினரை தாக்கி பேசினார் தீனா.

மேலும் என் அம்மா அப்பா நான் மேடை ஏற வேண்டும் என நினைத்தனர். இதை விட பெரிய மேடை எனக்கு என்ன கிடைத்து விட போகிறது? என பேசினார் தீனா.

Vijay tv fame Dhina slams IT Raid at Actor Vijays home

மாஸ்டர் தான் என் முதல் படம்.. இசை விழாவில் சாந்தனு கொடுத்த ஷாக்

மாஸ்டர் தான் என் முதல் படம்.. இசை விழாவில் சாந்தனு கொடுத்த ஷாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master my debut movie says Actor Shanthanu லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அருஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.

இதில் குட்டி கதை மற்றும் வாத்தி ரைடு பாடல்கள் எல்லா தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாத்தி கம்மிங் பாடல் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய், அவரின் அப்பா எஸ்ஏசி, அம்மா ஷோபா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் மேடையேறிய சாந்தனு பேசியதாவது…

நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்கிறேன். மாஸ்டர் தான் என் முதல் படம்.

திரையுலகில் 10 வருடங்களை கடந்து விட்டாலும் வெற்றியை விட நிறைய அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்து விட்டேன்.

என உருக்கமாக விஜய் ரசிகராக பேசினார் சாந்தனு.

Master my debut movie says Actor Shanthanu

More Articles
Follows