ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசளித்து உணவளித்த தளபதி விஜய்

ஆட்டோ டிரைவர்களுக்கு பரிசளித்து உணவளித்த தளபதி விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijays auto driver fans were treated with Lunch and giftஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு மே தினத்தனத்தை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் & மதிய உணவு வழங்கிய தளபதி விஜய் !

ஆண்டு தோறும் உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் அவர்கள் தொழிலாளர் தோழர்களுக்கு தனது சொந்த செலவில் விருந்தளித்து பரிசு பொருட்கள் தருவது வழக்கம் !

இவ்வாண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டமையால், இவ்வாண்டுக்கான விழா, இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பில் உள்ளதால், அவரது சார்பாக, தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் விழாவினை மாநில பொறுப்பாளர் புஸ்ஸி N ஆனந்த் EX MLA அவர்கள் தலைமையேற்று ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு பரிசுகள் மற்றும் மதிய உணவை வழங்கினார்.

Thalapathy Vijays auto driver fans were treated with Lunch and gift

‘அன்புள்ள அப்பா’ பட பாணியில் உருவான ‘ஆனந்த வீடு’

‘அன்புள்ள அப்பா’ பட பாணியில் உருவான ‘ஆனந்த வீடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anandha Veedu movie deals with Father and Daughters affection மூவி மேநிலா க்கர்ஸ் தயாரிப்பில் உருவாக்கியுள்ளது ஆனந்த வீடு திருவேங்கடம் குடும்பம் அமைதியான குடும்பம் மகன் மகளுடன் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த சூழ்நிலையில் சமூக விரோதிகளால் மகன் கொலை செய்யப்படுகிறான்.

அதோடு நில்லாமல் மகளையும் கொலை செய்யப்போவதாக மிரட்டுகின்றனர் பாசமான மகளை காக்கும் முயற்சியில் ஈடுபடும் போது திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன, பாசமான மகளை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகின்றாரா என்பதன் பின்னணியில் உருவாகி உள்ளது ஆனந்த வீடு.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நதியா நடித்து வெளிவந்த அன்புள்ள அப்பா படத்திற்கு பிறகு தந்தை மகள் பாசத்தை வலியுறுத்தும் படமாக ஆனந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது பாடல் காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டது, படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது மிக விரைவில் திரைக்கு வர உள்ளது,

கதை நாயகனாக சிவாயம். அறிமுக நாயகன் துர்கா பிரசாத். நாயகி ககனதீபிகா சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் முக்கிய வேடம். தம்பா பாண்டியன் வரதன் மற்றும் பலர் இசை கோபாலகிருஷ்ணன், பாடல்கள் ராஜ முனி, கதை வசனம் இயக்கம் சுகுமார்.

Anandha Veedu movie deals with Father and Daughters affection

மீண்டும் தெலுங்குங்கே செல்லும் ‘அயோக்யா’ விஷால்

மீண்டும் தெலுங்குங்கே செல்லும் ‘அயோக்யா’ விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான அயோக்யா படம் அண்மையில் வெளியானது.

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இது 2015ல் தெலுங்கில் வெளிவந்த ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். தெலுங்கில் ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தை க்ளைமாக்ஸை மாற்றி தமிழில் ரீமேக் செய்திருந்தனர். இது அனைவராலும் பாராட்டப்பட்டது.

விஷாலுக்கு ஏற்கெனவே தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளதால் தற்போது அயோக்யா படத்தை மீண்டும் தெலுங்குங்கே கொண்டு செல்கிறார்களாம்.

ஜுன் மாதத்தில் இதே பெயரில் தெலுங்கு ‘அயோக்யா’ வெளியாகவுள்ளது.

விஜய்யின் 63 படம் இத்தனை கோடிக்கு விற்பனையானதா..?

விஜய்யின் 63 படம் இத்தனை கோடிக்கு விற்பனையானதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)எஜிஎஸ், விஜய், அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் தளபதி 63.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜ்ய்யின் பிறந்தநாளில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இப்பட உரிமையை ஸ்கிரீன் சீன் என்று வினியோக நிறுவனம் சுமார் 60 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதே நிறுவனம் தான் ‘சண்டக்கோழி 2, தடம், அயோக்யா’ உள்ளிட்ட படங்களை அண்மையில் வெளியிட்டது.

தற்போது மே 31ஆம் தேதி ‘தேவி 2’ படத்தையும் வெளியிட உள்ளது.

மேலும் ஜெயம் ரவி நடிக்க உள்ள மூன்று படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தல 60 படத்திற்காக தீவிர பயிற்சியில் அஜித்

தல 60 படத்திற்காக தீவிர பயிற்சியில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை.

இப்படத்தை ஆகஸ்ட் 10-ந்தேதி திரையிட உள்ளனர்.

இந்த படத்தை தயாரிக்கும் போனிகபூரே அப்படத்தையும் தயாரிக்க, இதே இயக்குனர் இயக்கவுள்ளார்.

இப்படத்தை அதிரடி ஆக்சன் நிறைந்த கதையாக உருவாக்க உள்ளாராம்.

எனவே கதைக்கேற்ப தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அஜித்.

வருகிற ஆகஸ்ட் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

மிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்

மிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)இந்த நாட்களில், ‘டீசர்’ என்பது ஒரு படத்தின் பிரதான அடையாளமாக மாறி விட்டது. அதனால் அதை மிகச் சிறந்த முறையில் கொடுக்க கடின உழைப்பும், மிகப்பெரிய முயற்சிகளும் தேவைப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அளவில் ஒரு படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் பார்வையாளர்கள் என்ற முக்கிய காரணிகளும் தற்போது இருப்பதால், ‘முதல் தோற்றத்திலேயே அனைவரையும் ஈர்க்க வேண்டும்” என்ற ஒரு கோட்பாடு உள்ளது. 45 நொடிகள் ஓடும் இந்த போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசர் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு, உடனடியாக நேர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் கேஆர் சந்துரு கூறும்போது, “முதலில், எங்கள் டீசரை அறிமுகப்படுத்த முழு மனதுடன் ஒப்புக் கொண்ட சூர்யா சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது போன்ற ஒரு சிறிய படத்தை ஆதரிக்க அவர் ஆர்வம் காட்டுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் அவர் எங்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தினார். இது சமூக ஊடகப் பக்கத்தில் சாதாரண வார்த்தைகளை பற்றியது அல்ல, இந்த டீசரை பார்த்து தனிப்பட்ட முறையில் மனதாரால் பாராட்டினார்.

டீசரை தொகுத்து உருவாக்கிய விதம் பற்றி அவர் கூறும்போது, “டீசர்கள் ‘ஒரு திரைப்படத்தை ஊக்குவிப்பதில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில், பெரிய நடிகர்களோ அல்லது கலைஞர்களோ இல்லாத போதும், டீசர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கும் பல நிகழ்வுகளை நாம் சந்தித்திருக்கிறோம். இதுவே போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசரை முன்வைப்பதற்கான உற்சாகத்தை எங்களுக்கு வழங்கியது. டீசரை 45 நொடிகள் கால அளவில் வழங்க முடிவு செய்தபோது, படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் டீசரில் கொண்டு வருவதை நாங்கள் கடுமையான சவாலாக எடுத்துக் கொண்டோம். எனவே, டீசரின் முதல் சில விநாடிகளுக்கு நாயகனை (தீரஜ்) மட்டுமே காட்ட முடிவு செய்தோம், பின்னர் அடுத்த பாதியில் மீதமுள்ள கதாபாத்திரங்களை காட்ட நினைத்தோம். டீசர் பார்த்த பலரும் நாங்கள் சொல்ல நினைத்ததை சரியாக புரிந்து கொண்டிருப்பதோடு, எங்களை வெகுவாக பாராட்டினர். படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிட இருக்கிறோம், அதில் படத்தின் கரு மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்” என்றார்.

தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த போதை ஏறி புத்தி மாறி படத்தில், ராதாரவி, சார்லி, அஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கேஆர் சந்துரு. பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவு), கே.பீ (இசை), அறிவு, முத்தமிழ் மற்றும் சுதன் பாலா (பாடல்கள்), வி.ஜே.சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு), கோபி ஆனந்த் (கலை), ‘ரக்கர்’ ராம்குமார் (சண்டைப்பயிற்சி), ஷெரிஃப் (நடனம்) மற்றும் பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

More Articles
Follows