தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாரதன், ஜாக்சன்துரை ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நேகா மேனன்.
மேலும் வாணி ராணி, சித்தி 2, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர்.
கேரளாவைச் சேர்ந்த இவருக்கு தற்போது 20 வயதாகிறது.
கடந்த சில நாட்களுக்கு.. “தன் குடும்பத்தில் ஒரு குட் நியூஸை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
எனவே நேகாவுக்கு திருமணம் என ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.
தற்போது அந்த குட் நியூஸ் பற்றி பதிவிட்டுள்ளார்.
“என் அம்மா கடந்த 8 மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
எனது தாய்க்கும், தங்கைக்கும் உங்களின் ஆசியை தேவை. இவர்கள் தான் என்னுடைய உலகம்.
இதை பார்த்தபின் வரும் மோசமான கமெண்ட்டுகளை நான் கண்டுக்கொள்ள மாட்டேன். உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
தற்போது அக்கா என்பதை விட தாயாக உணர்கிறேன்” என பதிவிட்டுள்ளார் நேஹா.
Teen actress Neha Menon welcomes her baby sister