தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மே 17 வரை அமலில் உள்ளது.
இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள கொரோனா பச்சை மண்டலங்களில் நேற்று மே 4 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து தமிழகத்திலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பல அரசியல் கட்சிகள் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதாவது.. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
Tasmac shops will not be opened in Chennai