‘கலவரத்திற்கு போலீஸ் பதில் சொல்லியே ஆகனும்…’ ஜிவி. பிரகாஷ்

‘கலவரத்திற்கு போலீஸ் பதில் சொல்லியே ஆகனும்…’ ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஜல்லிக்கட்டு வேண்டும் என தமிழக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கு ஜிவி. பிரகாஷ் தன் ஆதரவை நேரிடையாகவே தெரிவித்து களத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் போராட்டம் முடிவடையும் நாள் அன்று போலீஸ் தடியடி நடத்தி கலவரமாக்கினர்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் ஜிவி. பிரகாஷ் பதிவிட்டுள்ளதாவது…

G.V.Prakash Kumar ‏@gvprakash
Cops need to explain violence on jallikattu protesters and so does TN govt

G.V.Prakash Kumar ‏@gvprakash

எவ்வளவு கண்ணியமாக நாங்கள் இருந்தோம் எங்களை முதுகில் குத்தி வீழ்த்த நினைத்துவிட்டீர்களே #shameontnpolice

Tamilnadu Police should give answer for Violence says GVPrakash

‘ஜல்லிக்கட்டுக்கு அவர்கள் ஸ்பான்சர் செய்யலாம்…’ கமல் எச்சரிக்கை

‘ஜல்லிக்கட்டுக்கு அவர்கள் ஸ்பான்சர் செய்யலாம்…’ கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்களை இளைஞர்கள் தமிழகம் முழுவதும் ஒரு வாரம் நடத்தினர்.

ஆனால் நேற்று இப்போராட்டத்தை கலைத்து போலீசார் தடியடி நடத்தினர்.

இதுகுறித்து பல கருத்துக்களை கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இன்னும் சில நாட்களில் அதாவது பிப்ரவரி 1 மற்றும் 2 தேதிகளில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதுகுறித்தும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் கமல்.

அதில்… ” அமெரிக்க சோடா கம்பெனிகள் ஜல்லிகட்டு ஸ்பான்சர் ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.

America Cool Drinks company may sponsor Jallikattu says Kamal

Kamal Haasan@ikamalhaasan

அமேரிக்க சோடா கம்பேனிகள் ஜல்லிகட்டு sponsors ஆக வாய்ப்புண்டு. எச்சரிக்கை

 

அஜித்தால் வாய்ப்பு இழந்தவருக்கு வாய்ப்பளித்த ஆர்யா

அஜித்தால் வாய்ப்பு இழந்தவருக்கு வாய்ப்பளித்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director nandha periyasamyஆஞ்சநேயா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் போலீஸ் ஆக நடித்திருந்தார் அஜித்.

ஆனால் இப்படங்களுக்கு முன்பே ஒரு படத்தில் அஜித் போலீஸ் ஆக நடிக்க ஒப்புக் கொண்டு சில நாட்களில் சூட்டிங்கிலும் கலந்துக் கொண்டாராம்.

ஆனால் அப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

அதுபற்றிய தகவல்கள் தற்போது அப்பட இயக்குனரால் இணையங்களில் வலம் வருகிறது.

அவர்தான் இயக்குனர் நந்தா பெரியசாமி. அஜித் நடித்த மகா என்ற படத்தை இயக்கினார்.
இதன் சூட்டிங் இடையில் அஜித்துக்கு விபத்து ஏற்படவே சூட்டிங் நிறுத்தப்பட்டதாம்.

அதன் பின்னர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் பிரச்சினை ஏற்படவே அப்படம் முற்றிலும் கைவிடப்பட்டது.

இதனால் இயக்குனராக அறிமுகம் ஆக வேண்டிய நந்தா பெரியசாமியால் முடியவில்லை.

அதன்பின்னரே ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார்.

அஜித்தை இயக்கியிருந்தால் இன்று தன் நிலை உயர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajiths first cop movie dropped updates

ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரத்தால் சூர்யா எடுத்த முடிவு

ஜல்லிக்கட்டு தொடர்பான கலவரத்தால் சூர்யா எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya in si3ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சி3.

இப்படத்தின் ரீலீஸ் தேதி எத்தனை முறை மாறியிருக்கிறது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

இறுதியாக குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது

படத்தின் ரிசர்வேசன் கூட தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம், அதன் பின்னர் நடந்த கலவரம் என தமிழகமே உணர்ச்சி பெருக்கில் இருக்கிறது.

முற்றிலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இதனால் ‘சி3’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.

எனவே, அடுத்த வாரம் பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் நண்பன் கூட்டணி…. விஜய்யுடன் இணையும் பிரபலம்

மீண்டும் நண்பன் கூட்டணி…. விஜய்யுடன் இணையும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த படம் நண்பன்.

இதில் சத்யன் காமெடி வேடத்தில் கலக்கியிருந்தார்.

மேலும் துப்பாக்கி படத்திலும் விஜய்யுடன் நடித்திருந்தார்.

இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ‘விஜய் 61’ படத்தில் நடிக்கவிருக்கிறார் இளைய தளபதி.

இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் சத்யன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.

‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

‘என்னை பழிவாங்க இது நேரம் அல்ல…’ விஷால் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய இளைஞர்கள் குரல் கொடுத்தனர்.

மேலும் அந்த அமைப்பில் தொடர்புடையதாக கூறப்படும் த்ரிஷா, விஷால் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து விலக வேண்டும் எனவும் குரல் கொடுத்தனர்.

த்ரிஷாவுக்கு அதில் தொடர்பில்லை என அவரது தாயார் உமா தெரிவித்த இருந்தார் என்பதை பார்த்தோம்.

தற்போது, இது தொடர்பாக விஷால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

“மறுபடியும் என்னை பற்றி தவறான செய்தி இணையங்களில் பரவி வருகிறது.

மாணவர்கள் மீது தடியடி சரிதான் என்று நான் கூறியதாக அந்த செய்தி வெளியாகியுள்ளது.

தயவு செய்து சொல்கிறேன் என்னை பழி வாங்க இது நேரம் அல்ல, அப்படி என்னை பழி வாங்க வேண்டுமா அதற்கு வேறு தளம் தேடுங்கள்.

இந்த மாணவர்கள் போராட்ட விஷயத்தில் வேண்டாம்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Dont take revenge on me in students protest issue says Vishal

More Articles
Follows