ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு.; 11 மாவட்டங்களில் தளர்வு இல்லை.; வகை 3ல் உள்ள 4 மாவட்டங்களில் தளர்வு என்ன?

ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு.; 11 மாவட்டங்களில் தளர்வு இல்லை.; வகை 3ல் உள்ள 4 மாவட்டங்களில் தளர்வு என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் ஜூன் 28 காலை 6 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நோய்த் தொற்றுப் பாதிப்பின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளன.

இந்த 11 மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இதில் ‘வகை 1’ மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வுகளும் புதிதாக அறிவிக்கப்படவில்லை.

2 வகை : அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் இரண்டாம் வகையில் உள்ளன.

3 வகை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மூன்றாம் வகையில் உள்ளன.

வகை 3 ல் உள்ள 4 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன், கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

* தனியாக செயல்படும் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 :00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்படலாம்

* உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், பேக்கரிகள்( பார்சல் சேவை மட்டும்) மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மின்னணு வணிக நிறுவுனங்கள், இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

*அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடனும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடுபொருள் வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள், வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவுனங்கள், குறுநிதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்படும்.

எலெக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர்கள் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.

*குழந்தைகள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து, சிறார்களுக்கான கண்காணிப்பு/பராமரிப்பு , சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.

*அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாகயாகவும் இயங்கும்.

Tamilnadu Lockdown extended till 28th June with relaxations

விஜய்யை முந்திக் கொண்ட தனுஷ்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி்.!

விஜய்யை முந்திக் கொண்ட தனுஷ்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Dhanushவிஜய்யின் ‘தளபதி 66’ படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் உருவாகிறதாம்.

ஆனால் இது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் விஜய்யை முந்தி தனுஷ் தெலுங்கு பிரபலங்களுடன் இணையவுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

வணிகரீதியான வெற்றிகளின் படங்களை இயக்குவதில் கம்முலா ஒரு மாஸ்டர்.

இது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும்.

இப்படத்தை நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் சார்பாக (தயாரிப்பு எண் 4 ) மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது .

மறைந்த திருமதி .சுனிதா நாரங்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்ட திரைப்படத்தை சோனாலி நாரங் வழங்குகிறார்.

இதர தொழில்நுட்ப மற்றும் கதாபாத்திர தேர்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் . இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள் .

நடிகர்: தனுஷ்
இயக்குனர்: சேகர் கம்முலா
வழங்குபவர் : சோனாலி நாரங்
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி
தயாரிப்பாளர்கள்: நாராயண் தாஸ் கே நாரங் & புஸ்கூர் ராம் மோகன் ராவ்

Actor Dhanush to enter in Tollywood

மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிருத்விராஜ்..; வித்தியாசமான தலைப்பில் டைட்டில் லுக்

மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிருத்விராஜ்..; வித்தியாசமான தலைப்பில் டைட்டில் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prithviraj mohanlalமலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “அய்யப்பனும் ஜோஷியும்”.

தென்னிந்திய சினிமா ரசிகர்களை திரைப்படம் திரும்பி பார்க்க வைத்தது.

எனவே இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவுகிறது.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான “கோல்ட் கேஸ்” என்ற படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதனிடையில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ என்ற படத்தை இயக்கி இயக்குனராகவும் பெரிய வெற்றி பெற்றார் ப்ருத்விராஜ்.

இந்த படமும் பெரும் வெற்றி பெற மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது அடுத்தப்பட இயக்கம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

“BRO DADDY“ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மீண்டும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளார்.

காமெடி கலந்த குடும்பப் பாங்கான கதைக்களம் கொண்ட இந்த படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Prithviraj – Mohan lal next film is titled Bro Daddy

அபி சரவணன் – ஷைனி இணையும் ‘சாயம்’ படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

அபி சரவணன் – ஷைனி இணையும் ‘சாயம்’ படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’.

இப்படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள்ர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் அமீர், சுசீந்திரன், சமுத்திரக்கனி, ராஜேஷ், சுப்ரமணிய சிவா மற்றும் எஸ் ஆர் பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

மேலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை இன்று சாயம் படக்குழுவினர் சந்தித்தனர்.

அவர் இப்படம் பெரும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்போது போஸ்ட புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போதைய நிலைமை சீராவதை பொறுத்து படம் விரைவில் வெளியாகும்.

Minister Anbil Mahesh wishes to Saayam team
.
saayam

ஆசிரியர் – ஆன்மீகம் போர்வைகளில் அத்துமீறல்கள்.; இறைவன்-பக்தர்கள் இடையில் இடைத்தரகர் ஏன்.? – MS பாஸ்கர் வேதனை

ஆசிரியர் – ஆன்மீகம் போர்வைகளில் அத்துமீறல்கள்.; இறைவன்-பக்தர்கள் இடையில் இடைத்தரகர் ஏன்.? – MS பாஸ்கர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ms bhaskarகடந்த சில தினங்களாக கொரோனா செய்திகளை விட பாலியல் வன்கொடுமை செய்திகளே நம்மை ஆக்ரமித்துள்ளன.

பிரபல பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைப் போல பிரபல சாமியாரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனருமான சிவசங்கர் பாபாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி சர்ச்சைக்குள்ளான யூடியூபர் மதனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

வணக்கம் . நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

என்ன நடக்கிறது! ஒன்றுமே புரியவில்லை!

‘ஆசிரியர்’ என்ற போர்வையிலும், ‘ஆன்மீகம்’ என்ற போர்வையிலும் அத்துமீறல்கள்.

ஏற்கனவே ‘கரோனா’ பெருந்தொற்று உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கொடுமைகள் வேறா?

பள்ளிக்கூடம்….

சென்றுதான் ஆக வேண்டும். குழந்தைகள் படித்துத்தான் ஆக வேண்டும். தொற்றின் தீவிரத்தால் ‘ஆன்லைன்’ வகுப்புகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவு. கைது செய்யப்பட்ட ஆசிரியர் “பல ஆண்டுகளாக இது நடக்கிறது… நான் மட்டும் இல்லை… இன்னும் பலரும் உண்டு”… என்கிறார். ஒரு பள்ளி மட்டுமல்ல. பல பள்ளிகளில் இதே தவறு நடக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம்…

புனிதமான விஷயம். அது எந்த ‘மார்க்கமாயினும்’ (மதம்)சரி..

‘குரு’ என்ற ஒருவர் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் ‘குரு’ என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவரா என்பதை அறிதல் அவசியமன்றோ?

இறைவனுக்கும் , பக்தர்களுக்கும் இடையில் ‘இடைத்தரகர்கள்’ எதற்கு?

‘இவர் மூலமாகத்தான் நீ என் அருளைப் பெற முடியும்’ என்று இறைவன் எங்காவது சொல்லியிருக்கிறாரா?

படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று எதற்காக ஒருவனின் கால்களில் விழ வேண்டும். அவனை கடவுள், தெய்வம், சாமீ என்று ஏன் துதிக்க வேண்டும்!

“நரிக்கு நாட்டாம குடுத்தா… கெடைக்கு ரெண்டு குட்டி கேக்கும்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல்தானே இருக்கிறது இந்த ஈனச்செயல். உண்மையான ஞானியோ, சித்தனோ தன்னை ஒருபோதும் விளம்பரப் படுத்திக்கொள்வதில்லை.

இவர்களுக்கு கூட்டம் கூடுவதும், இந்தக் கோமாளிகள் வேஷம் போட்டு ஆடுவதும், பிறகு சுயரூபம் தெரிந்தவுடன் தப்பித்து ஓடுவதும், ‘முடிந்தால் கண்டுபிடி’ என்று கண்ணாமூச்சி விளையாடுவதும்

ஆன்மீகத்தையே அசிங்கப்படுத்தும் இழிசெயலன்றோ?

இவர்களால் உண்மையான குருமார்களுக்கும்… ஏன் இறைவனுக்குமே பழிச்சொல் வராதா? இறை நம்பிக்கை உடையவர்களை மற்றவர்கள் கிண்டலும் , கேலியும் செய்ய வழி வகுக்காதா?

அரசாங்கத்திற்கு இவர்கள் பின்னாலேயே அலைவதா வேலை? ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நியமித்து கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா? ஏற்கனவே அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்.

மாண்புமிகு. பிரதமர் அவர்களும், மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அனைத்துத்துறை சார்ந்தவர்களும், உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இந்தத் ‘தலைவலி’வேறு!

ஆக…..

கல்வியையும், ஆன்மீகத்தையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் குற்றவாளிகளை கழிவுகளாக எண்ணி, சிந்தை தெளிந்து மக்களாக விலகிவருவதே நாட்டுக்கும் நல்லது. நம்பிக்கைக்கும் நல்லது.

– வேதனையுடன் எம்.எஸ். பாஸ்கர்.

Actor MS Bhaskar talks against on sexual harrasment

பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வியா.? 50 பைசா செலவில் எதிர்ப்பு தெரிவியுங்கள்.. – தங்கர் பச்சான்

பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வியா.? 50 பைசா செலவில் எதிர்ப்பு தெரிவியுங்கள்.. – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thangar bachanமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான தங்கர் பச்சான்.

அவரது அறிக்கையில்…

“கல்வியை மட்டுமே கற்றுக்கொண்டு வாழ்வின் அனைத்து வசதிகளையும்,உயர் பதவிகளையும், பொறுப்புகளையும் சிலர் மட்டுமே காலம் காலமாக அனுபவித்தார்கள்.

இப்பொழுத்தான் நாட்டின் முக்கால் பகுதி மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் வசதிகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தக் கல்விகூட முழுமையான தரமான கல்வி அல்ல. ஏழைகளுக்குத்தரப்படும் தரமற்ற கல்வியாகவே உள்ளது.

இந்நிலையில் உயர் கல்விக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்காக நீட் (NEET) எனும் தகுதித்தேர்வை உருவாக்குகிறோம் என இந்திய ஒன்றிய அரசு உருவாக்கியது.

பணவசதி படைத்தவர்கள் மட்டும் பணம் கொடுத்து உயர்கல்வியை விலைபேசி உயர்பதவிகளை அடைந்து விடுகின்றார்கள் எனும் காரணம் கூறித்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தினார்கள்.

ஆனால் இதன்மூலம் உயர்கல்வியை இழந்து வருபவர்கள் முதல் தலைமுறைக் கல்வியை இன்னும் கடக்காத வறுமை கோட்டிற்குக்கீழே வாழும் கிராமம் மற்றும் ஏழை மாணவர்கள்தான்.

கல்வி என்பது நம்நாட்டில் ஒரு பெரும் வணிகமாகிப் போன நிலையில் நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே பாதுகாப்பு தமிழ்நாடு அரசு மட்டும்தான்.

இவ்வாண்டு முதல் மருத்துவக்கல்விக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசு பதிலளிக்காத நிலையில் தமிழக அரசு நீதியரசர் A.K.Rajan அவர்களின் தலைமையில் எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளது.

பொது மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என தமிழகத்திலுள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் எதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறோம் எனும் காரணங்களை உடனடியாக எழுதி பின் வரும் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (EMAIL) அனுப்ப வேண்டுகிறேன்.

ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதியரசர் பானுமதி அவர்கள் 15 பைசா அஞ்சல் அட்டையில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றக்கு மதிப்பளித்து அதன் அடிப்படையில் வழக்கு ஒன்றில் நீதி வழங்கினார் எனும் செய்தியை இந்நேரம் நம் மாணவர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

“இது மக்களால் உருவாக்கப்பட்ட மக்களாட்சி. இங்கே அனைத்துக் குடி மக்களுக்கும் ஒரே மாதிரியான சமமான நீதி கிடைக்க வேண்டும். இத்தனைக் காலங்கள் எங்களுக்கு கல்வியைத் தராமல் அதுவும் பணக்காரர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி என தரம் பிரித்து வழங்குகிறீர்கள்.

அனைவருக்கும் சமமான தரமான ஒரே கல்வியை வழங்காமல் எவ்வாறு எங்களுக்குத் தகுதித் தேர்வை நடத்துவீர்கள். முதலில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியை எங்களுக்கு வழங்குங்கள்.

அதன்பின் தகுதித் தேர்வை (NEET) நடத்துங்கள். அதுவரை நீட் தேர்வு நடத்துவது எங்களுக்கு இழைக்கும் அநீதி” என அனைத்து மாணவர்களும் உடனே 50 பைசா அஞ்சல் அட்டை வாங்கி எழுதி அனுப்புங்கள். எதிர்ப்பை பதிவு செய்யுங்கள். நமக்கான நீதி கிடைக்க உடனே செயல் படுங்கள்.

கடிதம் அனுப்ப கடைசித்தேதி: 23.06.2021

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

நீதியரசர் மாண்புமிகு A.K.ராஜன் குழு
மருத்துவக்கல்வி இயக்குநரகம்,
(மூன்றாம் தளம்)
கீழ்ப்பாக்கம்,
சென்னை- 600010

மின்னஞ்சல் (EMAIL ID): [email protected]

Film director Thangar Bachan on Neet issue

More Articles
Follows