கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்த திரைப்பிரபலங்கள் ஒரு பார்வை

கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்த திரைப்பிரபலங்கள் ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

மேலும் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு தமிழக மக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

திரையுலகினர் அளித்த நன்கொடை விவரம்…

நடிகர்கள் சிவகுமார் சூர்யா கார்த்தி குடும்பத்தினர் ரூ.1 கோடியை முதல்வரிடம் நேரடியாக நிதியளித்தனர்.

சௌந்தர்யா ரஜினியின் கணவர் குடும்பத்தினர் ரூ.1 கோடி

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம்

நடிகர் உதயநிதி ரூ.25 லட்சம்

நடிகர் அஜித் ரூ.25 லட்சம்

நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம்

இயக்குனர் வெற்றிமாறன் ரூ.10 லட்சம்

இயக்குனர் மோகன் ராஜா & நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர் ரூ.10 லட்சம்

இயக்குனர் ஷங்கர் ரூ. 10 லட்சம்

ஆகியோர் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

Tamilnadu CM Corona Relief fund donation list

ஊரடங்கில் வெளியே வந்த நபர்.. அபராதம் விதித்த போலீசார்.. திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதல்வர்

ஊரடங்கில் வெளியே வந்த நபர்.. அபராதம் விதித்த போலீசார்.. திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்காக மருந்து வாங்க பைக்கில் திருவள்ளூருக்குச் சென்றார்.

செல்லும் வழியில் அவரை மறித்த போலீசார் ஊரடங்கை மீறியதாகக் கூறி 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அந்த நபர் மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை அபராதமாகச் செலுத்தியுள்ளார்.

இதனால் மருந்து வாங்க பணமில்லாமல் வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ளார்

இந்த சம்பவத்தை அவர் முதலமைச்சருக்கு ட்விட்டரில் தெரிவித்தார்.

இதனைப்பார்த்த தமிழக முதல்வர் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லியுள்ளார்

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் 500 ரூபாயைத் திருப்பிக் கொடுத்துள்ளார் திருவள்ளூர் காவல் ஆய்வாளர்.

மேலும் அவர் மகனுக்குத் தேவையான மருந்துகளையும் இலவசமாக வாங்கி கொடுத்துள்ளார்.

TN Cm request Police to return the charged fine to poor man

மேற்கு வங்கத்தில் மே 31ஆம் வரை ஊரடங்கு..; டெல்லியில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்கத்தில் மே 31ஆம் வரை ஊரடங்கு..; டெல்லியில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா நாடெங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று மே 16 முதல் வரும் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளார்.

மளிகை, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்படலாம்.

இவையனைத்தும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.

பெட்ரோல் பங்குகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.

தொழிற்சாலைகள் இயங்கத் தடை.

மேற்கு வங்கத்தை் தொடர்ந்து டெல்லியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

டெல்லியில் ஏற்கெனவே ஊரடங்கு அமலில் உள்ளதால் கொரோனா பாதி்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஆனாலும் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 328 ஆக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அடுத்த வாரம் 23ம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இப்போது 4வது முறையாக முழு ஊரடங்கை நீட்டித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

West Bengal and Delhi Government Covid 19 Lockdown updates

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு ஆலோசனைகள் சொல்லும் ஆண்ட்ரியா

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு ஆலோசனைகள் சொல்லும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது தனிமைப்படுத்துதல் முடிவடைந்து விட்டதால் கொரோனாவில் தன்னை தற்காத்து கொள்ள 10 ஆலோசனைகளை வழங்கியுள்ளார் ஆண்ட்ரியா.

அந்த அட்வைஸ்கள் இதோ…

1. கொரோனா பாசிட்டிவ் என வந்தாலும் பாசிட்டிவ்வாக இருங்கள். பயம் என்பது நெகட்டிவ் எமோஷன். நலமடைவது மட்டுமே குறிக்கோள் என இருங்கள்.

2. கொரோனா வைரஸ் மூக்கு, தொண்டை வழி, நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும். ஆவி பிடிப்பது நல்லது. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.

3. நீங்கள் சாப்பிடுவது, குடிப்பதும் மிகவும் முக்கியமானது. நமது தினசரி உணவில் பல சூப்பர் உணவுகள் நமக்கு உள்ளது ஆசீர்வாதமானது.

4. மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் தூள் கலந்த பால் ஆகியவை நல்லது. சளியை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. தண்ணீர், ஜுஸ் ஆகியவற்றை அடிக்கடி குடியுங்கள்.

5. உங்கள் பால்கனி, மொட்டி மாடி ஆகிய இடங்களில் நல்ல காற்றை தினமும் சுவாசியுங்கள். அப்படியில்லை என்றால் ஜன்னலைத் திறந்து விட்டு நல்ல காற்றை சுவாசியுங்கள்.

6. உங்கள் குடும்பத்தினரை மட்டுமல்ல, பணியாட்கள், டிரைவர்கள், வாட்ச்மேசன் ஆகியோரையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

7. விட்டமின் சி, பி, ஜின்க் ஆகியைவை நமது எதிர்ப்பு சக்தியை தூண்டக் கூடியவை. அஷ்வகந்தா, துளசி மற்றும் பல இந்திய மூலிகைகள் இருக்கின்றன. உங்கள் டாக்டரை ஆலோசித்து அதற்கேற்றபடி மருத்துவம் பாருங்கள்.

8. நெகட்டிவ் செய்திகளைப் பார்ப்பது, கோவிட் நிலவரம் ஆகியவற்றை உங்கள் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதீர்கள். அழுத்தம் உங்களது எதிர்ப்புக் சக்தியைக் குறைக்கும்.

9. புத்தகம் படியுங்கள், உங்களுக்கு விருப்பமான இசையைக் கேளுங்கள், உங்கள் குடும்பத்தினருடன், நண்பர்களுடன், அன்பானவர்களுடன் தொடர்ந்து உரையாடுங்கள்.

10. கோவிட் 19 ஒரு உலகளாவிய பிரச்சினை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோதனையில் பாசிட்டிவ் என வந்தால் உங்களையோ மற்றவர்களையோ தவறாகப் பேச வேண்டாம். கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களை கனிவாக அணுகுங்கள். இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

என 10 ஆலோசனைகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Actress Andreas healthy tips to prevent from Covid 19

JUST IN பெஃப்சி சினிமா தொழிலாளர்களுக்கு அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி

JUST IN பெஃப்சி சினிமா தொழிலாளர்களுக்கு அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் 25 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இந்த நிதியை அவர் நேரில் சென்று கொடுக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் அளித்தார்.

இந்த நிலையில் பெஃப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிடும் வகையில் நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார் என பெஃப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தகவல்

FEFSI president #RKSelvamani today at a press meet has said that actor #Ajith has donated ₹10 lakhs to FEFSI

Actor Ajith has donated Rs 10 lakhs to FEFSI

JUST IN காலை 10 மணி வரை மளிகை & காய்கறி கடை.; டீ கடைக்கு தடை.; தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்..

JUST IN காலை 10 மணி வரை மளிகை & காய்கறி கடை.; டீ கடைக்கு தடை.; தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசு கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவித்தது தமிழக அரசு.

மே 15 முதல் காய்கறி, மளிகை இறைச்சி கடைகள்‌ இனி காலை 6 மணி முதல்‌ 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்‌.

மே 15 முதல் தமிழகத்தில்‌ டீ கடைகள்‌ இயங்க அனுமதி இல்லை.. காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை..

ஏடிஎம், பெட்ரோல் பங்க் மற்றும் மருந்து கடைகள் வழக்கம் போல செயல்படும்.

மே 17 முதல் மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பாஸ் கட்டாயம்.. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயம்..

Tamil Nadu govt imposes fresh restrictions in Lockdown

1. Vegetable and grocery shops, departmental stores, meat and fish stalls allowed to function only from 6am to 10 am. Earlier they were allowed to be open till 12pm.

TN guidelines:

2. Dunzo, e-commerce websites that delivers essentials allowed to function only till 10 am

3. Tea shops to be closed

4. E-registration mandatory for domestic and inter-district passengers. This will come into effect from May 17th.

TN guidelines:

5. Night curfew and Sunday lockdown to continue

6. Roadside shops selling flowers, fruits, vegetables etc not allowed

7. E-commerce allowed from 2pm – 6pm…

More Articles
Follows