பேய் படத் திகிலை மிஞ்சும் மியூசிக் த்ரில்லர் அமுதா

பேய் படத் திகிலை மிஞ்சும் மியூசிக் த்ரில்லர் அமுதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amutha movie stillsசதர்ன் ஃப்லிம் ஃபேக்டரி” சார்பாக “சஃபீக்” தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் “அமுதா”.

திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட “மியூக்கல்-திரில்லர்” படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயா ஸ்ரீ நடிக்கிறார்.

இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார்.

“அமுதா” திரைப்படத்திற்கான கதையை 2016 -ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.அர்ஜுன்.

“அமுதா” படத்திற்கான கதையை எழுதத் தொடங்கும் போது ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே எழுதி இருக்கிறார்.

பிறகுதான் படத்திற்கான மொத்த கதையையும் எழுதி இருக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘அமுதா’ என்கிற பெயரைத்தான் இப்படத்திற்கான தலைப்பாக வைத்திருக்கிறோம்.

காரணம், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் சாதாரணமாக இல்லாமல், இதற்கு முன்பே நன்கு அறியப்பட்ட பெயராக இருக்க வேண்டும் என விரும்பினோம்”, என்றார்.

மேலும் இது பேய்ப்படமா? என்ற கேள்விக்கு, “நிச்சயமாக இது பேய்ப்படம் இல்லை. அதே நேரத்தில் பேய்ப்படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ அதை விட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்”, என்றார்.

முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதிகட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிச்சயம் படம் வெளியாகும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் களை கட்டும் காலா; வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

கேரளாவில் களை கட்டும் காலா; வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala Rajinikanthநடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இதனால் இவரது படங்கள் வெளியாகும் நாளை அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது வெளியீட்டுக்கு தயாராகவுள்ள காலா படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வந்தாலும், படத்தின் வெளியீட்டில் பிரச்சினை இருக்காது என்கின்றனர் கோலிவுட் வல்லுனர்கள்.

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போதே கேரளாவில் காலா படத்தின் டிக்கெட்டுகளை விற்க ஆரம்பித்துவிட்டனர்.

அதிகாலை 4 மணி முதல் காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

அதற்கான டிக்கெட்டுக்களை புக் செய்த ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

காலாவை காண தற்போதே வெறித்தனமாக காத்திருக்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Kerala Rajini fans waiting for Kaala release Started selling tickets

kaala kerala ticket

பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு 2018 விருதுகள்

பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு 2018 விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishu pride of tnஆண்கள் வெற்றி பெற்றால் அது அவர்களுக்கு மட்டுமே உரியது, பெண்கள் பெரும் வெற்றி இந்த சமுதாயத்துக்கு உரியது. அவர்கள் வெற்றி பெறுவது மிக மிக முக்கியம்.

ரவுண்ட் டேபிள் இனிஷியேட்டிவ் நடத்தும் கலை, தொழில், பண்பாடு, பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளின் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் ப்ரைட் ஆஃப் தமிழ்நாடு 2018 விருதுகள் வழங்கும் விழா சென்னை ஃபெதர்ஸ் ராதா ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் சாதனையாளர்கள் கலந்து கொண்டு முக்கிய பிரமுகர்களிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்கள்.
நிர்வாக துறையில் பெருமைமிகு தமிழர் விருது ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கு ஷகில் அக்தர் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார்.

வளரும் சாதனையாளர் விருது அம்பத்தூர் இணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், “நான் பணியில் சேர்ந்த 15 நாட்களிலேயே கும்பகோணம் தீ விபத்து நடந்தது. சுனாமி நேரத்தில் நிறைய இடர்ப்பாடுகளை சந்தித்தோம்.

அந்தந்த இடங்களில் பணியாற்றிய நிறைய முகம் தெரியாத மனிதர்களுக்கு தான் இந்த விருது சென்று சேர வேண்டும். அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

2018 ஆம் ஆண்டின் பெருமைமிகு தமிழர் கலை, கலாச்சாரம் பிரிவில் விக்கு வினாயக் ராம் அவர்களுக்கு பத்மபூஷன் டிவி கோபாலகிருஷ்ணன் விருதை வழங்கினார். கலை மற்றும் கலாச்சார பிரிவில் வளர்ந்து வரும் கலைஞர் விருது மரப்பாச்சி தமிழ் தியேட்டர் குரூப்பிறகு வழங்கப்பட்டது. மங்கை அவர்கள் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

பொழுதுபோக்கு துறையில் இன்ஸ்பிரேஷன் விருது இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அவருக்கு ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் விருதை வழங்கினார்.

மகேந்திரன் அவர்கள் இயக்கிய உதிரிபூக்கள் படத்தை பார்த்து விட்டு சினிமாவை நான் பார்க்கும் கண்ணோட்டமே மாறியது என்று கூறிய பிசி ஸ்ரீராம் அடுத்து மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதாக கூறினார்.

நான் அதிகம் மதிக்கும் பிசி ஸ்ரீராம் கையால் இந்த விருதை வாங்கியதில் பெருமை அடைகிறேன் என்றார் இயக்குனர் மகேந்திரன்.

பொழுதுபோக்கு துறையில் வளரும் கலைஞர் விருதை இயக்குனர் மகேந்திரன் வழங்க ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுக் கொண்டார். அவர் பேசும்போது, “சென்னையில் பிறந்து வளர்ந்து நிறைய தமிழ் பேசியதாலே சினிமாவில் சாதிக்க நிறைய கஷ்டப்பட்டேன்.

காக்கா முட்டை படத்தில் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும்போது நிறைய பயத்தோடு தான் நடித்தேன். அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

தமிழ் பேசும் கதாநாயகிகள் நிறைய பேர் இருக்காங்க, அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். செக்க சிவந்த வானம் படத்தில் நான் முதல் காட்சியில் ஜோதிகா மேடத்தோடு இணைந்து நடித்தேன்.

முதல் ஷாட் முடிந்தபோது சரியா பண்ணேனா என தெரியவில்லை, மணி சாரிடம் போய் கேட்டேன். அவர் கிரேட்னு சொன்னார். அது என் பெரும் பாக்கியம்” என்றார்.

மருத்துவ சேவை பிரிவில் தைரோகேர் ஆரோக்கியசாமி வேலுமணி அவர்களுக்கு கிவ்ராஜ், டிவிஎஸ் சீனிவாசன் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர். காவேரி மருத்துவமனை அரவிந்தன் செல்வராஜ் அவர்களுக்கு மருத்துவ துறையில் வளர்ந்து வரும் சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

அப்போது பேசிய ஆரோக்கிய சாமி, “37 வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டை விட்டு போய் விட்டேன், ஆனால் இன்று சென்னையில் இன்று இந்த விருதை வாங்கியதில் மகிழ்ச்சி. என் அம்மா, மனைவிக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்.

நான் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டு, தொழில் தொடங்கினேன். இன்று 10 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். குறைந்த விலையில் தைராய்டு மருந்து வழங்கினேன்.

வட இந்தியர்கள் கிண்டல் செய்தனர். காலரை தூக்கிக் கொண்டு தமிழண்டா என்று சொன்னேன்” என்றார்.
கல்வித்துறையில் பெருமைமிகு தமிழர் விருது வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லதா பாண்டியராஜன் அவர்கள் விருதை வழங்கினார்.

கல்விதுறையில் வளர்ந்து வரும் கல்வியாளர் விருது ஆர்ஏ செபாஸ்டின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நான் கல்விச்சேவை அளித்ததற்காக தமிழர் விருது கிடைத்தது மகிழ்ச்சி.

ஏழை மாணவர்களுக்கு கல்வி அவசியம். நான் என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன். நீங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்றார் ஐசரி கணேஷ்.

இலக்கிய துறையில் இன்ஸ்பிரேஷன் விருது எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு நடிகர்
பார்த்திபன் மற்றும் ரீமா திவாரி ஆகியோரால் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் எழுத்தாளர் விருது உமயவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழன் என்பதே மிகவும் பெருமை. பெண்கள் இந்த காலத்தில் ஜெயிப்பதே கஷ்டம். 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயித்தவர் இவர். ஆண் ஜெயித்தால் அவர் மட்டுமே ஜெயிப்பார், பெண்கள் ஜெயித்தால் தலைமுறையே ஜெயித்த மாதிரி, அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்றார் பார்த்திபன்.

எழுத்துலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50வது ஆண்டில் இந்த விருதை வாங்கியதில் மகிழ்ச்சி. நான் எழுத ஒரு கதை என்னை உந்தணும். ஒரு கதை எழுத 8 ஆண்டுகள் கூட எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த விஷயங்களை சமூகத்துக்கு பகிர்ந்து கொள்ள ஆசை.

அதனால் தான் தொடர்ந்து எழுதி வருகிறேன். என்னுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார் சிவசங்கரி.

பத்திரிக்கை துறையில் சாதனையாளர் விருது பகவான் சிங் அவர்களுக்கு ரோகித், லட்சுமி, சரஸ்வதி ஆகியோரால் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் பத்திக்கையாளர் விருது சங்கீதா கந்தவேல் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

42 வருடங்கள் நான் ஊடகதுறையில் பணியாற்றி வருகிறேன். நானும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களும் சுனாமி போல பல வலியான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

பத்திரிக்கையில் நல்ல விஷயங்கள் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள், ஊழல் உட்பட நிறைய தவறான விஷயங்களை வெளியே கொண்டு வந்திருக்கிறோம். இன்று தமிழ்நாடு மோசமான நிலையில் இருக்கிறது என்றார் விருது பெற்ற பகவான் சிங்.

குறு, சிறு தொழில்முனைவோர் பிரிவில் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக் அவர்களுக்கு பெருமை மிகு தமிழர் விருது வழங்கப்பட்டது. தேணாண்டாள் ஃபிலிம்ஸ் ஹேமா ருக்மிணி இந்த விருதை வழங்கினார்.

வளர்ந்து வரும் தொழில்முனைவோர் விருது பி & பி ஆர்கானிக் ஸ்டோர் பாலாஜி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நான் இந்த நிறுவனத்தை தொடங்கியபோது, பெரிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.

20 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோம்.

இந்த விருது எனக்கு கிடைக்க குடும்ப பெண்கள் தான் முக்கிய காரணம் என்றார் பத்மாசிங் ஐசக்.
விருது வழங்கி பேசிய ஹேமா ருக்மிணி, “மெர்சல் அனுபவம் மெர்சலாக இருந்தது.

எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். 100 படங்கள் எடுத்திருந்தாலும் மெர்சல் தயாரிப்பாளர்னு தான் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்” என்றார்.

விளையாட்டு துறையில் இன்ஸ்பிரேஷன் விருது ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் கார்த்திக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரெஜினா முரளி அவர்கள் இந்த விருதை வழங்கினார். வளர்ந்து வரும் விளையாட்டு வீரருக்கான விருது ஸ்ரீநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இரு வருடங்கள் டென்னிஸ் விளையாடினேன். நானும் ஜோஷ்னா சின்னப்பாவும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றோம். காமன்வெல்த் பயிற்சியில் இருந்ததால் தினேஷ் கார்த்திக் விளையாடிய கடைசி மேட்ச்சை நான் அந்த மேட்ச்சை நான் பார்க்கவில்லை என்றார்.

பொழுதுபோக்கு துறையில் சாதித்த ராதிகா சரத்குமார் அவர்களுக்கு பார்த்திபன், கௌஷல் கிஷோர், இந்தர் சிங் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.

விருதை வழங்கி பேசிய பார்த்திபன், “40 வருடங்களாக கிழக்கை நோக்கி போகும் ரயிலாக இருப்பது பெரும் சாதனை. நான் சினிமாவில் ஹீரோ ஆவேன் என முதலில் சொன்னதே ராதிகா தான்” என்றார்.

என் தந்தை திராவிட இயக்கத்துக்கே பெரிய தூணாக இருந்தவர். ஆணாதிக்க துறையில் நிலைத்து நிற்பது ரொம்ப கஷ்டம்.

அதில் நான் 40 ஆண்டுகள் நிலைத்து நிற்பது என்னால் மட்டுமே தான். இந்த விருதை நான் அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன் என்றார் ராதிகா.

பொழுதுபோக்கு துறையில் வளர்ந்து வரும் கலைஞர் விருது ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய ஆதி, கடவுளை விட நான் நட்பை மட்டுமே நம்புவேன். மாணவன், தமிழி என இரண்டு தனிப்பாடல்களில் வேலை செய்து வருகிறேன். ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறேன் என்றார்.

விவசாய துறையில் பெருமை மிகு தமிழர் விருது தெய்வ சிகாமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த விருதை வழங்கினார். விவசாய துறையில் வளர்ந்து வரும் சாதனையாளர் விருது ராஜா மார்த்தாண்டன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இன்னும் 4 நாட்களில் தண்ணீர் வருமா? வராதா? என தெரிந்து விடும். பெட்ரோல், மீத்தேன், கெயில் என திட்டங்கள் அரங்கேறி வருகின்றன. 400 விவசாயிகள் இறந்தும், குடிக்க நீர் இல்லாமல் இருந்தும் நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

வீழ்ந்த விவசாயி இனி எழுந்து நிற்கப் போகிறான் என்றார் தெய்வ சிகாமணி.

சில்லறை வணிக துறையில் சாதனையாளர் விருது பூர்வீகா மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் கன்னி யுவராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரெஜினா முரளி அவர்கள் இந்த விருதை வழங்கினார்.

வளர்ந்து வரும் சாதனையாளர் விருது கோவை பழமுதிர் நிலையம் கீதா கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 14 ஆண்டுகள் கடின உழைப்பு தான் இந்த நிலைக்கு எங்களை கொண்டு வந்திருக்கிறது என்றார் கன்னி யுவராஜ்.

உணவு மற்றும் பானங்கள் துறையில் சங்கீதா உணவகத்தின் நிறுவனர் சுரேஷ் அவர்களுக்கு நீதா ரவி அவர்கள் விருது வழங்கினார். உணவு துறையில் வளர்ந்து வரும் சாதனையாளர் விருது ஒன் பாட் ஒன் ஷாட் சீதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சமூக அமைப்புக்கான பெருமை மிகு தமிழன் விருது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நடிகர் பார்த்திபன் இந்த விருதை வழங்கினர். வளர்ந்து வரும் அமைப்புக்கான விருது சட்ட பஞ்சாயத்து அமைப்புக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய பிரதீப் ஜான், “டிசம்பர் 2 என் திருமண நாள். வெதர் ரிப்போர்ட்டால் பல நேரங்களில் எங்கள் திருமண நாளை நாங்கள் மறந்திருக்கிறோம். வேலை கிடைக்காமல் அலைந்த நேரங்களில் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன். ஆனால் பிடித்த விஷயத்தை செய்ததில் மகிழ்ச்சி.

நிறைய மிரட்டல்கள் வந்திருக்கின்றன. மக்கள் ஆதரவு இருக்கும் போது எதற்கு பயப்பட வேண்டும்” என்றார்.
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக விஷயங்களை செய்து வருகிறோம். 32 மாவட்டங்களிலும் எங்கள் அமைப்பு இயங்கி வருகிறது.

சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் என்றனர் சட்ட பஞ்சாயத்து அமைப்பினர்.

ஸ்டார்ட் அப் துறையில் பெருமை மிகு தமிழன் விருது ஜோஷ்வா மதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் சாதனையாளர் விருது வகில் சர்வீஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய ரவுண்ட் டேபிள் அமைப்பின் நிர்வாகி, “இது ஒரு லாப நோக்கற்ற அமைப்பு. 55 ஆண்டுகளாக 3500 வகுப்பறைகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.

இந்த விருதுக்காக அடிப்படை அமைப்பில் இருந்து திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்க இருக்கிறோம். 360 பேரில் இருந்து 30000 ஓட்டுகள், 6 ஜூரிக்கள் தேர்ந்தெடுத்த இந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கியதில் பெருமை அடைகிறோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்காக ஒரு புகைப்பட பரிசு போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற அபினேஷ் சேகர் அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

விழாவில் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் கௌஷல் கிஷோர், இந்தர் சிங், அங்கிட் குப்தா, அரவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தீபக், அர்ச்சனா தொகுத்து வழங்கினர்.

Pride of Tamilnadu awards 2018 event news updates

parthiban radhika

ஸ்ரீகாந்த் தேவா-ரோபோ சங்கருடன் குத்தாட்டம் போட்ட பாரதி

ஸ்ரீகாந்த் தேவா-ரோபோ சங்கருடன் குத்தாட்டம் போட்ட பாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dance master bharathyநடன இயக்குனர் பாரதி கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார்.

இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ஓவியாவ விட்டா யாரு“ என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி, ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நேத்ரா, பா.விஜய் இயக்கத்தில் ஆருத்ரா, தம்பிராமைய்யா இயக்கத்தில் அவரது மகன் நடிக்கும் “உலகம் விலைக்கு வருது “ மற்றும் எழில், லிங்குசாமி, பூபதிபாண்டியன், ஆர்.கண்ணன், பன்னீர்செல்வம் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்களிலும், தெலுங்கில் இயக்குனர் கிரண், இயக்குனர் பரத் ஆகியோரின் படங்களிலும் தற்போது நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள “நேத்ரா“ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியதோடு அந்த படத்தில் இடம்பெறும் “ வந்துடாயா வந்துடாயா குத்து பாட்டு பாட வந்துடாயா “ என்ற பாடலில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் நடனமாடி இருக்கிறார்.

சிறந்த நடன இயக்குனர் என்ற பெயர் எடுப்பதே எனது லட்சியம் என்கிறார் நடன இயக்குனர் பாரதி.

Dance master Bharathy turns Actress in Nethra movie

தேன்மொழி என்பவரை மணந்தார் முண்டாசுப்பட்டி முனீஷ்காந்த்

தேன்மொழி என்பவரை மணந்தார் முண்டாசுப்பட்டி முனீஷ்காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mundasupatti Muniskanth got married today 26th March 2018‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்தபோதே ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் முனீஷ்காந்த்.

இப்படம் வெற்றி பெறவே இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

‘ஜிகர்தண்டா’, ‘இன்று நேற்று நாளை’, ‘10 எண்றதுக்குள்ள’, ‘மரகத நாயணம்’ ‘பசங்க2’, மாநகரம் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பிஸியாகிவிட்ட இவர் இனிமேல் தாம்பத்ய வாழ்க்கையிலும் பிசியாக உள்ளார்.

இவருக்கும் தேன்மொழி என்பவருக்கு சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர்கள் காளி வெங்கட், நானும் ரௌடிதான் புகழ் ரியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Mundasupatti Muniskanth got married today 26th March 2018

கலைப்புலி எஸ் தாணுவுடன் மீண்டும் இணையும் தனுஷ்

கலைப்புலி எஸ் தாணுவுடன் மீண்டும் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli Thanu to produce Dhanush movie Needi Naadi Oke Katha Telugu remakeதனுஷ் நடிப்பில் `வடசென்னை படத்தின் முதல் பாகம் ரெடியாகிவிட்டது. இப்படம் பெரும்பாலும் ஜூன் மாதம் திரைக்கு வந்துவிடும் என தெரிகிறது.

இதனையடுத்து ஃபகீர் என்ற ஆங்கிலம்-பிரெஞ்சு மொழி படமும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

தற்போது `மாரி-2′, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `நீடி நாடி ஒகே கதா’ என்ற தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீவிஷ்ணு மற்றும் சாட்னா டைட்டஸ் இணைந்திருந்த இப்படத்தில் மாணவர்களின் தற்போதைய கல்விமுறையே கதைக்களமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதன் தமிழ் ரீமேக் உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியுள்ளாராம்.

கடந்த ஆண்டு வெளியான விஐபி 2 படத்தை தனுஷ் மற்றும் தாணு இணைந்து தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kalaipuli Thanu to produce Dhanush movie Needi Naadi Oke Katha Telugu remake

More Articles
Follows