3 மொழி 3 கதை ஒரே க்ளைமாக்ஸ்.. ‘கோசுலோ’ பட டைட்டில் போட்டி; வீடு தேடிவரும் பரிசு

3 மொழி 3 கதை ஒரே க்ளைமாக்ஸ்.. ‘கோசுலோ’ பட டைட்டில் போட்டி; வீடு தேடிவரும் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gosuloசமீபத்தில் *கோசுலோ* என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார்.

கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என இந்தப்படத்தை தமிழில் வெளியிடும் *ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்* நிறுவனத்தை சேர்ந்த ஜெனீஷிடம் தொடர்பு கொண்டபோது, படத்தை பற்றி அவர் சொன்ன தகவல்கள் அனைத்துமே வித்தியாசமாகத்தான் இருந்தது.

“தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ளது இந்தப்படம்.. கதையின் தன்மை கருதி தமிழ் பதிப்புக்கு *கோசுலோ* என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இதில் சுதாராணி பல வருடங்களுக்கு முன் தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கன்னட திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் ஹெப்லிகர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுவரை வெளியான மும்மொழி படங்கள் எல்லாமே ஒரே கதை, ஒரே நடிகர் பட்டாளம் என்ற வகையிலோ, அல்லது ஒரே கதை, அந்தந்த மொழிக்கு ஏற்ற நடிகர்கள் என்கிற வகையிலோ தான் வெளியாகி இருக்கின்றன.. இன்னும் சொல்லப்போனால் கதை முழுவதும் ஒரே மாதிரி இருந்தால் கூட, மொழிக்கு ஏற்றபடி க்ளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

ஆனால் இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாக மூன்று மொழிகளுக்கும் ஒப்பனிங், க்ளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும் உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்தப்படத்தின் ஹைலைட்டான அம்சம்.

இந்தப்படம் சைகாலஜிகல் த்ரில்லர் ஆக உருவாகியுள்ளது.. ஒரு மலை பிரதேசத்திற்கு ஒரு வயதான தம்பதி, ஒரு நடுத்தர வயது ஜோடி மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் வருகின்றனர்.. அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை அவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை..

படத்தை பார்க்கும்போது எதற்காக *கோசுலோ* என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்.. அதற்கு முன்னதாக இந்தப்படத்திற்கு *கோசுலோ* என ஏன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை யூகித்து அதற்கான சரியான காரணத்தை எங்களுக்கு எழுதி அனுப்பும் 25 நபர்களுக்கு அவர்களுடையே வீடு தேடி பரிசுவரும் புதிய போட்டி ஒன்றையும் நடத்த உள்ளோம்” என கூறுகிறார் *ஜெனீஷ்*

நல்ல படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் *ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்* நிறுவனம் அடுத்ததாக யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘கிருஷ்ணா அர்ஜூனா யூகம்’, பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்திருக்கும் ஞானச்செருக்கு உள்ளிட்ட சில தரமான படங்களை அடுத்தடுத்து வெளியிட இருக்கின்றனர்.

*கோசுலோ நடிகர்கள் மட்டும் தொழில்நுட்ப குழு விபரம் *

நடிகர்கள் ; *லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, சுரேஷ் ஹெப்லிகர், அச்சுதா குமார்* மற்றும் பலர்

கதை, திரைகதை மற்றும் தயாரிப்பு ; பி.ஆர்.ராஜசேகர்

இயக்கம் ; சந்திரகாந்த்

இசை ; கோபால்

ஒளிப்பதிவு ; ஸ்ரீனிவாசன்

படத்தொகுப்பு ; நிரு

பாடல்கள் ; வைரபாரதி

நடனம் ; ஹிட் மஞ்சு

ஒலி வடிவமைப்பு ; AVM ஐயப்பன்

எபெக்ட்ஸ்; சேது

மக்கள் தொடர்பு ; A.ஜான், சக்தி சரவணன், ராஜ்குமார்

மது கடை குறைப்பு.; மது விலை அதிகரிப்பு..; சானிடைசரை அருந்தும் மதுபிரியர்கள்.!

மது கடை குறைப்பு.; மது விலை அதிகரிப்பு..; சானிடைசரை அருந்தும் மதுபிரியர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hand sanitizerசந்தோஷமா இருக்கோமா.. சரக்கடிப்போம்.. கவலையா இருக்கோமா சரக்கடிப்போம்… இதுவே குடிகாரன்களின் குடி மந்திரம்.

அவர்களுக்கு குடிக்க ஒரு காரணம் வேண்டும் அவ்வளவுதான்.

தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்தாலும் மது அருந்தாமல் இருக்க மாட்டார்கள்.

தற்போது கொரோனாவுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் சானிடைசரையும் குடிக்கத் தொடங்கியுள்ளனர்.

கிருமி நாசினியில் ஆல்கஹால் இருப்பதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும், இதனை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அவலம் ஆந்திராவில் நடந்து வருகிறது.

ஆந்திராவில் பிரகாசம் என்ற மாவட்டத்தில் கிருமிநாசினி குடித்து 15 பேர் இறந்த நிலையில் தற்போது கடப்பா மாவட்டத்திலும் சானிடைசரை அதிக அளவில் அருந்தி வருகின்றனர்.

எத்தனை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்தாலும் இவர்களை திருத்த முடியாது போலவே….

கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே போராட வேண்டும்..; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே போராட வேண்டும்..; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tedros adhanomகொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடைபெற்ற போது இத்தகவலை தெரிவித்தார்.

இதுவரை இல்லாத வேகத்தில் மருத்துவ துறை கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் ஆகும்.

எனவே மக்கள் அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே அதனுடன் போராட வேண்டும் என்றும் டெட்ரோஸ் கூறினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

panwarilal prohitதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அவர் பரிசோதனைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாததால், அவரது உடல்நிலை சீராக உள்ளது.

அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று; ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று; ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்

கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக தன்னை சந்தித்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அவர் அறிவுரை கொடுத்துள்ளார்.

Home minister Amit Shah tested Covid positive

#COVID19 | #CoronaVirus | #AmitShah

தளபதி ரசிகர்கள் இந்தளவுக்கா கீழ இறங்குவாங்க.? கிண்டலடிக்கும் தல ரசிகர்கள்

தளபதி ரசிகர்கள் இந்தளவுக்கா கீழ இறங்குவாங்க.? கிண்டலடிக்கும் தல ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigil noticeதமிழ் சினிமாவில் விஜய்க்கு உள்ள மாஸ் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இவரது ரசிகர்களும் அடிக்கடி மாஸ் விஷயங்களை செய்து வருகின்றனர்.

பிரம்மாண்ட கட் அவுட் முதல் FDFS வரை இவர்களின் வரவேற்பும் பெரிய அளவில் இருக்கும்.

ட்விட்டர் டிரெண்டிங்கிலும் அடிக்கடி அசத்தி வருவது இவர்களின் வழக்கம்.

இந்த நிலையில் நாளை ஆகஸ்ட் 2 மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் விஜய் நடித்த பிகில் படத்தை திரையிட உள்ளனர்.

இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் பிட் நோட்டீஸ் போஸ்டர் அடித்துள்ளனர்.

அதில்…. பிகில் படத்தை பாருங்க.. டிஆர்பி யை உயர்த்துங்க என்ற வாசகத்தை அடித்துள்ளனர்.

பட ரிலீசுக்கு போஸ்டர் அடித்த காலம் போய்… இப்ப இவ்வளவு கீழ் இறங்கி விட்டார்களே என நெட்டிசன்கள் & தல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Attachments area

More Articles
Follows