தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் இன்று 27 பிப்ரவரி சென்னையில் நடந்தது.
இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2,600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட வாக்களிக்கப்பட தகுதியுடைய உறுப்பினர்களாக 1,900 பேர் உள்ளனர்.
இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.
செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது.
காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
இதனை அடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு இயக்குநர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 உட்பட 1,525 ஓட்டுகள் பதிவாகின.
மொத்தம் பதிவான வாக்குகள் -1,525
செல்வமணி பெற்ற வாக்குகள் -955
பாக்யராஜ் பெற்ற ஓட்டுகள் – 566.
ஆக 389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர் கே செல்வமணி இயக்குனர் சங்கத் தலைவராகிறார்.
Tamil Cinema Directors Union Election Result RK Selvamani won
மோதிய இரு அணிகள் விவரம் இதோ… :
புதுவசந்தம் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. இமயம் அணியின் தலைவர் பாக்யராஜ்.
புது வசந்தம் அணியில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயகுமார், பொருளாளர் பதவிக்கு பேரரசு ஆகியோர் போட்டியிட்டனர்.
புது வசந்தம் அணியில் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இயக்குநர்கள், சுந்தர் சி, ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு இயக்குநர்கள் மனோஜ்குமார், மனோபாலா, ரமேஷ்கண்ணா, வெங்கடேஷ், சரண், ரவிமரியா, திருமலை, நம்பிராஜன் நம்பி, ஆர்.கே. கண்ணன், முத்துவடுகு, ரமேஷ் பிரபாகரன், க்ளாரா ஆகியோர் போட்டியிட்டனர்.
இமயம் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு ஆகியோர் போட்டியிட்டனர்.
இமயம் அணியில் இணைச் செயலாளர்கள் பதவிக்கு ஜெகதீசன், ஜெனிஃபர் ஜூலியட், கமலக்கண்ணன் என்கிற விருமாண்டி, ராஜா கார்த்திக், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், பாலசேகரன், கே.பி.ஜெகன், நாகேந்திரன், கே.பி.பி. நவீன், பாண்டியராஜன், பிரபாகர், சசி, சிபி, ஸ்டேன்லி, சாய் ரமணி வேல்முருகன் ஆகியோர் போட்டியிட்டனர்.