தலையணை மட்டுமே ஆடை.!; பில்லோ சேலஞ்சில் தமன்னா தாராளம்

தலையணை மட்டுமே ஆடை.!; பில்லோ சேலஞ்சில் தமன்னா தாராளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamannah looks alluring in Pillow challengeகொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வதை விட இணையத்தில் பிரபலங்கள் செய்யும் சேலஞ்ச் சேட்டைகள் நம்மை தினம் கொல்கிறது எனலாம்.

கொரோனா ஊரடங்கால் பலர் வீட்டில் முடங்கியிருப்பதால் எதையாவது செய்து அதை ஒரு சேலஞ்ச் என உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர்.

அப்படிதான் புடவை சவால் உருவானது. அது போல் பில்லோ சேலஞ்ச்சும் வைரலானது.

அதாவது முக்கியமாக பெண்கள் தங்கள் உடலில் எந்த ஒரு ஆடையும் இல்லாமல் தலையணையை மட்டுமே வைத்து உடலை மறைக்க வேண்டும்.

பல நடிகைகள் செய்திருந்தனர். இப்போது தமன்னாவும் செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட போட்டோ தற்போது இணையத்தை சூடாக்கியது.

Tamannah looks alluring in Pillow challenge

உலக சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா வேடத்தில் கீர்த்தி?

உலக சாதனை பெண் இயக்குனர் விஜய நிர்மலா வேடத்தில் கீர்த்தி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award winner Keerthy to play Vijaya Nirmala in biopic

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மகாநடி (மகாநதி) என்ற படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து காட்டினார் கீர்த்தி சுரேஷ்.

இதே வடம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது.

இந்த படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு வரலாற்று காவியத்தில் நடிக்க கீர்த்தியுடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகவுள்ளது.

National award winner Keerthy to play Vijaya Nirmala in biopic

இதற்கு முன் OTT-யில் படமே ரிலீஸாகலையா..? சூர்யாவை மட்டும் எதிர்ப்பது ஏன்?

இதற்கு முன் OTT-யில் படமே ரிலீஸாகலையா..? சூர்யாவை மட்டும் எதிர்ப்பது ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya movie release issue and List of OTT release moviesசூர்யா தயாரிப்பில் ஜோதிகா நாயகியாக நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர்கள் திறக்க இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகும். மேலும் மற்ற நாடுகளில் தியேட்டர்கள் திறக்க இன்னும் 6 மாதங்கள் கூட ஆகலாம்.

அதுவரை படத்தை ரிலீஸ் செய்யாமல் இருந்தால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாம்.

எனவே தான் படத்தை பல எதிர்ப்புகளை மீறியும் இணையத்தில் வெளியிட உள்ளனர்.

இதற்கு முன் வேறு படங்கள் இணையத்தில் வெளியாகவில்லையா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

நிறைய படங்கள் ரிலீஸாகியுள்ளதே. அப்படியென்றால் சூர்யாவுக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி..?

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படமும் இதுபோல் நேரிடையாக இணையத்தில் வெளியானால் தியேட்டர்களின் நிலை என்னாவது? என்பதுதான் இந்த எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

காரணம் சூர்யா ஒரு முன்னணி நடிகர். அவரின் படங்கள் தியேட்டரில் வெளியானால் தியேட்டர்களுக்கு லாபம் கிடைக்கும்.

ஒருவேளை புது முயற்சியாக சூர்யா ஓடீடீ (இணையத்தில்) படத்தை வெளியிட்டால் அவரை தொடர்ந்து பல முன்னணி தயாரிப்பாளர்களும் இந்த நிலையை தொடர வாய்ப்புள்ளது.

இதனால் தியேட்டர்களை ஒரேடியாக மூடும் நிலை உருவாகலாம் என்ற பயமும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

எனவே இந்த விவகாரத்தில் சூர்யா என்ன நிலையை எடுக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கு முன் நேரிடையாக இணையத்தில் வெளியான படங்கள் எவை..?

பிரகாஷ்ராஜ் நடித்த ‘சில சமயங்களில்’ படம் 2018ல் நெட்பிளிக்சில் வெளியானது. வெங்கட் பிரபுவின் ‘ஆர்கே நகர்’ என்ற படம் 2019ல் நெட்பிளிக்ஸில் வெளியானது.

2019ம் ஆண்டு ஜீ 5 இணையத்தளத்தில் ‘சிகை, களவு, இக்லூ’ ஆகிய படங்கள் வெளியானது.

இந்த படங்களுக்கு எல்லாம் எந்தவித எதிர்ப்பையும் தியேட்டர்காரர்கள் காட்டவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இவை ஒரு புறம் இருந்தாலும் டாப் ஹீரோஸ் படங்களை மட்டுமே ஓடீடீ வெளியிட நிறுவனங்கள் காத்திருக்கிறது.

சின்ன பட்ஜெட் படங்களை அவர்கள் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.

அப்படியிருக்கையில் தியேட்டர்களை முற்றிலுமாக தயாரிப்பாளர்களால் புறக்கணிக்கவும் முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

Suriya movie release issue and List of OTT release movies

ரஜினி பட கடையை கூட டைட்டிலாக்கிய சார்லி & கோமாளி டைரக்டர்

ரஜினி பட கடையை கூட டைட்டிலாக்கிய சார்லி & கோமாளி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

19 year old Karuppaiah directed Shanmugam Saloonபி. வாசு இயக்கிய குசேலன் படத்தில் ரஜினி, மீனா, பசுபதி, வடிவேலு, சோனா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் வடிவேலுவின் பெயர் சண்முகம். இவர் சலூன் வைத்திருப்பார்.

ஒரு காட்சியில் கூட சலூன் கடை சண்முகம் என்று வடிவேலுவை ரஜினி அழைப்பார்.

தற்போது சண்முகம் சலூன் என்ற பெயரே ஒரு சினிமாவுக்கு டைட்டில் ஆகியுள்ளது.

இந்த படத்தில் சார்லி மற்றும் கோமாளி பட டைரக்டர் பிரதீப் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

19 வயதான இளைஞர் கருப்பையா ராம் என்பவர் இயக்க பிரணவ் முனிராஜ் இசையமைக்கிறார்.

கிருஷ்ணா சக்தி ஒளிப்பதிவு செய்ய அருண் எடிட்டிங் செய்துள்ளார்.

சொக்கலிங்கம் மற்றும் உண்ணாமலை ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை மே 1 ஆம் தேதியன்று மாலை 5 மணிக்கு யூடிப்பில் ரிலீஸ் செய்கின்றனர்.

19 year old Karuppaiah directed Shanmugam Saloon

BREAKING சூர்யா படங்களை இனி தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது.; வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)

BREAKING சூர்யா படங்களை இனி தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாது.; வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theatre Owners Association decides they wont release Suriya moviesநடிகர் சூர்யா தயாரிப்பில் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படம் மார்ச் இறுதியில் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வெளியாகவில்லை.

மார்ச் 17ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு விரைவில் தளர்த்தப்பட்டாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான தியேட்டர்களை நிச்சயம் திறக்க விடமாட்டார்கள்.

மேலும் பல படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் தியேட்டர் கிடைப்பதிலும் சிக்கல் உருவாகும்.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை திரையில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக OTT இணையதளமான அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலர் பன்னீர் செல்வம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்…

பொன்மகள் வந்தாள் படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மொத்த திரையுலகமும் நெருக்கடியில் இருக்கும்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடைமுறையில் உள்ள பழக்கத்தை தகர்த்து 1000 திரையரங்க உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

தொடர்பு கொண்ட போது தயாரிப்பாளர் நமது கோரிக்கைகளை ஏற்பதாய் இல்லை.

ஆதலால் இனி அந்த தயாரிப்பாளர் (சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்) மற்றும் அவரை சார்ந்தோர் வெளியிடும் அனைத்து படங்களையும் OTT Platformல் மட்டுமே வெளியிட்டு கொள்ளட்டும் என்பது அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

R Panneerselvam
General Secretary
Tamil Nadu Theatre Owners Association

Theatre Owners Association decides they wont release Suriya movies

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா ஜோடியாக நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தையும் சூர்யாவே தன் சொந்த பட நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். எனவே இந்த படத்தின் ரிலீசுக்கு பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

Watch the video here…

BREAKING உண்மையை சொன்னால் சிறையா.? தமிழக அரசை கேட்கும் கமல்

BREAKING உண்மையை சொன்னால் சிறையா.? தமிழக அரசை கேட்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal supports Media and slams Tamil Nadu Governmentகோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றிவந்த சமையல்காரர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், முன் ஏற்பாடு இன்றி கேன்டீனை கல்லூரி நிர்வாகம் மூடியது.

இதனால், 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உணவு இன்றி தவித்து வந்தனர்.

தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க கல்லூரி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளையாவது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தும் தற்போதைய சூழலில் கல்லூரி நிர்வாகத்தால் செய்து தர முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவர்கள் தங்களுக்கு உணவு, தண்ணீர் வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு சில தினங்கள் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக கூறி, கோவையிலிருந்து செயல்படும் டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர், செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர், ஒளிப்பதிவாளரை விடுவித்த காவல்துறையினர், டிஜிட்டல் ஊடகத்தின் ஆசிரியர் சாம் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளதாவது…

கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்… என கமல் கேட்டுள்ளார்.

Kamal supports Media and slams Tamil Nadu Government

More Articles
Follows