சூர்யா அதிரடி..: ஆன்லைனில் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… ரூ. 5 கோடி நிதியுதவி

சூர்யா அதிரடி..: ஆன்லைனில் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… ரூ. 5 கோடி நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Soorarai Pottru to release on OTT Amazon சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரை போற்று’

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது

சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது.

அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில்.

மும்பை, இந்தியா, XX 2020: சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான சூரரை போற்று படத்தின் நேரடி சேவையின் உலகளவிலான வெளியீடு 2020, அக்டோபர் 30-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் 200 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரதம உறுப்பினர்கள் அக்டோபர் 30 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் (அனைத்து மொழிகளிலும் டப்ஸ்) அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பலாம்.

“இயக்குனர் சுதாவிடம் கதையை நான் கேட்ட தருணத்தில், அதை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த படத்தை 2D என்டர்டெயின்மென்ட்டின் கீழ் தயாரிக்கவும் விரும்பினேன்”, என்கிறார் சூர்யா.

அவர் மேலும் கூறுகிறார், “ கேப்டன் கோபிநாத்தின் பாத்திரம் எனக்கு ஒரு சவாலாக இருந்தபோதிலும், இறுதியாக எங்கள் படைப்பை பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது!

நாம் இதற்கு முன் சந்தித்திராத இப்போதிருக்கும் இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் தங்கள் வீடுகளிலிருந்து “சூரரை போற்று”- ஐப் பார்க்க முடியும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த படம் எங்கள் அன்பின் உழைப்பு, இது இப்போது உலக பார்வையாளர்களை மகிழ்விக்கப் போகிறது என்பதில் சந்தோஷமாக உணர்கிறேன்.

சூரரை போற்று திரைப்படம் வெளியியிட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ‘5 கோடி ரூபாய்’ பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும், பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த காலத்தில்’ முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ருபாய் பகிர்ந்தளிக்கப்படும், உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விஜய் சுப்பிரமணியம்: அமேசான் ப்ரைம் வீடியோவின் இந்திய இயக்குநரும், உள்ளடக்கத்தின் தலைவர் கூறுகையில்…

“சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொன்மகள் வந்தாள் திரைப்படத்துக்கு எங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா நடித்த சூரரை போற்றுவின் உலகளாவிய பிரீமியர் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு விருந்தளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அமேசான் ப்ரைம் வீடியோவில். ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையும் சாதனைகளும் பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் – மேலும் இதுபோன்ற ஒரு மேம்பட்ட கதையை எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ”

சுதா கொங்கரா பகிர்ந்துகொள்கிறார், “சூர்யாவை இயக்குவது ஒரு மகிழ்ச்சியான விஷயம். கேப்டன் கோபிநாத் கதாபாத்திரத்திற்கு அவர் தான் எனது முதல் மற்றும் கடைசி தேர்வாக இருந்தார். அமேசான் ப்ரைம் வீடியோவில் படத்தை பிரீமியர் செய்வது ஒரு புதிய அனுபவம் மற்றும் அதை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

உலகெங்கிலும், பல்வேறு வகையான மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்பது ஒரு படைப்பாளருக்கு உற்சாகமான விஷயம் தான்.

Suriyas Soorarai Pottru to release on OTT Amazon

இஷாந்த் & தீப்தி சர்மாவுக்கு அர்ஜுனா.; மாரியப்பன் & ரோகித் சர்மாவுக்கு கேல் ரத்னா.; விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

இஷாந்த் & தீப்தி சர்மாவுக்கு அர்ஜுனா.; மாரியப்பன் & ரோகித் சர்மாவுக்கு கேல் ரத்னா.; விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் வீராங்கனைகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி கவுரவித்து வருகிறது.

ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தங்கள் துறைகளில் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து மத்திய விளையாட்டுத்துறைக்கு விருதுக்காகப் பரிந்துரை செய்வர்.

தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர்களுக்கு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், மற்ற வீரர்கள் மற்ற விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

2016ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு.. டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.

இவர்களை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா அட்னானு தாஸ் (வில்வித்தை), டூட்டி சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்), சுபேதர் மணிஷ் கவுசிக், லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) உள்ளிட்ட மொத்தம் 27 பேருக்கு ஆகியோருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

mariyappan

Ishant-Sharma

ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் இணையும் “தாழ் திறவா ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர் வரை ஒவ்வொன்றையும் மக்கள் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைத்திருப்பார்கள். அதுவே படத்துக்கு நல்ல ஒப்பனிங்கை எடுத்து வரும். இதற்கு உதாரணமாகப் பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் கண்டிப்பாக இடம்பெறவுள்ள படம் தான் ‘தாழ் திறவா’

தலைப்பு வித்தியாசத்துடன் மட்டும் படக்குழு களமிறங்கவில்லை. வித்தியாசமான கதைக்களம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒருசேரப் படத்தில் அமைந்துள்ளது. பரணி சேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இது எந்த மாதிரியான கதைகளம் என்பதையே யூகிக்க முடியாத அளவில் வடிவமைத்துள்ளது படக்குழு.

‘தாழ் திறவா’ படம் குறித்து இயக்குநர் பரணி சேகரனிடம் கேட்ட போது, “இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். அடுத்த காட்சி என்ன, என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் வரை ஒரு சேர இருப்பது போல் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளேன்.

இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள். இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ். ஒரு சின்ன ஊருக்கும் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை.

ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதில் சுமார் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும். இதனை ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த செந்தில் தலைமையில் ‘தாழ் திறவா’ கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு கதைக்கு நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்துவிட்டால், எதுனாலும் சாத்தியம் தான் என்பார்கள். அந்த வகையில் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர்களாக சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ், எடிட்டராக மணிகண்டன், கலை இயக்குநராக ராகவா குமார், ஆடை வடிவமைப்பாளராக சுகி, மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் ஆகியோர் கவனித்துக் கொண்டார்கள்.

ஒவ்வொருவருமே தங்களுடைய பணியை ரொம்பவே புரிந்து, ஆத்மார்த்தமாகச் செய்துள்ளனர். கண்டிப்பாக இவர்களுடைய ஒவ்வொருவருடைய பணியுமே உங்களை அசர வைக்கும். இப்போதைக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளோம். விரைவில் அடுத்டுத்த அப்டேட்களுடன் உங்களை ஆச்சரியப்படுத்துவோம் என்பதை உறுதியாகச் சொல்வேன்” என்று தெரிவித்தார்.
thaazh thiravaa

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா பரவ மாளவிகா தான் காரணமா.?

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா பரவ மாளவிகா தான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer malavika spbபிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு எக்மோ & வெண்டிலேட்டா் கருவிகளின் துணையுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி.க்குச் சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் சிகிச்சையளித்து வருகின்றனர்.

எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகமும் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அவரது மகன் சரண் தினமும் தெரிவித்து வருகிறார்.

ஆனால் எஸ்.பி.பி்க்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

கடந்த ஜூலை 30, 31-ல் நடைபெற்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி சூட்டிங்கில் பாடகர் எஸ்.பி.பி. ராமோஜி ஃபிலிம் ஸ்டூடியோவில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் எஸ்.பி.பி.யுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற பாடகி மாளவிகா, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

எனவே மாளவிகாவினால் தான் எஸ்.பி.பிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது என தகவல் பரவியது.

இந்த நிலையில் பாடகி மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.

“கடந்த 5 மாதங்களில் நானோ என் குடும்பத்தினரோ வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை.

டிவி படப்பிடிப்புக்காக தான் முதல்முறையாக வெளியே வந்தேன்.

எஸ்.பி.பி. பங்கேற்ற நிகழ்ச்சி ஜூலை 30 அன்று படமாக்கப்பட்டது.

சூட்டிங் 2-வது நாளில் பங்கேற்ற நான்கு பாடகிகளில் நானும் ஒருவர்.

ஒருவேளை எனக்கு கரோனா இருந்திருந்தால் என்னுடன் ஒப்பனை அறையைப் பகிர்ந்த தொகுப்பாளருக்கு கொரோனா வந்திருக்கும்.

எஸ்.பி.பி.க்கு கொரோனா என அறிந்தவுடன் நான் பரிசோதனை மேற்கொண்டேன்.

அதன் ரிசல்ட் ஆகஸ்ட் 8 அன்று கிடைத்தது.

என்னுடன் சேர்ந்து என் தந்தை, என் தாய், என் மகள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என் கணவருக்கு கரோனா இல்லை.

நாங்களும் இப்போது கடினமான சூழலில் உள்ளோம். எனவே வதந்திகளைப் பரப்பாதீர்.

வதந்தி பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்.

எங்களால் முடிந்த வரை மக்கள் பணி.; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.. – நாராயணசாமி

எங்களால் முடிந்த வரை மக்கள் பணி.; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.. – நாராயணசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

narayana samyபுதுச்சேரி… கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

அவர் பேசுகையில்…

`தனியார் மருத்துவக் கல்லூரிகள் தலா 300 படுக்கைகளை கொரோனா தொற்றாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தற்போது ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிகள் படுக்கைகளைக் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மட்டும் படுக்கைகளைக் கொடுக்கவில்லை எனப் புகார் வந்தது.

எனவே அந்த நிறுவனத்தை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், மாநில அரசு தானாக முன்வந்து அந்த மருத்துவக் கல்லூரிகளைக் கையகப்படுத்தி அங்குள்ள படுக்கைகள் முழுவதையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாற்றுவோம்.

முதல்வரின் கோவிட் நிவாரண நிதி மற்றும் மருத்துவத்துறை நிதியிலிருந்து தேவையான உபகரணங்களை வாங்கி வருகிறோம்.

தற்போது `ட்ரூநாட்’ (Truenat) இயந்திரங்களைக் காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமுக்கு அனுப்ப உள்ளோம்.

அதற்குத் தேவையான 10,000 சிப்புகள் வாங்குவதற்காக ரூ.1.30 கோடிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறேன்.

அந்த இயந்திரம் மூலம் நாம் ஆய்வுக்கூடத்துக்குச் செல்லாமல் 2 மணி நேரத்தில் கொரோனா முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல `ஆண்டிஜென்’ (Antigen) கிட்டுகளும் வாங்கப்பட்டது.

அதன் மூலம் கொரோனா உள்ளதா என்பதை 30 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவத்துறை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக பாடுபடுகிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நியமிக்கவும், ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எங்களால் முடிந்த வரை நானும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் மக்களுக்கு பணியை இரவு பகலாக செய்து வருகிறோம்”

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Ramachandran’s ‘Chennai to Madras’ Book Launch.; ஊரடங்கு பாதிப்பு – விஜய்சேதுபதி.; ஊரடங்கு பழகிட்டு – பார்த்திபன்

Ramachandran’s ‘Chennai to Madras’ Book Launch.; ஊரடங்கு பாதிப்பு – விஜய்சேதுபதி.; ஊரடங்கு பழகிட்டு – பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

photographer Ramachandranகடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் சென்னைவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னை உருவானதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு சென்னை தினம் நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு சென்னையின் பெருமையை பேசும் அரிய படங்களை தன் கேமரா கண்களில் படமாக்கியுள்ளார் பிரபல ப்ளேபாய் போட்டோகிராபர் எல். ராமசந்திரன். இவர் சென்னையை சேர்ந்தவர்.

சென்னையின் அழகியல் பேசும் புகைப்படங்கள் கொண்ட ‘சென்னை டூ மெட்ராஸ்’ புகைப்பட புத்தக வெளியீட்டு விழாவை பிரபலங்கள் முன்னிலையில் நடத்தியுள்ளார்.

சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தி ஆர்ட் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கின் போது பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் எடுத்த புகைப்படங்கள் புத்தகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் மூத்த பத்திரக்கையாளர் என்.ராம், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் பார்திபன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

புகைப்பட புத்தக தொகுப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.

இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது…

சென்னை பற்றிய போட்டோக்களை பார்கும்போது சென்னைக்கு இத்தனை பெருமை இருக்கிறதா? என வியக்கிறேன்.

அறிவுதான் கடவுள் எனவும் அறிவின் பார்வை முக்கியமானது எனவும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் கொரோனா ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டும் மீண்டுவரவேண்டும் எனவும் பேசினார்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில்…

இப்போது கொரோனா ஊரடங்கு அனைவருக்கும் பழகிவிட்டது.

நல்ல செய்தியை ஊடகங்கள் முந்தி தருவதில் தவறில்லை.

ஆனால் துக்க செய்தியை யார் முந்தி தருவது என போட்டி வேண்டாம்.

துக்க செய்திகளை நிதானமாக தரவேண்டும்.

ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் அருமையாக பயன்படுத்தியுள்ளார் எல் ராமசந்திரன். வாழ்த்துகள்.” என பேசினார் பார்த்திபன்.

More Articles
Follows