உலகின் மிகப்பெரிய சூர்யா கட் அவுட்க்கு கெட் அவுட் சொன்ன அதிகாரிகள்

உலகின் மிகப்பெரிய சூர்யா கட் அவுட்க்கு கெட் அவுட் சொன்ன அதிகாரிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya fans set Worlds Biggest Cut Out for NGK releaseசூர்யா நடிக்க செல்வராகவன் இயக்கியுள்ள படம் தான் என்.ஜி.கே.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நாளை இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், திருத்தணியில் உள்ள சூர்யா ரசிகர்கள் வான் உயர்ந்த கட்-அவுட்டை வைத்துள்ளனர்.

இந்த கட் அவுட் உயரம் 215 அடி என்பதால் இதுவே உலகின் மிகப்பெரிய கட் அவுட் என சாதனை படைத்தது.

எனவே இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் முறையாக அனுமதி பெறவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் கட்-அவுட்டை அகற்றினர்.

இது சூர்யா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Suriyas record breaking NGK cutout removed

இது எங்க இந்திய கலர்..; 2 கோடி விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

இது எங்க இந்திய கலர்..; 2 கோடி விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sai Pallavi rejects fairness advertisement worth Rs 2 croreதமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி.

இவர் சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் நாளை ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இவர் ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்க வந்த ஒரு விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

அது பற்றி அவர் கூறியதாவது…

நான் ஒரு டாக்டர் என்பதால் கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்படும் அழகு பொருட்களெல்லாம், உடலுக்கு எவ்வளவு ஆபத்தானவை என்பது நன்றாகவே தெரியும்.

அப்படியிருக்கும்போது, முக அழகு கிரீம் ஒன்றில் நடிக்க கேட்டனர்.

பணத்துக்காக, உடலுக்கு ஆபத்தான ஒரு விஷயத்துக்கு நாமே ஏன் மாடலாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.

எனவே விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டேன். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார்கள்.

எனக்கு வாழ்க்கையில் பெரிய தேவைகள் இல்லை. அதனால், பணம் ஒரு பொருட்டல்ல.“ என தெரிவித்துள்ளார்.

Sai Pallavi rejects fairness advertisement worth Rs 2 crore

கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

கடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அதகள காமெடி!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)“போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது” என்ற அளவில் யோகிபாபுவின் கொடி கோடம்பாக்கத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றிபெற்று வரும் நிலையில், யோகிபாபுவை முழுக்க முழுக்க கதையில் புகுத்தி படத்தையே வேறோர் காமெடி தளத்தில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன். R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள “கடலை போட ஒரு பொண்ணு வேணும்” படத்தை வேகமாக எடுத்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது,
“யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப்படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகிபாபுவைப் பார்த்திருக்கிறோம். இந்தப்படத்தில் யோகிபாபு பண்ணும் தொழிலே பக்கா காமெடியாக இருக்கும்.
யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப்பெண்களை அவர் கடலைப் போட்டு உஷார் பண்ணுவார் என்பது தான் படத்தின் ஹை பாயிண்ட் காமெடி. கடலைப்போட்டு கடலைப்போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலைப்போட பெண் தேடும் ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு பிதுங்கும். முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப்படம் கமர்சியலாக பெரிய வெற்றிபெறும். அதற்கான எல்லா சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்” என்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன். இவர் நேர்த்தியான இயக்குநர் என பெயர்பெற்ற சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

படத்தில் யோகிபாபு பெரிய பில்லர் என்றால், ஹீரோ அசார் பெரிய எனர்ஜி. சின்னத்திரை மூலமாக மக்களை மகிழ்வித்த அசாருக்கு இப்படம் பெரிய திரையில் நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும் என்கிறார்கள். மேலும் படத்தில் சாஜித், மன்சூர் அலிகான், செந்தில், சுவாமிநாதன், தீனா, மனோகர், காஜல், மற்றும் பலர் நடித்துள்ளனர். இனியன் J.ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜீபின் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விரைவில் நடைபெற இருக்கிறது.

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை – சிறகு

உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை – சிறகு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.
சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது ‘சிறகு’.

‘மெட்ராஸ் ‘, ‘கபாலி’, ‘வடசென்னை ‘, ‘சண்டைக்கோழி-2 ‘, ‘பரியேறும் பெருமாள் ‘, ஆகிய படங்கள் மூலம் நமக்கு அறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன்.

நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகிய இளம் அக்ஷிதா இப்படத்தின் நாயகியாகிறார்.

டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட் நட்புக்காக இணைந்துள்ளார் .

காட்சிகளை கண்களுக்குக் குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர் ராஜா பட்டாச்சார்ஜி .’பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமானவர்.

மனதை வருடும் பாடல், இதயத்தை நனைக்கும் பாடல், துள்ளலான பாடல் எனப் புகுந்து விளையாடியிருக்கிறார் அரோல் கொரேலி.

நேர்த்தியான படத்தொகுப்பைச் செய்திருப்பவர், அருண் குமார் வி .எஸ்.

திரைப்படத்துறையில் அனுபவம் மிக்க எக்சிகியூடிவ் புரொடியூசராக பல ஆண்டுகள் பணியாற்றிய மாலா மணியன் தனது FIRST COPY PRODUCTIONS (ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ்) மூலம், ‘சிறகு’, தயாரித்துள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட குட்டி ரேவதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் .

தயாரிப்பு : மாலா மணியன் (First Copy Productions)

எழுத்து & இயக்கம் : குட்டி ரேவதி

ஒளிப்பதிவு : ராஜா பட்டச்சார்ஜி

இசை : அரோல் கொரேலி

படத்தொகுப்பு : அருண் குமார் VS

பாடல்கள் : குட்டி ரேவதி , அறிவு

கதாநாயகன் : ஹரி கிருஷ்ணன் கதாநாயகி : அக்ஷிதா

முக்கிய கதாபாத்திரத்தில் : டாக்டர் வித்யா

நிவாஸ் ஆதித்தன்

நட்புக்காக : காளி வெங்கட்

சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள். கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது தடங்களை அற்புதமாக பதித்து வருகிறார். மேலும் அவர் கரியரில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,
மஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

இவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.

சினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை S.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாக கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.

அன்பு அறிவு மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.
எடிட்டராக தனது சிறப்பான பணியை
K.j வெங்கட் ரமணன் செய்துவருகிறார்.
இப்படத்தின் வசனங்களை அருள்செழியன் எழுத
கலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் அவர்களின் 14-வது தயாரிப்பாகும்.

“புல்லி மூவிஸ்” வழங்க “சத்யராம்” தயாரிக்கும் படம் “கண்டதை படிக்காதே”.

“புல்லி மூவிஸ்” வழங்க “சத்யராம்” தயாரிக்கும் படம் “கண்டதை படிக்காதே”.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇயக்குனர் ஜோதிமுருகன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார், இவர் ராதாமோகன் ‘சிம்புதேவன் ,வேலு பிரபாகரன், போன்ற பிரபல இயக்குனரிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் இவர் இதற்கு முன்னால் “கபடம்” என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானார்.

“கபடம்” படத்தை மிகவும் சிறிய பட்ஜெட்டில் இயக்கினார் 2014-ல் ரிலீஸான அந்த படத்தை டிஜிட்டல் Platform ஆனா “அமேசான்” நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை விட அதிக விலை கொடுத்து வாங்கியது.

தான் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான “கண்டதை படிக்காதே” படமும் டிஜிட்டல் Platform ஆனா “அமேசான்” உடன் பேச்சுவார்தை நடந்துகொண்டுடிருக்கிறது.

“கண்டதை படிக்காதே” படம் பற்றி கூறுகையில் இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள் இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்பமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும் படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.

படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார் இவர் தமிழில் “பயமறியான்” “கபடம்” ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார், திருப்பாச்சி புகழ் “பான்பராக் ரவி ஆர்யான்” வில்லனாக நடித்திருக்கிறார்,

சண்டைக் காட்சிகளில் ஆதித்யாவும் பான்பராக் ரவி ஆர்யானும் உயிரை பணயம் வைத்து நடித்திருக்கிறார்கள்.

“சபிதா ஆனந்த்” முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் படப்பிடிப்பு தளத்தில் “சபிதா ஆனந்த்” தன் வாழ்நாளில் இப்படி ஒரு அற்புதமான கேரக்டரில் முதல் தடவையாக தான் நடிப்பதாக கூறினார்,

படத்தின் தயாரிப்பாளரூம் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“பிரீத்தி” “சுஜி “வைஷாலி” “ஜென்னி” என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள் மற்றும் “நவீன்” “சீனு” “மணிமாறன்” “நாகராஜ்” போன்ற சினிமா பட்டாளமே நடித்திருக்கிறது.

ஒளிப்பதிவு “மகிபாலன்” இசை “செல்வா ஜானகிராஜ்” எடிட்டிங் “சுரேஷ் அர்ஸ்” ஸ்டன்ட் “ஆக்ஷன் பிரகாஷ்” கலை “முனி கிருஷ்ணா” ஓலி வடிவமைப்பு தரணிபதி”, பாடல்கள் “ரவிதாஸ்” எழுத இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் இயக்குனர் “ஜோதி முருகன்”,

படப்பிடிப்பு கொடைக்கானல், ஊட்டி, சென்னை, ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டடுள்ளது.

More Articles
Follows