சூர்யாவுடன் இணையும் தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் & தயாரிப்பாளர்..?

சூர்யாவுடன் இணையும் தனுஷின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் & தயாரிப்பாளர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் உடன் ஒரு படம் & வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என சூர்யா கைவசம் படங்கள் உள்ளன.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

‘வாடிவாசல்’ படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

இந்த நிலையில் சூர்யா உடன் கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்தப் படத்தையும் கர்ணன் படத்தயாரிப்பாளர் தாணு தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கர்ணன் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு முன்பே விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Suriya teams up with Karnan movie team

புரோமோசனுக்கு வராமல் பிகு பண்ணிய த்ரிஷா.; ‘பரமபதம்’ புரொடியூசர் எடுத்த நடவடிக்கை

புரோமோசனுக்கு வராமல் பிகு பண்ணிய த்ரிஷா.; ‘பரமபதம்’ புரொடியூசர் எடுத்த நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருஞானம் இயக்கி தயாரித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இதில் த்ரிஷா முதன்மை நாயகியாக நடித்துள்ளார்.

இவருடன் நந்தா, ரிச்சர்டு, வேல ராமமூர்த்தி, சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீசுக்கு ரெடியானாலும் ஓரிரு ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது.

தற்போது ஓடிடி தளத்தில் ஹாட் ஸ்டார் டிஸ்னியில் இப்படம் வெளியாகவுள்ளது.

எனவே அந்த ஓடிடி நிறுவனம், த்ரிஷாவிடம் படத்திற்கு புரமோசன் செய்ய கேட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான திருஞானம் நடிகை திரிஷாவை அணுகியுள்ளார்.

ஆனால் த்ரிஷா மறுத்துவிட்டாராம்.

இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் த்ரிஷா மீது புகார் அளித்துள்ளார் திருஞானம்.

தயாரிப்பாளர் சங்கம் த்ரிஷாவிடம் விளக்கம் கேட்கவே வேறு வழியில்லாமல் புரமோசனுக்கு வர ஓகே சொல்லிவிட்டாராம் த்ரிஷா..

Trisha refuse to do promotion for Paramabadham Producer took action

சிம்பு & வெங்கட் பிரபுவிற்கு ‘மாநாடு’ ஒரு மைல்கல்.. – சுரேஷ் காமாட்சி

சிம்பு & வெங்கட் பிரபுவிற்கு ‘மாநாடு’ ஒரு மைல்கல்.. – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மாநாடு’.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்பட ‘மாநாடு’ காட்சிக்காக பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கினார். அப்போது மண் தரையில் படுத்து சிம்பு ஓய்வு எடுத்த போட்டோ ஒன்றும் வைரலானது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதாவது…

‛‛நான் பார்த்த வரைக்கும் மாநாடு படம் சிம்புவிற்கு, வெங்கட்பிரபுவிற்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

Maanadu will be mile stone for STR and Venkat Prabu says Suresh Kamatchi

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்பவுமே ஹிட் குடுத்தா எப்படி தனுஷ்.!? – விவேக்

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்பவுமே ஹிட் குடுத்தா எப்படி தனுஷ்.!? – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆடுகளம் & அசுரன் ஆகிய 2 படங்களின் மூலம் 2 தேசிய விருதுகளை பெற்றதால் தனுஷின் படங்களுக்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ரல் 9ல் ரிலீசானது.

கொரோனா காலம் என்பதால் படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்காது என சிலர் நினைத்த நிலையில் ‘கர்ணன்’ வசூல் வேட்டையாடி வருகிறான்.

ஏப்ரல் 9 ரிலீஸ் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ 10.20 கோடிகளை வசூலித்துள்ளது. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் ஏப்ரல் 10ல் அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், வசூல் சற்று சரியத் தொடங்கியது.

ஆனால் தமிழக அரசு கூடுதலாக காட்சிகளை திரையிட்டுக் கொள்ள அனுமதியளித்தது.

இதனையடுத்து 2ம் நாளான நேற்று சென்னையில் மட்டும் ரூ.52 லட்சம் வசூல் செய்துள்ளது.

மொத்தமாக சென்னையில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ‘கர்ணன்’ படத்தின் வசூல் ரூ.1.45 கோடி எனத் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் விவேக் படத்தை பார்த்துவிட்டு கூறியுள்ளதாவது….

“எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே.. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ! கர்ணன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் இவர்கள் இருவரும் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் உள்ள காமெடி காட்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Viveks appreciation for Dhanushs Karnan movie

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது..; பார்த்திபன-குறள்

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது..; பார்த்திபன-குறள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்த்திபன் ஒருவரே நடித்து இயக்கிய ‛ஒத்த செருப்பு சைஸ் 7′ படத்திற்கு பாராட்டுக்களும் இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன.

இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி வெளியானது.

இதனை அடுத்து ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்குகிறார் பார்த்திபன்.

இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து பார்த்திபன் அவரே நடிக்கவும் செய்கிறார்.

இந்த நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

அந்த வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள பார்த்திபன், ‛‛எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது. ஆமாம், இரவின் நிழலுக்கு ரஹ்மான் இசையமைப்பது பெருமை.

இதுவரை அருமையான 3 பாடல்களை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

Parthibans next film is titled Iravin Nizhal music by AR Rahman

பார்த்திபன் தன் ட்விட்டரில் ஏஆர்ஆர் பற்றி கூறியதாவது…

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது!

Yes SIR is IN (Iravin Nizhal)
பெருமை!
அருமையில் – 3 பாடல்கள் கைவசம்
அருகாமையில் இன்னொன்று-promotional song
So…
So hhaappppyy https://t.co/sj8tfZNoLG

‘அண்ணாத்த’ அப்டேட்..: தலைவர் கலக்குறாரு… பூரிப்பில் சூரி

‘அண்ணாத்த’ அப்டேட்..: தலைவர் கலக்குறாரு… பூரிப்பில் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க தயாரித்து வருகிறது.

இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

‘அண்ணாத்த’ 2021 தீபாவளியில் திரைக்கு வருகிறது.

2020 கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

அப்போது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.

ரஜினிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்த போதிலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் ரஜினி.

பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என திடீரென அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.

30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஜினியுடன் நடித்து வரும் காமெடி நடிகர் சூரி அந்த அனுபவம் பற்றி தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்… “Thalaivar shooting spotla kalakkuraru vera level energy..” என பதிவிட்டுள்ளார் சூரி.

Soori reveals Annatthe update and Rajinis Energy level

More Articles
Follows