சூர்யாவுக்காக ரசிகர்களே கட்சி தொடங்கி அரசியலுக்கு அழைத்து போஸ்டர்

சூர்யாவுக்காக ரசிகர்களே கட்சி தொடங்கி அரசியலுக்கு அழைத்து போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas statement about NEET exam and Education systemநீட் தேர்வு அச்சத்தால் அந்த தேர்வை எழுதாமல் 3 தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர்.

இதனால் வேதனையுடன் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகளை விமர்சித்தும் நீதிமன்றத்தை விமர்சித்தும் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார்.

இதனால் சில வழக்கறிஞர்களும் ஓரிரு அரசியல் கட்சிகளும் சூர்யாவை விமர்சித்தனர்.

இதனையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். அவரை அரசியலுக்கும் அழைக்கின்றனர்.

தற்போது ஒரு புதிய போஸ்டரை அடித்துள்ளனர். அதில்…

வாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள்…
அநீதிக்கு எதிராக குரல் இனி அரசியலில் ஒலிக்கட்டும்…
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள்…

என மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் சூர்யா கட்சிக்கு ’இளம் காளைகள் கட்சி’ என்ற பெயரையும் அவர்களே முடிவு செயது அறிவித்துள்ளனர்.

Suriya fans wall poster with Political Party name

Suriya fans wall poster with Political Party name

மீண்டும் ரீமேக்கில் பாலா; ஆர்.கே. சுரேஷ்க்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

மீண்டும் ரீமேக்கில் பாலா; ஆர்.கே. சுரேஷ்க்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan will launch Bala and RK Sureshs movie first lookநடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஒரு சில இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.

பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மகேந்திரன் பாலுமகேந்திரா, பாக்யராஜ், மணிரத்னம் உள்ளிட்டோர் தங்களுக்கென ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

கடந்த 20 வருடங்களில் ஷங்கர், பாலா, செல்வராகவன், வெற்றிமாறன், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் இதே பாணியில் பயணிக்கின்றனர்.

இதில் பாலாவின் படங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

இவர் பெரும்பாலும் ரீமேக் படங்களை இயக்குவதில்லை.

ஆனால் விக்ரம் மகன் துருவ்வுக்காக வர்மா என்ற படத்தை இயக்கினார்.

அந்த படம் முழுவதும் தயாரான நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டார் தயாரிப்பாளர். இது உலக வரலாற்றில் முதன்முறை என கூறப்படுகிறது.

அதன்பின்னர் துருவ் ஆதித்ய வர்மா என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவிட்டார் விக்ரம்.

அதன்பின்னர் பாலா எந்த படத்தையும் இயக்கவில்லை.

தற்போது தன் சொந்த நிறுவனமான பி ஸ்டுடியோ சார்பாக ஒரு படத்தை தயாரித்து வருகிறார் பாலா.
அதில் ஆர்கே. சுரேஷ், பூர்ணா உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இந்த படம் மலையாளத்தில் வெளியான ‘ஜோசப்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த புதிய பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 23ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan will launch Bala and RK Sureshs movie first look

போதை பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் நடிகைகள் சிகரெட் கேட்டு தகராறு..?

போதை பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் நடிகைகள் சிகரெட் கேட்டு தகராறு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sandalwood drug case Actress Ragini Sanjjanaa demanding cigarettes in Jailகன்னட சினிமா உலகை போதை பொருள் விவகாரம் ஆட்டி வைக்கிறது.

கன்னட நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகிய இருவரும் போதை பொருள் விவகாரத்தில் சிக்கினர்.

இதனை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் சிகரெட் மற்றும் மது பழக்கம் இருந்துள்ளதாம்.

எனவே இதனையடுத்து இவர்கள் சிகரெட் கேட்டு பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப். 21ல் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

Sandalwood drug case Actress Ragini Sanjjanaa demanding cigarettes in Jail

டைரக்டர் மிஷ்கினின் அடுத்த பட அப்டேட்

டைரக்டர் மிஷ்கினின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director mysskinசைக்கோ படத்திற்கு பிறகு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார்.

ஆனால் அந்த பட தயாரிப்பாளரும் நடிகருமான விஷாலுடன் ஏற்ப்பட்ட மோதலால் விலகினார்.

இந்த நிலைநில் தனது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பை வருகிற 20ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

வருகிற செப். 20ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு, அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Director Mysskins next film update on sep 20

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நிலைப்பாட்டில் மாற்றம் வரும்..- முன்னாள் IPS அண்ணாமலை

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நிலைப்பாட்டில் மாற்றம் வரும்..- முன்னாள் IPS அண்ணாமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

annamalai suriyaநீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்…

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.

மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.

மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.

என்று வேதனையுடன் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக சிங்கம் என வர்ணிக்கப்பட்ட முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை சூர்யா பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

நீட் ரிசல்ட்டுக்கு பின் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்.

நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நீட் தேர்வு ரிசல்ட் பதில் தரும் என பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இவர் அண்மையில்தான் பாஜக. கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya will change his stance on NEET after results says BJP leader annamalai

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு..; இப்படி ஒரு நடிகையா?

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு..; இப்படி ஒரு நடிகையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shalu shamuகோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருவதோடு, மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷாலு ஷம்மு ரசிகர்களுக்காக செய்த ஒரு விஷயத்தால், தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். பொதுவாக ரசிகர்கள் தான் தங்களது மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.

ஆனால், ஷாலு ஷம்முவோ தனது ரசிகர்கள் இருவரது பிறந்தநாளை கொண்டாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கும் ஷாலு ஷம்மு, அவ்வபோது தனது ரசிகர்களிடம் பேசுவது உண்டு. அப்படி பேசும் போது இரண்டு ரசிகர்கள் தங்களது பிறந்தநாளுக்காக அவரை வாழ்த்த சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்து கூறிய ஷாலு ஷம்மு, அவர்கள் பற்றி கேட்கும் போது, அவர்கள் அவருடைய வீட்டின் அருகே வசிப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து, கேக் வெட்டி அவர்களின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே கொண்டாடியிருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த இரண்டு ரசிகர்களும் உற்சாகமாக ஷாலு ஷம்முவுடன் தங்களது பிறந்தநாளை கொண்டாடியதோடு, இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாலு ஷம்முவை பாராட்டி வருகிறார்கள்.

Actress shalu shamu given surprise for her fans

More Articles
Follows