தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் என்ஜிகே.
இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் இசையமைத்துள்ளார்.
இந்த கூட்டணிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை மறுநாள் மே 31ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தை வரவேற்கும் நிலையில் சூர்யா ரசிகர்கள் அதிரடியாக மிகப்பெரிய கட் அவுட்தை திருத்தணியில் வைத்துள்ளனர்.
இதன் உயரம் மட்டும் 215 அடி என தெரிய வந்துள்ளது.
இதுவரை மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வைத்த கட் அவுட்களை இது மிஞ்சியுள்ளது.
ரஜினியின் பல படங்களுக்கு அவரது ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.
அதுபோல் சர்கார் பட ரிலீசின் போது கேரளாவில் விஜய்க்கு 175 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும், அதனைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்துக்காக அஜித்துக்கு திண்டுக்கல்லில் 190 அடியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டும் தான் மிகப்பெரிய கட்-அவுட் சாதனைகளாக இருந்தன.
மேலும் உலகத்தின் மிகப்பெரிய கட்அவுட் எனவும் ட்விட்டரில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யா ரசிகர்களின் இந்த சாதனை இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது எனலாம்.
Suriya fans set Worlds Biggest Cut Out for NGK release





