ஆர்யாவின் ‘அரண்மனை 3’ க்ளைமாக்ஸ் அப்டேட் பார்ய்யா..: 6 மாதம் சிஜி.. 16 நாட்கள் சூட்டிங்.. ரூ 1.5 கோடி.. இன்னும் நிறைய

ஆர்யாவின் ‘அரண்மனை 3’ க்ளைமாக்ஸ்  அப்டேட் பார்ய்யா..: 6 மாதம் சிஜி.. 16 நாட்கள் சூட்டிங்.. ரூ 1.5 கோடி.. இன்னும் நிறைய

தமிழில் நகைச்சுவை படங்களுக்கு, புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் சுந்தர் சி. குடும்பங்கள் கவலை மறந்து சிரித்து கொண்டாடும் வகையிலான படங்களை தருபவர் சுந்தர் சி.

இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்களில் நகைச்சுவையை புகுத்தி, குழந்தைகளும் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டது.

அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா நடிக்க, அரண்மனை 3 படம் ரிலீஸுக்கு ரெடியாகி உள்ளது.

அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளது.

இவ்வருடம் நம்மை வட்டு பிரிந்த நகைச்சுவை மன்னன் விவேக் அவர்கள் இப்படத்தில் மக்களை மகிழ்விக்கும் முழுமையானதொரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது.

முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது.

படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது.

முந்தைய இரு படங்களை விட, பிரமாண்ட பட்ஜெட்டிலும், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையுடனும் இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்:
இயக்கம் : சுந்தர் சி
ஒளிப்பதிவு : UK செந்தில்குமார்
இசை : C சத்யா
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் : குருராஜ்
சண்டை பயிற்சி : பீட்டர் ஹெய்ன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் : ஆவ்னி சினிமேக்ஸ்
தயாரிப்பாளர் : குஷ்பு

Sundar C in Aranmanai 3 to release in theaters soon.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *