கொரோனா நிவாரண நிதி..: சன் குழுமம் 10 கோடி; ஏஜிஎஸ் 50 லட்சம்

கொரோனா நிவாரண நிதி..: சன் குழுமம் 10 கோடி; ஏஜிஎஸ் 50 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SUN network and AGS donation for Corona relief fund கொரோனா வைரஸை தடுக்க உலக நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்திய அரசுக்கு உதவும் விதமாக இங்குள்ள பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் நிவாரண நிதியுதவி அளித்து வருகின்றனர்.

நடிகர்களில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் அதிகபட்சமாக 25 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சன் டிவி குழுமம் 10 கோடி ரூபாயை கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் சன் டி.வி குழுத்தின் 6 ஆயிரம் பணியாளிரின் ஒருநாள் ஊதியமும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிபுரிந்து வரும் தன்னார்வ அமைப்புகளுடன் சன் குழுமம் பணியாற்றும் என்றும் திரைத்துறை, தொலைக்காட்சியில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கும் சன் டிவி குழுமம் நிதியுதவி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை தயாரித்து வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாயை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

மேலும் 15 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது ஏஜிஎஸ்.

SUN network and AGS donation for Corona relief fund

BREAKING ரஜினி ஆசியுடன் ‘சந்திரமுகி-2’; பி. வாசு & லாரன்ஸ் கூட்டணி

BREAKING ரஜினி ஆசியுடன் ‘சந்திரமுகி-2’; பி. வாசு & லாரன்ஸ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava lawrence announces Chandramukhi 2 with Rajini blessing ரஜினிகாந்த் மற்றும் பி.வாசு கூட்டணியில் உருவான மன்னன், உழைப்பாளி உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இதே கூட்டணியில் உருவான சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ல் வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் சார்பாக பிரபு தயாரித்தார்.

இதில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தை உருவாக்க பி. வாசு திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ரஜினியின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படம் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது சந்திரமுகி 2 படத்திற்கு ரஜினி ஆசி வழங்கியுள்ளார்.

அதாவது ரஜினி இந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை பி. வாசு இயக்க சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இந்த அறிவிப்பை லாரன்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க தனக்கு அனுமதி கொடுத்த ரஜினிக்கு நன்றி கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Raghava lawrence announces Chandramukhi 2 with Rajini blessing

8 கிராமங்களை தத்தெடுத்து உணவளிக்கும் மோகன் பாபு-விஷ்ணு மஞ்சு

8 கிராமங்களை தத்தெடுத்து உணவளிக்கும் மோகன் பாபு-விஷ்ணு மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Great Gesture Mohan Babu and Vishnu Manchu adopt 8 villages கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் முடங்கியுள்ளன.

பல நாடுகளில் இதுவரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என மோடி அறிவித்திருந்தார்.

ஆனால் கொரோனாவை தாக்கம் தினமும் அதிகரித்துள்ளதால் இன்னும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் அவரது மகன் நடிகர் விஷ்ணு மஞ்சுவும் இணைந்து ஆந்திராவின் சந்திரகிரி தொகுதிக்கு உட்பட்ட எட்டு கிராமங்களை தத்தெடுத்து உணவளித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்களுக்கு தினசரி இரண்டு வேலை உணவு வழங்கி வருகின்றனர்.

இதற்காக தினசரி 8 டன் காய்கறிகள் தேவைப்படுகிறதாம்.

விஷ்ணு மஞ்சுவின் மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் தற்போது வெளிநாட்டில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Great Gesture Mohan Babu and Vishnu Manchu adopt 8 villages

உங்களுடன் இருப்பேன்… முதல்வர் நிவாரண நிதிக்கு மோகன்லால் உதவி

உங்களுடன் இருப்பேன்… முதல்வர் நிவாரண நிதிக்கு மோகன்லால் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covid19 crisis Mohanlal donates Rs 50 lakhs to CM Relief Fundமலையாளிகள் பலர் அயல்நாடுகளில் வசித்து வருகிறார்கள்.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக கேரளாவில் தான் பரவ ஆரம்பித்தது.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் கொரோனா வீரியம் அதிகளவில் காணப்பட்டது.

தற்போது இதனை தடுக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு தனது சார்பில் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

இது குறித்து மோகன்லால் கூறியுள்ளதாவது… “முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது.

என்னால் ஆன ஒரு சிறிய பங்களிப்பாக, மக்களுக்கு வகையில் உதவும் விதமாக இந்த 50 லட்சம் ரூபாயை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. தொடரட்டும் உங்கள் பணி.. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்”என முதல்வருக்கான கடிதத்தில் கூறியுள்ளார் மோகன்லால்.

இதற்கு முன்பு கேரள திரைப்பட தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் மோகன்லால் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Covid19 crisis Mohanlal donates Rs 50 lakhs to CM Relief Fund

யூடியுப் சேனல் தொடங்கிய ஹன்சிகா & ரகுல் பிரித்தி சிங்

யூடியுப் சேனல் தொடங்கிய ஹன்சிகா & ரகுல் பிரித்தி சிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hansika and Rakul Preet Singh launches their own YouTube channelதிரை நட்சத்திரங்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் அக்கௌண்ட் வைத்துள்ளனர்.

இதில் தினமும் தங்கள் பட தகவல் மற்றும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று யுடிப் சேனலை துவங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா தனக்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.

என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று, என் உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என தன் யூடிப் சேனல் பற்றி கூறியுள்ளார் ஹன்சிகா.

இவரைத் தொடர்ந்து நடிகை ரகுல் பிரித்தி சிங்கும் யூடிப் சேனலை தொடங்கியுள்ளார். இதன் மூலம் வரும் வருவாயை கொரோனா தடுப்பு பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கவிருக்கிறாராம்.

Hansika and Rakul Preet Singh launches their own YouTube channel

https://www.instagram.com/p/B-rsj-5huVD/?utm_source=ig_embed

மீண்டும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்த பெஃப்சி ஆர்கே. செல்வமணி

மீண்டும் நடிகர்களுக்கு கோரிக்கை வைத்த பெஃப்சி ஆர்கே. செல்வமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk selvamaniஇன்று மார்ச் 8 செய்தியாளர்களை சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்கே. செல்வமணி.

அப்போது அவர் பேசியதாவது… “கொரோனா கொடுமையான நோய். தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே இதனை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்தியாவில் போதுமான அளவிற்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. இந்த நோய் வந்துவிட்டால் அதனை தடுக்க முடியாமல் போய் விடும்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பெஃப்சி சார்பாக திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நிதியுதவி கேட்டிருந்தோம்.

தற்போது வரை 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி பெப்சிக்கு கிடைத்துள்ளது.

இவையில்லாமல் 2400 அரிசி மூட்டைகள் நன்கொடையாக கிடைத்துள்ளன.

திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது .

திரைப்பட கலைஞர்கள் இந்த நேரத்தில் அரசுக்கு நிதி உதவி வழங்க வேண்டும்.

பெஃப்சி சார்பாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

More Articles
Follows