சூரரைப் போற்று படத்தில் 12 வசனங்களுக்கு மியூட் போட்ட சென்சார்

சூரரைப் போற்று படத்தில் 12 வசனங்களுக்கு மியூட் போட்ட சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.

சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், ஊர்வசி, மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஆனால் படத்தில் 12 இடத்தில் சில வசனங்களை நீக்க சொல்லியுள்ளனர்.

அல்லது வசனத்தை மியூட் போட சொல்லியுள்ளனர். அதன்பின்னரே யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.

கொரோனா ஊரடங்கு பிரச்சினைக்கு பின்னர் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட சூர்யா தரப்பு முடிவு எடுத்துள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனின் வெளியிட்டதால் சிவகுமார் குடும்ப படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளுக்கு பாடல் அர்ப்பணிப்பு..; ஷான் ரோல்டனின் ‘ஆக்கப் பிறந்தவளே’

மகளுக்கு பாடல் அர்ப்பணிப்பு..; ஷான் ரோல்டனின் ‘ஆக்கப் பிறந்தவளே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aaka pirandhavaleஇசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ஆக்கப் பிறந்தவளே என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இது நாம் உருவாவதற்கு காரணமான பெண்களைக் கொண்டாடுவதற்கும் ,நம் வாழ்வில் அவர்கள் ஒரு அச்சாணியாக இருப்பதைப் பாராட்டுவதற்குமான ஒரு பாடல் ஆகும்.

இந்தப் பாடலின் மையக் கருத்து இந்த உலகிற்கு உயிரை கொண்டுவரும் ஒரு பெண்ணுக்கும் இந்த உலகை ஆளும் உரிமை இல்லையா? எனக் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது.

இந்தப் பாடல் உருவாவதற்கான காரணம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் “உலகம் பெண்களால் இயக்கப்படுவதை காண விரும்புகிறேன். இன்று நான் இந்த அளவில் இருப்பது ,என்னுடைய பயணம் என எல்லாமும் எனக்கு ஆதரவளித்த பெண்களால் வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.இந்த பாடல் பெண்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய மேலான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் .

இந்தப் பாடலை எனது மகள் லீலாவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் இந்த பாடலின் உருவாக்கத்தில் அவள்தான் எனக்கு ஒரு உந்துசக்தியாக இருந்தாள். என் மகள் லீலாவுக்கு நன்றி” எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் .

கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த பாடல் தற்போது அனைத்து ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக்கூடிய வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஷான் ரோல்டன் தற்போது பல்வேறு ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். அவரது ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க ஒவ்வொரு மாதமும் ஒரு பாடலை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Attachments area

ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா..; நித்தியானந்தாவின் நிதி கொள்கை விரைவில் அறிமுகம்.?!

ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா..; நித்தியானந்தாவின் நிதி கொள்கை விரைவில் அறிமுகம்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nithyanandaகொலை வழக்கு, மோசடி, பாலியல் என பல்வேறு வழக்குகள் சாமியார் நித்தியானந்தா மீது உள்ளது.

ஆனால் தெற்கு அமெரிக்கா, ஈக்வேடார் பகுதியில் உள்ள தீவில் இருந்து கொண்டு ‘கைலாசா” என்ற ஒரு சின்ன நாட்டையே உருவாக்கியுள்ளதாக அறிவித்தார்.

பல வழக்குகளில் இருந்து இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று தனியாக ஒரு நாட்டையே அவர் உருவாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இருந்தபோதிலும்… கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை அடிக்கடி வெளியிடுவதை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கைலாசா நாட்டின் கரன்சி தயார் என கூறப்படுகிறது.

வருகிற “விநாயகர் சதுர்த்து தினத்தன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலா பணம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

நிறைய நன்கொடைகள் கிடைத்திருப்பதால் வங்கி தொடங்கியிருக்கிறாராம்.

வாடிகன் பேங்கை மையமாக வைத்து இந்த ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா செயல்படுமாம்.

வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு எனத் தனியாக ஒரு பணமும் உள்ளதாம்.

மேலும் 300 பக்கத்தில் நாட்டின் பொருளாதார கொள்கையும் தயாராக உள்ளது” என கூறப்படுகிறது.

விஜய்-மகேஷ் பாபு சேலஞ்ச் : கம்பேர் செய்ய வேண்டாம்..; – விவேக்

விஜய்-மகேஷ் பாபு சேலஞ்ச் : கம்பேர் செய்ய வேண்டாம்..; – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay mahesh babuஓரிரு தினங்களுக்கு முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது வீட்டில் மரக்கன்றை நட்டார்.

அத்துடன் கிரீன் இந்தியா சேலஞ்சை அவர் நடிகர் விஜய், ஸ்ருதி ஆகியோருக்கு சவால் விடுத்தார்.

இந்த சேலஞ்சை ஏற்று கொண்ட விஜய் தனது வீட்டின் தோட்டத்தில் தானே மண்வெட்டி குழி தோண்டி செடி நட்டார். இந்த படங்கள் வைரலானது.

தற்போது நடிகை ஸ்ருதிஹாசனும் இந்த சவாலை ஏற்று மரக்கன்றை நட்டுள்ளார்.

அவர் ராணா, ஹிருத்திக், தமன்னா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் மகேஷ் பாபு குறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:…

விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு நல்லது செய்யும்போது ரசிகர்களும் அவர்களால் தூண்டப்பட்டு நல்லது செய்வார்கள்.

இதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம்.

நமது நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்’ என விவேக் அதில் பதிவிட்டுள்ளார்.

‘QUIT PANNUDA’… சுதந்திர தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு ‘மாஸ்’டர் ஸ்பெஷல்

‘QUIT PANNUDA’… சுதந்திர தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு ‘மாஸ்’டர் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master quit pannuda songஇந்திய சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக இந்த விடுமுறை நாளில் ஏதாவது புதிய படங்கள் வெளியாகும்.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் எந்த படமும் கடந்த 5 மாதங்களாக வெளியாகவில்லை.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுக்கவுள்ளது மாஸ்டர் படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் ‘Quit Pannuda என்றொரு பாடல் உள்ளது-

அந்த பாடலை சுதந்திர தினத்தில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கைதி-2 வேலைகளில் ‘மாஸ்டர்’ டைரக்டர் பிஸி.; கமல்-ரஜினி படம் ட்ராப்.?

கைதி-2 வேலைகளில் ‘மாஸ்டர்’ டைரக்டர் பிஸி.; கமல்-ரஜினி படம் ட்ராப்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaithi 2மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே நடிகர் விஜய்க்கு கதை சொன்னார் லோகேஷ்.

அந்த கதை விஜய்க்கு பிடித்துபோகவே மாஸ்டர் படம் உருவானது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சினையால் பட வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் கொரோனா பிரச்சினைக்கு பிறகு இந்தியன்2 பட சூட்டிங்கில் கமலும், அண்ணாத்த பட சூட்டிங்கில் ரஜினியும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

எனவே அவர்களுக்காக காத்திருக்காமல் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை குறைந்த நாட்களில் எடுக்கவிருக்கிறாராம் லோகேஷ்.

More Articles
Follows