தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைக்கு வர இன்னும் 4 நாட்களே உள்ளன.
ஆன்லைன் புக்கிங் தொடங்கவுள்ள நிலையில், சில தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கு ஹவுஸ்புல் என்ற நிலையும் தொடர்கிறது.
முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா? என பல மீம்ஸ்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கபாலி ரிலீஸ் அன்று தங்கள் நிறுவனத்திற்கு விடுமுறை அளித்துள்ளது.
சென்னை OMR சாலையில் உள்ள ஃபின்டஸ் நிறுவனம்தான் இந்த புதுமையை கையாண்டுள்ளது.
இவையில்லாமல் பல நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் ஒரு காட்சிக்கு தங்களின் ஒட்டுமொத்த ஊழியர்களையும் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறது.
இதனால் இந்நிறுவனங்களின் ஊழியர்கள் ‘மகிழ்ச்சி’ அடைந்துள்ளனர்.