சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் மீண்டும் ‘டாக்டர்’ ஹீரோயின்..; SJ சூர்யாவும் இணைந்தார்!

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விரைவில் வெளியாகிறது.

இதில் ‘டாக்டர்’ படம் 2021 மார்ச் 26ஆம் தேதி ரிலீசாகிறது.

அண்மையில் சிவகார்த்திகேயனின் 19வது படமாக ‘டான்’ பட அறிவிப்பு வெளியானது.

இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார்.

லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இப்பட பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரே டாக்டர் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் பாண்டிராஜ் & சூர்யா இணையும் படத்திலும் பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் எஸ் ஜே சூர்யா & சமுத்திரக்கனியும் இணைந்துள்ளனர் என்பதை சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

Sivakathikeyan’s Don movie updates

Overall Rating : Not available

Latest Post