பரத் & ஸ்ரீ செந்தில் இணையும் ‘காளிதாஸ் 2’-ஐ தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

பரத் & ஸ்ரீ செந்தில் இணையும் ‘காளிதாஸ் 2’-ஐ தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரத் & ஸ்ரீ செந்தில் இணையும் ‘காளிதாஸ் 2’-ஐ தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

*சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த ‘காளிதாஸ் 2’*

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’.

காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது ‘காளிதாஸ் 2’ படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா – அம்மா கிரியேஷன்ஸ், கதிரேசன்- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், அருண் விஸ்வா- சாந்தி டாக்கீஸ், அம்பேத்குமார்- ஒலிம்பியா மூவிஸ், சினிஷ்- சோல்ஜர் ஃபேக்டரி, கருணா மூர்த்தி- ஐங்கரன் இன்டர்நேஷனல், குமார்- லார்க் ஸ்டுடியோஸ், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண், விநியோகஸ்தர்கள் அழகர்சாமி, அரவிந்த் – ஆருத்ரா பிலிம்ஸ், ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் பாபு, இயக்குநர் கே. கல்யாண், ‘டார்க்’ பட இயக்குநர் ஜெகன், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், வேல்ராஜ், சக்தி, சண்டை பயிற்சி இயக்குநர் பாண்டியன், இணை இயக்குநர் ஆதிஷ்.. உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌

இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார்.

துரைராஜ் கலை இயக்கத்தையும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கிறார்கள்.

நிர்வாக தயாரிப்பை பழனியப்பன் மேற்கொள்கிறார். இந்தப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இவர் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ ஆகிய திரைப்படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கிறார்.

இவர் தயாரிப்பில் ‘காளிதாஸ் 2’ படம் உருவாகுவதால்.. திரைப் பட ரசிகர்களிடையேயும், திரை ஆர்வலர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்..

Sivakarthikeyan at Kalidass2 movie pooja

இந்தியன்னா தாத்தா.. ஷங்கர்ன்னா பிரம்மாண்டன்னு ஈசியா சொல்றீங்க.. ஆனா சர்ப்ரைஸ் இருக்கு.. – கமல்

இந்தியன்னா தாத்தா.. ஷங்கர்ன்னா பிரம்மாண்டன்னு ஈசியா சொல்றீங்க.. ஆனா சர்ப்ரைஸ் இருக்கு.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியன்னா தாத்தா.. ஷங்கர்ன்னா பிரம்மாண்டன்னு ஈசியா சொல்றீங்க.. ஆனா சர்ப்ரைஸ் இருக்கு.. – கமல்

*கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணைந்திருக்கும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.

இந்நிகழ்வினில் நடிகர் சித்தார்த் பேசியதாவது…

‘இது மிகப்பெரிய மேடை, கமல்ஹாசன் சார், ஷங்கர் சார் இருவரும்  அவர்களின் உழைப்பால் இந்த மேடையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மேடையில் நானும் இருப்பது பெருமை, 25 வருடம் கழித்து இரண்டாவது வாய்ப்பாக, என் குருவுடன் நடிக்கும், இந்த வாய்ப்பை ஷங்கர் சார் தந்துள்ளார்.

அவருக்கு நன்றி. கமல் சார்,  அவரை சின்ன வயதிலிருந்து கனவில் பார்த்திருக்கிறேன். இப்போது நேரில் தினமும் பார்க்கிறேன் அதுவே பெரும் பாக்கியம். அவருடன் நடித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. ஷங்கர் சார் தந்த இரண்டு வாய்ப்பிற்கும் நன்றி.

இந்த திரைப்படம் ஊழலின் முகத்தை உண்மையாகப் பேசும் ஒரு முழுமையான படமாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.’

இயக்குநர் ஷங்கர் பேசியதாவது…

‘இந்தியன் உருவான போது, சேனாபதி கதாப்பாத்திரத்தை உருவாக்கக் கமல் சாரோட போட்டோ, அவரோடு அப்பா போட்டோ, அண்ணா போட்டோ  என எல்லாவற்றையும் தோட்டா தரணியிடம் தந்து ஒரு ஸ்கெட்ச் போட்டுத் தரச் சொன்னேன்.  அந்த ஸ்கெட்ச் பார்த்த போதே சிலிர்ப்பாக இருந்தது. முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது கூஸ்பம்ஸ் வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது.

அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவரை ஷூட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அதே உணர்வு படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரும். இந்தியன் படம் எடுக்கும் போது 2 ஆம் பாகம் எடுப்பேன் என நினைக்கவே இல்லை, அப்போது தேவைப்பட்ட போது, இந்தியன் தாத்தாவிற்கு அப்போதைக்கு ஒரு பிறந்த வயது வைத்து விட்டேன், ஆனால் இப்போது படம் எடுக்கும்போது அவருக்கு வயது என்ன என்கிற சர்ச்சை வந்துள்ளது.

இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சீனாவில் 118 வயது மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் இருந்தார், அந்த வயதிலும் அவர் திடகாத்திரமாக சண்டை போடுவார், ஜேம்ஸ் பாண்ட் ஒரிஜினல் வயது 100க்குமேல் ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லையே, அதே போல் இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு. அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன். இந்தியன் பார்ட் 1 வந்த போது,  பிராஸ்தடிக் மேக்கப்  அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். இந்தப்படத்தை முதலில் வேறொருவர் தான் எடுப்பதாக இருந்தது ஆனால் கதையை கேட்டவுடன் நான் தான் தயாரிப்பேன் எனச் சொன்னார் சுபாஸ்கரன், இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.

சுபாஸ்கரன் சார், ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி. இந்தியன் படம் தமிழ் நாட்டில் நடக்கும் ஆனால் இது இந்தியா முழுக்க நடக்கும் கதை, இந்தியா முழுக்க பல மாநிலங்களில் ஷூட் செய்துள்ளோம். ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.’

நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது…

‘இந்த வயதில் இப்படம் செய்யும்  ஆர்வம் இவர்களிடம் இருந்து தான் வந்தது. எல்லா கலைஞர்களும் தந்த ஊக்கம் தான் என்னை இயக்கியது. நேர்மறை விசயங்கள் தாண்டி, இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, நிறையத் தடங்கல்களும் வந்தது. இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ஆனால் இந்த உழைப்பு ரசிகர்களிடம் போய்ச்சேருமா? எனத் தயக்கம் இருந்தது.

ஆனால் இப்போது அது சேரப்போகிறது என்பது மகிழ்ச்சி. உடன் பணிபுரிந்தவர்கள் பலர் இப்போது இல்லை, இப்படிப் பல நிகழ்வுகளைத் தாண்டித்தான் இந்தப்படம் இங்கு வந்துள்ளது. இப்போது எல்லோரும் நன்றாக  இருப்பதாகச் சொல்வது  மகிழ்ச்சி. சென்சாரில் படம் பிடித்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அது இன்னும் மகிழ்ச்சி. இந்தியன் படம் எடுக்கும்போது, அது தான் அதிக பட்ஜெட் அது ஒரு குறையாகக் கூடச் சொல்லப்பட்டது, ஆனால் இப்போது இந்தப்படத்துடன் ஒப்பட்டால் அது ஒன்றுமே இல்லை.

இப்படத்தை அத்தனை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். அத்தனை கலைஞர்களும், நட்சத்திரங்களும் முழு உற்சாகத்துடனும், உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளனர். விவேக் சொன்னது இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உழைப்பு அத்தனையும் நம்புகிறேன் நான்.

இந்தியன் தாத்தா உபயோகிக்கும் பேனா, உடை என அத்தனையையும், அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்த பிறகே ஒகே சொல்வார் இயக்குநர். கனவில் நினைத்துக் கொண்டிருந்ததை எல்லாம் நிஜமாக்கி காட்டியிருக்கிறார்.

இந்தியன் என்றால் என்ன தாத்தா வருவார், ஷங்கர் படமென்றால் பிரம்மாண்டம் பாட்டு நல்லாருக்கும் என எளிதாகச் சொல்லிவிடுவார்கள், ஆனால் அது அத்தனை எளிதல்ல, இரண்டாம் பாகம் எனும் போது, நானே அதைத்தான் சொன்னேன், இதே கேள்வி எனக்கும் இருந்தது.

ஆனால் அதைத்தாண்டி மிகச்சிறப்பாகத் திரைக்கதை அமைத்துள்ளார் ஷங்கர். ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய நிறைய வைத்துள்ளார். படம் உங்கள் அனைவரையும் அசத்தும்’.

பிரம்மாண்டம் எனும் சொல்லுக்கு புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை, மிகப்பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

‘இந்தியன் 2’ அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2 எனவும் மற்றும் தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியிடப்படுகிறது.

நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா, ஜெகன், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், ஜாகீர் உசேன், பியூஸ் மிஸ்ரா, அகிலேந்திர மிஸ்ரா.

இயக்குநர்: ஷங்கர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு இயக்குனர்: ரவிவர்மன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி.முத்துராஜ்
எடிட்டர்: ஸ்ரீகர் பிரசாத்
வசனம் : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார்
ஆக்‌ஷன் : அன்பறிவ் – ரம்ஜான் புல்லட் – அனல் அரசு – பீட்டர் ஹெயின் – ஸ்டண்ட் சில்வா – தியாகராஜன்
VFX மேற்பார்வையாளர்: வி ஸ்ரீனிவாஸ் மோகன்
நடன இயக்குனர் : போஸ்கோ-சீசர் – பாபா பாஸ்கர்
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்
மேக்கப் – வான்ஸ் ஹார்ட்வெல் – பட்டணம் ரஷீத் – ஏ.ஆர். அப்துல் ரசாக்
ஆடை வடிவமைப்பு : ராக்கி – கவின் மிகுல் – அமிர்த ராம் – எஸ் பி சதீசன் – பல்லவி சிங் – வி.சாய்
DI: ரெட்சில்லிஸ்
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நிர்வாக தயாரிப்பாளர் : சுந்தர் ராஜ்
G.K.M. தமிழ் குமரன் – M. செண்பகமூர்த்தி
தயாரிப்பு: சுபாஸ்கரன்

Its not easy to make Indian2 says KamalHaasan

———–

PAN INDIA MOVIES ராம் சரணின் ‘தி இந்தியா ஹவுஸ்’.. & பிருத்வி அம்பரின் ‘சௌகிதார்’

PAN INDIA MOVIES ராம் சரணின் ‘தி இந்தியா ஹவுஸ்’.. & பிருத்வி அம்பரின் ‘சௌகிதார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PAN INDIA MOVIES ராம் சரணின் ‘தி இந்தியா ஹவுஸ்’.. & பிருத்வி அம்பரின் ‘சௌகிதார்’

நட்சத்திர நடிகரான ராம் சரண் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு, திரைப்பட தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார்.

வி மெகா பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் திரைப்படத்தை, யு வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பங்குதாரரான விக்ரம் ரெட்டி – ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ , ‘கார்த்திகேயா 2’ ஆகிய வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தற்போது ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் படத்தையும் தயாரித்து வருகிறது. இவர்களுடன் நிகில் சித்தார்த்தா இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கார்த்திகேயா 2’ படத்திற்காக தொலைநோக்கு தயாரிப்பாளர் என புகழப்படும் அபிஷேக் அகர்வாலுடன் பணியாற்றியிருக்கிறார்.

தற்போது உலக அளவில் அறியப்பட்ட.. . இந்தியாவை பெருமைப்படுத்திய ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்.

‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தை ராம் வம்சி கிருஷ்ணா எழுதி, இயக்குகிறார். நிகில் சித்தார்த்தா கதாநாயகனாகவும், சாயீ மஞ்சரேக்கர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். அனுபம் கேர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சர்வதேச தரத்துடன் தயாராகும் ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதை தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

காதல் மற்றும் புரட்சியின் மூலத்தை ஆராயும் இந்த 1905 ஆண்டு காலகட்டத்திய படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹம்பியில் உள்ள விருபாக்ஷா ஆலயத்தில் படக் குழுவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் விஷால் அபானி பணியாற்றுகிறார்.

நடிகர்கள் : நிகில் சித்தார்த்தா, சாயீ மஞ்சரேக்கர் அனுபம் கேர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

வழங்குபவர் : ராம் சரண்
தயாரிப்பாளர்கள் : அபிஷேக் அகர்வால் & விக்ரம் ரெட்டி
எழுத்து & இயக்கம் : ராம் வம்சி கிருஷ்ணா
தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் & வி மெகா பிக்சர்ஸ்
இணை தயாரிப்பு : மயங்க் சிங்கானியா
ஒளிப்பதிவு : கேமரோன் பிரைசன்
கலை இயக்கம் & தயாரிப்பு வடிவமைப்பு: விஷால் அபானி
ஆடை வடிவமைப்பு : ரஜினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

———

*பிருத்வி அம்பரின் புதிய பான் இந்தியா திரைப்படமான “சௌகிதார்” இனிதே துவங்கியது !!*

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகவுள்ள, பான் இந்திய திரைப்படமான ‘சௌகிதார்’ படத்தின் படப்பிடிப்பு, பெரும் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது.

பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில், இப்படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் கிளாப் அடிக்க, சாய்குமார் ஒளிப்பதிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

‘ரதவரா’ படத்தின் மூலம் புகழ் பெற்ற
இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ‘சௌகிதார்’ படத்தினை இயக்குகிறார். ‘டயலாக் கிங்’ என்று அழைக்கப்படும் சாய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தொட்மனே குடி தன்யாராம் குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து படக்குழு படத்தை அறிமுகம் செய்யும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது.

படம் குறித்து இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறுகையில்…

“பல மொழிகளில் வெளியாகும் எனது ஆறாவது படம் இதுவாகும். கல்லஹள்ளி சந்திரசேகர் ஒரு நல்ல படைப்பை உருவாக்கும் எண்ணத்தில், ரசவாதா படத்தின் வெற்றிக்குப் பிறகு, என்னை அணுகினார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிருத்வி நடிக்கிறார்.

நான் இந்த முறை ஒரு வித்தியாசமான கதையை சொல்ல விரும்பினேன், பிருத்வி அவர் பாத்திரத்திற்காக விரிவாகத் தயாராகி வருகிறார், மேலும் படம் குறித்த அவரது உற்சாகத்தை காண்கையில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

சாய்குமார் சார், மற்றும் தர்மா சார் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் சச்சின் பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகர் பிருத்வி அம்பர் கூறுகையில்…

இன்று மகிழ்ச்சியான நாள். “சௌகிதார் திரைப்படம் எனது தாயின் ஆசியுடன் இனிதே தொடங்கியது. கதையை முதலில் கேட்டபோதே, இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், இப்படத்திற்கு தயாராக நேரம் கேட்டேன்.

இப்பட டீசரை ஒரே நாளில் படமாக்கினோம், தலைப்புக்கேற்றவாறே ஒரு அட்டகாசமான அனுபவமாக, உங்களைத் திருப்தி செய்யும் படமாக இருக்கும்.”

சாய்குமார் கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு நடிகராக 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனது அப்பா, அம்மாவுக்கு நன்றி. நான் கன்னட படங்களில் நடிக்க வேண்டும் என்று என் அம்மா விரும்பினார்.

எனது கன்னட பயணமும் 30 வருடங்களை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்பட வேடமும், ஒரு சவாலாகவே உள்ளது. தற்போது, பதினைந்து திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

“சௌகிதாரின் கதை ஒரு எமோஷனல் டிராமா. பிருத்வி ஹீரோவாக நடிக்கும் துளு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். இது ஒரு நல்ல சப்ஜெக்ட்”. “பிரித்வி அம்பாருக்கும், இயக்குநருக்கும் நான் தான் சௌகிதார். நன்றி.”

நடிகை தன்யா ராம் குமார் கூறுகையில்….

சௌகிதாரில் எனக்கு வாய்ப்பளித்த சந்திராசர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நடிகர்கள் தர்மா சார் மற்றும் சாய்குமார் சாருடன் பணியாற்றுவதில் நான் பெருமை கொள்கிறேன்.

வித்யாசேகர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில், கல்லஹள்ளி சந்திரசேகர்‘சௌகிதார்’ படத்தைத் தயாரிக்கிறார். நாகேந்திர பிரசாத் மற்றும் பிரமோத் மறவந்தே ஆகியோர் பாடலை எழுத, சச்சின் பஸ்ரூரு இசையமைக்கிறார். ‘சௌகிதார்’ பல மொழிகளில் தயாராகிறது. இதுவரை தனது ரொமாண்டிக் ஹீரோவாக பெயர் பெற்ற ப்ரித்வி அம்பர், இப்போது இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்வார், இது ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். ‘சௌகிதார்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Ram Charan & Prithivi Ambars 2 Pan India movies

மஞ்சு வாரியாரின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்

மஞ்சு வாரியாரின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சு வாரியாரின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்

தென்னிந்தியாவின் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் திரில்லர் ‘ஃபுட்டேஜ்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, ஃபுட்டேஜ் சீரிஸின் அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

மோலிவுட்டின் முதல் உண்மையான ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபுடேஜ்’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த அற்புதமான அதிரடி திரைப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகை
மஞ்சு வாரியர் முதன்மைப் பாத்திரத்தில் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.

அஞ்சாம் பாதிரா, கும்பலங்கி நைட்ஸ், மகேஷிண்டே பிரதிகாரம் என பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற எடிட்டரான சைஜு ஸ்ரீதரன் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

எடிட்டிங்கில் இருந்து டைரக்டராக சைஜு மாறுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவரது பன்முகக் கதை சொல்லும் திறமைக்கு சான்றாக ‘ஃபுட்டேஜ்’ அமைந்திருக்கிறது.

மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.

ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார்.

நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, மைண்ட்ஸ்டின் ஸ்டுடியோவின் VFX மற்றும் சமீரா சனீஷின் ஆடை
வடிவமைப்பு என மிக அட்டகாசமான தொழில்நுட்ப குழு முழு உழைப்பைத் தந்துள்ளது. இந்த அற்புதமான குழுவின் உழைப்பில் மோலிவுட்டில் புதிய கதை சொல்லலை அறிமுகப்படுத்தும், புதுமையான அனுபவத்தை இப்படம் தரும்.

“ஃபுட்டேஜ்” என்பது வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில் நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் கதை சொல்லலை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இப்படம் இருக்கும்…

Footage from 2nd August in theatres

உலகளவில் 1000 கோடி.. தமிழகத்தில் 30 கோடியை நெருங்கிய கல்கி 2898 AD

உலகளவில் 1000 கோடி.. தமிழகத்தில் 30 கோடியை நெருங்கிய கல்கி 2898 AD

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகளவில் 1000 கோடி.. தமிழகத்தில் 30 கோடியை நெருங்கிய கல்கி 2898 AD

*தமிழிலும் 28 கோடி வசூலித்து சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’*

பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி ‘ திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ஜூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’.

இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சயின்ஸ் ஃபிக்சன் வித் ஃபேண்டஸி ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரிலான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத்- ஸ்வப்னா தத் -பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வெளியான இந்த திரைப்படம் 28 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைப்பதற்காக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

Kalki 2898 AD movie box office collection

வானில் வட்டமிடும் ‘இந்தியனை’ வியந்து பார்க்க வைத்த லைக்கா நிறுவனம்

வானில் வட்டமிடும் ‘இந்தியனை’ வியந்து பார்க்க வைத்த லைக்கா நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வானில் வட்டமிடும் ‘இந்தியனை’ வியந்து பார்க்க வைத்த லைக்கா நிறுவனம்

கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக கடந்த நான்கு ஆண்டுகளில் உருவான படம் ‘இந்தியன் 2’.

ஷங்கர் இயக்கிய இந்த படத்திற்கு முதன்முறையாக அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

இதில் கமல்ஹாசன் உடன் மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து, மனோபாலா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கும்போது இந்த காட்சிகளை படமாக்கிய சங்கர் தற்போது அவர்கள் காட்சிகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் இந்தியன் 2 பாகத்தில் இல்லை இந்தியன் 3 பாகத்தில் அவர் இருப்பதாக ஷங்கர் தெரிவித்து இருந்தார்.

லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து தற்போது ப்ரமோஷன் பணிகளி ஈடுபட்டு வருகிறது.

மேலும் கமல் சங்கர் அனிருத் சித்தார்த் சிம்ஹா உள்ளிட்ட லைக்கா குழுவினர் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.

அடுத்த வாரம் ஜூலை 12ஆம் தேதி இந்த படத்தை பிரமாண்டமாக திரையரங்கில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் துபாய் நடுவானில் இந்தியன் 2 படத்திற்கான புரமோசன் செய்யப்பட்டது. ஸ்கை டைவிங் வீரர்கள் ‘இந்தியன் 2’ பட போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு அலங்கரித்தனர்.

இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளனர். இது மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Indian2 promotions in Dubai sky goes viral

More Articles
Follows