பாரதிராஜாவை தலைவராக ஏற்க முடியாது.; தாணு சொல்வதை கேட்க முடியாது.. சிங்காரவேலன் சீற்றம்

producer singaravelanஇயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்க உள்ளார் என்பதை பார்த்தோம்.

இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விநியோகஸ்தருமான தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து ஆடியோ பதிவிட்டுள்ளார்.

அதில்…. தயாரிப்பாளர் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.

இந்த சங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை.

இதனால் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

பாரதிராஜா கிட்டதட்ட 100 தயாரிப்பாளர்களுடன் புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆலோசனை கூட்டத்தில் தாணு புகார் தெரிவித்தார்

ஆனால் பத்திரிகையாளர் சந்திப்பில் தாணு பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்திற்கு வாருங்கள்… உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என கூறியிருக்கிறார்.

தாணுவின் சொந்த கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் புதிய அணியாக களமிறங்க இருக்கிறோம்” என்றார் சிங்காரவேலன்.

Overall Rating : Not available

Latest Post