‘மாநாடு’ மாஸ் ஹிட்; ரெண்டே நாளில் 14 கோடி வசூல்; கலெக்சன் குறைய இதான் காரணம்.!

‘மாநாடு’ மாஸ் ஹிட்; ரெண்டே நாளில் 14 கோடி வசூல்; கலெக்சன் குறைய இதான் காரணம்.!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படம் நேற்றுமுன் தினம் நவம்பர் 25ல் தியேட்டர்களில் ரிலீசானது.

யுவன் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் சிம்பு உடன் எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏசந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மகத், கருணாகரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

‘டைம் லூப்’ கதையை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக விறுவிறுப்பாக படமாக்கி இருந்தார் வெங்கட்பிரபு.

இதுவரை படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

முதல் நாளிலேயே ‘மாநாடு’ படம் தமிழகம் முமுக்க ரூ.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மாநாடு படத்தின் இரண்டு நாள் வசூல் 14 கோடி ரூபாய் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25 அன்று அதிகாலை காட்சிகள் ரத்தானது. மேலும் தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது.

இவை இரண்டு இல்லையென்றால் இன்னும் அதிக வசூலை மாநாடு படம் கொடுத்திருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

இப்படத்தின் வெற்றியை சுரேஷ் காமாட்சி தன் பட நாயகன் சிம்பு உடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

தற்போது இப்பட தெலுங்கு, ஹிந்தி ரீமேக் உரிமைகளை வாங்க பலர் போட்டிபோட தொடங்கியுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Simbus Maanaadu movie collects Rs 14c in 2 days

யோகி பாபுவின் ‘பன்னிகுட்டி’-யை வாங்கினார் பிரபல தயாரிப்பாளர்

யோகி பாபுவின் ‘பன்னிகுட்டி’-யை வாங்கினார் பிரபல தயாரிப்பாளர்

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் யோகிபாபு நடிப்பில் உருவான படம் “பன்னிகுட்டி”.

இந்நிலையில், ‘பன்னிகுட்டி’ படத்தின் தமிழ்நாடு, கேரளா, மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை 11:11 புரொடக்சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

11:11 Productions நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் இது குறித்து கூறியதாவது…

எங்கள் தயாரிப்பு நிறுவனம் 11:11 Productions “பன்னிக்குட்டி” படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, Lyca Productions உடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

ஒரு நிறுவனமாக ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவு செய்யும் தரமான பொழுது போக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

“பன்னிக்குட்டி” திரைப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு K இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார். மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Theatrical rights of Panni Kutty in TN Karnataka Kerala bagged by 11:11 Productions

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரின் சிகிச்சைக்கு தனுஷ் சோனுசூட் சிரஞ்சீவி உதவி

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரின் சிகிச்சைக்கு தனுஷ் சோனுசூட் சிரஞ்சீவி உதவி

800 திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரலில் 75% வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவரும் இவரது மனைவி மகன் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிவசங்கரின் மருத்துவ சிகிச்சைக்கு அவரது இளைய மகன் அஜய் உதவி கேட்டு இருந்தார் என்ற செய்திளை நம் தளத்தில் பார்த்தோம்.

இதனையடுத்து தனுஷ், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்டவர்கள் உடனடியாக மருத்துவ உதவி அளித்தனர்.

இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உதவியுள்ளார்.

Sonu Sood Dhanush Chiranjeevi help To Choreographer Sivasankar Who is affected due To COVID

பலம் பெற்றோம்.. நடிப்புக்கு விருது கிடைச்சுட்டு.; ரஜினிக்கு ‘மாநாடு’ படக்குழு நன்றி

பலம் பெற்றோம்.. நடிப்புக்கு விருது கிடைச்சுட்டு.; ரஜினிக்கு ‘மாநாடு’ படக்குழு நன்றி

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு படம் நேற்றுமுன் தினம் நவம்பர் 25ல் தியேட்டர்களில் ரிலீசானது.

யுவன் இசையமைப்பில் உருவான இந்த படத்தில் சிம்பு உடன் எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏசந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மகத், கருணாகரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரும்ப திரும்ப ரீபீட் செய்தாலும் ‘டைம் லூப்’ கதையை மிக விறுவிறுப்பாக படமாக்கி இருந்தார் வெங்கட்பிரபு.

இதுவரை அனைத்து தரப்பிலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

இவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாநாடு படத்தை பாராட்டியுள்ளார்.

நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு உள்ளிட்டோரை போனில் அழைத்து ஒவ்வொருவரையும் பாராட்டிள்ளார்.

இந்த தகவலை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு, எஸ்ஜேசூர்யா ஆகியோர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து வருகின்றனர்.

சிம்பு தரப்பில் இருந்து எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில்…

இனிய நாளாக அமைந்துவிட்டது இந்நாள்.

சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது…

நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது.

மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…
மிக்க நன்றி சார்..

எஸ்ஜேசூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில்…

“இன்று எனது நடிப்புத் திறமைக்காக எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்ததாக உணர்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். உங்கள் அன்பான பாராட்டு எனக்கு எனது சினிமா பயணத்தை மேலும் பலமாக்கியுள்ளது.

ரஜினியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (இவர்களின் பாராட்டு இன்று மாலை வந்தது. அதனை அப்டேட் செய்துள்ளோம்.)

Simbus Maanaadu team on cloud nine by Rajinis Wishes

ரஜினி-தனுஷை தொடர்ந்து போயஸ் கார்டனில் குடியேறும் நயன்தாரா

ரஜினி-தனுஷை தொடர்ந்து போயஸ் கார்டனில் குடியேறும் நயன்தாரா

சென்னையின் சிறப்புகளாக பல கட்டிடங்களை பல பகுதிகளை வரலாறு சொல்வதுண்டு.

அதுபோல சென்னையின் பிரபலமான பகுதிகளில் போயஸ் கார்டனுக்கும் நல்ல பெயருண்டு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இங்குதான் வசித்தார். அதுபோல் நடிகர் ரஜினிகாந்த் இங்குதான் வசித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகர் தனுஷும் இந்த பகுதியில் ஓர் இடம் வாங்கி தனி வீடு கட்டி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் இந்தப் பகுதியில் 4 BHK வீடுகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தனது நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு போயஸ் கார்டனில் நயன்தாரா செட்டில் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Nayanthara Buys luxury 4 BHK Apartments in Poes Garden

கமலுக்கு பதிலாக கமல் பட நாயகியே பிக்பாஸ் 5 தொகுப்பாளர் ஆகிறாரா..?

கமலுக்கு பதிலாக கமல் பட நாயகியே பிக்பாஸ் 5 தொகுப்பாளர் ஆகிறாரா..?

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக இன்று மதியம் 2 மணியளவில் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்.? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கமல்ஹாசனே வீடியோ வழியாக virtual முறையில் தொகுத்து வழங்க இருக்கிறார் எனவும் கூறப்பட்டது.

சிம்பு, விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலாம் என சில யூகங்கள் பறந்தன.

தற்போது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் ரம்யா கிருஷ்ணன்.

மேலும் கடந்த 2019ல் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜூனாவுக்கு பதிலாக சில வாரங்களுக்கு தொகுத்து வழங்கியும் உள்ளார் ரம்யா.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் மேகி என்ற கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal film actress to host Bigg Boss 5 Tamil?

More Articles
Follows