திருமணமான த்ரிஷாவை துரத்தும் அஜித் & சிம்பு & விஜய்சேதுபதி.; நெட்டிசன்கள் ட்ரோல்

Simbu Trishas Karthik Dial Seytha Yenn memes goes viral 2010ல் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக கொரோனா லாக் டவுனில் 12 நிமிடக் குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.

இந்த குறும்படத்திற்கு கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளனர்.

இதிலும் சிம்பு த்ரிஷா நடித்துள்ளனர். இசை ஏஆர். ரஹ்மான். இதை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

லாக் டவுனில் சென்னையில் சிம்புவும் கேரளாவிலும் த்ரிஷாவும் மாட்டிக் கொண்டது போலவும் உள்ளது. அவரவர் வீடுகளில் இருந்து செல்போனில் பேசும் படியாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கதைப்படி த்ரிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு ட்வின்ஸ் குழந்தைகள் உள்ளது. த்ரிஷா பெயர் ஜெஸ்ஸி. இவரது கணவர் பெயர் ராய்.

தன் அடுத்த படத்திற்கு கதை எழுத முயற்சிக்கும் சிம்பு திடீரென தன் பழைய காதலை நினைத்து த்ரிஷாவுக்கு போன் செய்கிறார்.

நீ வேண்டும்.. உன் கால்ல வாழனும் என்கிறார் சிம்பு. நீ என்னுடைய மூன்றாவது குழந்தை என்கிறார் த்ரிஷா.

சிறிய உரையாடலுக்கு பிறகு த்ரிஷாவின் பேச்சை கேட்டு குஷியான சிம்பு மீண்டும் கதை எழுதுகிறார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுக்கு கணவர் இருக்கமாட்டார். குழந்தை இருக்கும். அப்போதும் த்ரிஷாவை காதலிப்பார் அஜித். ஒரு கட்டத்தில் த்ரிஷா இறந்த பின் அந்த குழந்தையை அஜித் வளர்ப்பார். பின்னர் அனுஷ்கா வருவார் என்பது எல்லாம் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதுபோல் ஓரிரு வருடங்களுக்கு முன் வெளியான 96 படத்தில் ஜானு என்ற கேரக்டரில் த்ரிஷா நடித்திருப்பார். ராம் என்ற கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்திருப்பார்.

அந்த கதைப்படி த்ரிஷாவுக்கும் திருமணம் ஆகியிருக்கும்.

விஜய்சேதுபதிக்கு திருமணம் ஆகியிருக்காது. ஆனால் தன் பழைய காதலியை நினைத்து உருகுவார். இவர்கள் சந்திப்பதுபோல் கதை இருக்கும்.

இந்த படங்களில் த்ரிஷாவை மையப்படுத்தியே காட்சிகள் இருக்கும்.

தற்போது இந்த 3 பட காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது பற்றிய மீம்ஸ்கள் இன்று இணையத்தில் அதிகளவில் காணப்படுகிறது.

Simbu Trishas Karthik Dial Seytha Yenn memes goes viral

 

 

Overall Rating : Not available

Latest Post