BREAKING ஹீரோவாகும் செல்வராகவன்; ஜோடியாக கீர்த்தி; படத்திற்கு இப்படியொரு பெயர்?

BREAKING ஹீரோவாகும் செல்வராகவன்; ஜோடியாக கீர்த்தி; படத்திற்கு இப்படியொரு பெயர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Selvaragavan as Hero in SaaniKaayidham to be pair with Keerthy Sureshதமிழ் சினிமாவிற்கு தரமான படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.

இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன?, என்ஜிகே உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.

சூர்யா நடித்திருந்த என்ஜிகே படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் சற்றுமுன் இவரது அடுத்த பட அறிவிப்பு சுதந்திர தின ஸ்பெஷலாக வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் செல்வராகவனே நாயகனாக நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு சாணிக் காயிதம் என்று பெயரிட்டு இதன் பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை அருண் மாத்திஸ்வரன் இயக்குகிறார். ஸ்கீரின் ஸ்கீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Selvaragavan as Hero in Saani Kaayidham to be pair with Keerthy Suresh

ஆன்லைனில் திருட்டுத்தனமா படம் பார்த்தாலும் ஷேர் செய்தாலும் ஆபத்து

ஆன்லைனில் திருட்டுத்தனமா படம் பார்த்தாலும் ஷேர் செய்தாலும் ஆபத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Onbathu Kuzhi Sampath Producer warning statementசுதந்திர தினத்தை முன்னிட்டு பாலாஜி மற்றும் நிகிலா விமல் நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் ஆன்லைனில் வெளியானது.

ரகுபதி இயக்கியுள்ள இந்த படத்தை திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைனில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார்.

அதுபற்றிய விவரம் வருமாறு…

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்த்தாலோ அல்லது டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பக்கங்களில் பகிர்ந்தால் அவர்களின் மீது காப்புரிமை சட்டம் பாயும் என தெரிவித்துள்ளார்.

இதனால் சட்டத்திற்கு புறம்பான இணையதளங்களில் படம் பார்ப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 3,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…

Onbathu Kuzhi Sampath Producer warning statement

Onbathu Kuzhi Sampath Producer warning statement

திமுக-அதிமுக நல்ல வழி காட்டிருக்கு.; தள்ளி நில்லுங்க ரஜினி… – மீரா மிதுன்

திமுக-அதிமுக நல்ல வழி காட்டிருக்கு.; தள்ளி நில்லுங்க ரஜினி… – மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini please stay away from politics says Meera Mithun நடிகையும் மாடலுமான மீரா மிதுன் முன்னணி நடிகர்களை பற்றி கேவலமாக பேசி வருகிறார்.

இதனால் இவருக்கும் சினிமா ரசிகர்களுக்கும் அடிக்கடி ட்விட்டரில் மோதல் வெடித்து வருகிறது.

மீரா மிதுனின் வீடியோக்கள் ஒரு பக்கம் வைரலாகி வந்தாலும் பலரும் இவரின் பேச்சை முகம் சுளித்தவாறே கேட்கின்றனர்.

இயக்குனர் பாரதிராஜா தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யா மறைமுகமாக மீரா மிதுனை கண்டுக்காமல் ஆக்கப்பூர்வமான செயல்களில் தன் ரசிகர்களை ஈடுபட அறிவிறுத்தினார்.

இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

45 வருடங்களில் ரஜினிகாந்த் நிறைய சாதித்துள்ளார். ஒரு கண்டக்டராக இருந்து பெரிய சாதனை நடிகராக உயர்ந்துள்ளார். அதில் சந்தேகமில்லை.

ஆனால் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற அவரது அரசியல் ஆசை கனவாகவே போகும்.

54 வருடங்களாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழகத்திற்கு சரியான பாதையை காட்டியுள்ளது. எனவே தள்ளி நில்லுங்கள் ரஜினி என பதிவிட்டுள்ளார்.

Rajini please stay away from politics says Meera Mithun

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்..; எஸ்.பி. சரண் விளக்கம்.. ரசிகர்கள் பிரார்த்தனை

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்..; எஸ்.பி. சரண் விளக்கம்.. ரசிகர்கள் பிரார்த்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer SP Charan clarifies about his dad SPB health conditionஆகஸ்ட் 5-ம் தேதி பின்னணி பாடகரும் நடிகரும் தயாரிப்பாளருமான எஸ். பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உறுதியானது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இசை பிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். விரைல் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என கூறியிருந்தார் எஸ்.பி.பி.

இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனையறிந்த இளையராஜா பாலு சீக்கிரம் எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன் என உருக்கமான வீடியோ ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து உடல் நலம் பெற வேண்டும் என முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்காக பிரார்த்திக்குமாறு நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.

துக்கம் மனதை பிசைகிறது என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தினா, தமன், இயக்குநர் ஹரி, நடிகர்கள் பிரசன்னா, யோகி பாபு, நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோரும் அவர் நலம் பெற வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் எஸ்.பி.பி இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவியது.

எனவே எஸ்.பி.பி.யின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி. சரண் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்.. என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்தமைக்கு நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேசனில் உள்ளார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது.

வதந்திகளை நம்பவேண்டாம். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து வரும் தகவல்களை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி

என தெரிவித்துள்ளார் எஸ்.பி.பி. சரண்.

Singer SP Charan clarifies about his dad SPB health condition

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை.; வீட்டிலேயே வணங்க உத்தரவு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை.; வீட்டிலேயே வணங்க உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ganesh chaturthiவருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் நீர்நிலைகளில் கடவுள் சிலைகளை கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறிய வழிப்பாட்டு தலங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் வழிப்பாடு நடத்த அனுமதி.

கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே புதுச்சேரியிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை என என்ற உத்தரவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பெங்களூரு கலவரம் : 3 மரணம்; 150 பேர் கைது.. சேதப்படுத்தியவர்களிடம் நஷ்ட ஈடு பெறும் அரசு

பெங்களூரு கலவரம் : 3 மரணம்; 150 பேர் கைது.. சேதப்படுத்தியவர்களிடம் நஷ்ட ஈடு பெறும் அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bengaluru policeகர்நாடக மாநிலம் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் அக்காள் மகன் நவீன் சிறுபான்மையினர் சமுதாயத்திற்கு எதிராக சில கருத்துகளை தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையானது. இதனால் கோபமடைந்த இஸ்லாமிய மக்கள் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.

குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாததால், உயிர் தப்பினர்.

நவீன் வீட்டுக்கும், கோவிலின் நிர்வாகியான முனே கவுடா என்பவரின் வீட்டுக்கும் தீவைத்தனர். எம்.எல்.ஏ.வின் வீட்டு வாகனங்களுக்கும் தீக்கிரையாக்கப்பட்டது.

போலீஸ் வாகனங்களுக்கும், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி, காவல்பைர சந்திரா பகுதிகளில் தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வள்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர்.

போலீசார் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

கண்ணீர்புகை வீசியும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதனையடுத்து டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200 மோட்டார் சைக்கிள்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதனையடுத்து வன்முறையாளர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் யாசின் பாட்‌ஷா(வயது 28), வாஜித் அகமது(25) மற்றும் நாகவாராவை சேர்ந்த சேக்சுதீன்(24) ஆகிய இளைஞர்கள் பலியானார்கள்.

இதனால் இரு தரப்புக்கு பெரும் மோதல் உருவானது.

காவல்துறை மீது வன்முறையாளர்கள் கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வன்முறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 78 பேர் காயமடைந்தனர். கிட்டதட்ட 300 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.

தற்போது, அந்த பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது.

வன்முறைக்கு வித்திட்டதாக எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த முஜாமீல் பாட்ஷா, ஆயாஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாக 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் , செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக அமைச்சர் சி.டி. ரவி, ”குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்களிடத்திலிருந்து உத்தரபிரதேச அரசு நஷ்ட ஈடு வசூலித்தது. அதேபோல, கர்நாடகத்திலும் வசூலிக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் போலீசிடம் இருந்து தப்பிட முடியாது” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows