இசைஞானியே வெண்பா இயற்றிய தமிழ் ஞானியே; சீனுராமசாமி வாழ்த்துப்பா

Seenu Ramasamys birth day wishes to Isaignani Ilayarajaஇசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை 77வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி பிறந்த நாள் வாழ்த்தை கவிதையாக கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரும் தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் மாமனிதன் படத்திற்கு இணைந்து பணி புரிந்து வருகின்றனர்.

இசைக்கு
ஒரு வாழ்த்துப்பா…
………………………………………..

எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப்
பாணனே
மேற்குத்தொடர்ச்சி
மலையிலே
மிதந்து வந்த மேகமே

உமது வருகையை
எதிர்பார்த்து
இசையின் வாசல்
காத்திருந்தது

கருப்பு வெள்ளை
அன்னக்கிளியாள்
பாட்டிசைக்க
எங்கள் இதயத்தில்
வண்ணக்கிளிகள் பறந்தன

அன்று பெய்யத் தொடங்கிய மழை
இசையின் சிரபுஞ்சியானது

தவிலின் நாவுகளைப்
பேச வைத்தாய்
தமிழிசைக்கே அது
முதுகெலும்பானது

உமது மூச்சு
புல்லாங்குழலுக்கு சுவாசம்

உமது வயலின்கள்
சலனப்படமென
எங்கள் சாலைகளை
உயிர்ப்புறச் செய்தது

உமது சங்கீதம் எங்கள்
நினைவுத் தடத்தில்
பூத்த பூ
காலத்தின் பிம்பம்
கடிகாரத்தின்
பென்டுல சப்தம்
தூக்கத்திற்கு முன்
எம்மைத் தீண்டும்
அமைதித் தென்றல்

நீர் ஆர்மோனியத்தில்
விரல் வைத்தீர்
எங்கள் செங்காட்டு பூமியில்
பெயர் தெரியாச்
செடி ஒன்று
பூ பூத்தது

இசைஞானியே
வெண்பா இயற்றிய
தமிழ் ஞானியே
நீர் சுற்றியதால்
கிரிவலம்
இசைத்தட்டானது

எனதன்பு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்…..

இயக்குனர் சீனுராமசாமி

Seenu Ramasamys birth day wishes to Isaignani Ilayaraja

Overall Rating : Not available

Latest Post