தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் படங்களைத் தயாரித்தவர் சத்ய ஜோதிஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன்.
அஜித் நடித்த விஸ்வாசம், தனுஷ் நடித்த தொடரி உள்ளிட்ட படங்களை அண்மையில் தயாரித்திருந்தனர்.
இந்த நிறுவனம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.
மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் தியாகராஜன்.
விரைவில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43-வது படத்தையும் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
டிவி தொடர்களையும் தயாரித்துள்ள டி.ஜி.தியாகராஜன் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவராக தேர்வாகியுள்ளார்.
முன்னதாக இவர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
இதுகுறித்து டி.ஜி.தியாகராஜன் கூறுகையில்…
திரைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில் முக்கியமான பதவி கிடைத்துள்ளது.
சவாலான பொறுப்பை சரியாக செய்து முடிப்பேன். என்னைத் தேர்வு செய்து இந்த பதவியை அளித்த இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.
Sathya Jyothi Thyagarajan is the new Chairman of CII Media and Entertainment South