தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆகஸ்ட் 30-ல் உழைப்பாளர் தினம்..: தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‘சந்தோஷ் நம்பிராஜன்’
சந்தோஷ் நம்பீராஜன் நடித்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர் தினம்’.
கர்நாடகாவைச் சேர்ந்த குஷி என்பவர் நாயகியாக மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. கேரளாவைச் சேர்ந்த மசூத் என்பவர் இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார்..
சிங்கப்பூர் துரைராஜ், ரஜேந்திரன், நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் உள்ளிட்டோருடன் இணைந்து தயாரித்து இருக்கிறார்..
பிழைப்புக்காக வெளிநாடு சென்று (நரகத்தில்) வாழும் இந்தியர்களின் உணர்பூர்வமான கதையை சொல்ல வரும் படம் ‘ உழைப்பாளர் தினம்’
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் படமாக உருவாகியிருக்கிறது “உழைப்பாளர் தினம்’.
இதில் முதல் பாதியில் காமெடி, காதல் என்று கலகலப்பாக செல்லும்..
இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் பதிவாகியிருக்கிறார் இயக்குனர் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்
இதன் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத அழகான திருப்பத்துடன் முடிவடைகிறது..
இந்த நிலையில் இந்த படம் நாளை ஆகஸ்ட் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Uzhaippalar dhinam movie news