தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாளத்தில் இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இது தமிழிலும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற அதே பெயரில் தயாராகி வருகிறது.
ஆர். கண்ணன் இயக்க இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கேரக்டர.களில் நடிக்கின்றனர்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
இந்தப் படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி சமயத்தில் வெளியானது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை டிசம்பர் 29ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Here is the hard hitting trailer of my film, #TheGreatIndianKitchen ( Tamil )
https://t.co/rymYiXFA21
@Dir_kannan #DurgaramChoudhary #NeelChoudhary @RDCMediaPvtLtd @23_rahulr @balasubramaniem