தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆண்களுக்கு பாடம்… பெண்களுக்கு நம்பிக்கை சொல்ல வரும் ‘விழி அருகே’
எல்லா ஜீவராசிகளுக்கும் தாம்பத்யம் உறவு இருந்தாலும் திருமணம் என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு அற்புதமான தருணமாகும்.
அந்த திருமணம் பந்தத்தை சொல்லும் படங்கள் மிகவும் அரிதாகும். இந்த சூழ்நிலையில் திருமண உறவுகளை சொல்ல வரும் படம் தான் ‘விழி அருகே’..
திருமண வாழ்க்கைக்கு பிறகு பெண்கள் படும் இன்னல்களை மிகவும் தத்துருவமாக இயக்குனர் ஆண்டோ (ANTO) படமாக்கி இருக்கிறார்.
இந்த படத்திற்கு ‘விழி அருகே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஆண்களுக்கு ஒரு பாடமாகவும் பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் கொடுக்கும்.
இதில் சஜிதா நாயகியாகவும் ஜெகதீஷ் நாயகனாகவும் மற்றும் முக்கியமான வேடத்தில் பறவை சுந்தராம்பாள் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை SAHAYAMATHA EXIM கம்பெனி தயாரித்துள்ளது.
ஒளிப்பதிவு ரஹீம் பாபு இசை விஜய் தேவசிகாமணி பாடல் வரிகள் ரமணி காந்தன் எடிட்டிங் வேலை சுந்தர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்த படம் விரைவில் வெளிவர நிலையில் அப்டேட் கேட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
எனவே எங்களுடன் இணைந்து இருங்கள்..
Sajitha and Jagadish starring Vizhi Arugae
—–