தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜீ டீவி யில் ஒளிபரப்பான சரிகம என்னும் பாடல் நிகழ்ச்சி மூலம் தமிழகளவில் பிரபலமானார் பாடகி ரமணியம்மாள்.
ரமணியம்மாள் என்னும் 64 வயதாகும் இந்தப் பெண்மணியின் குரலை பல சினிமா பிரபலங்களும் பாராட்டி உள்ளனர்.
நாட்டுப்புற பாடல்களை பாடி வரும் ரமணிக்கு ராக்ஸ்டார் ரமணி என்று பட்டமும் அளிக்கப்பட்டது.
இவர் முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இவரின் குரலில் மயங்காதவர்களே இல்லை எனலாம்.
இவருக்கு சின்னத்திரை புகழின் உச்சத்தை கொடுத்தாலும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை சினிமாவில் பாடியிருக்கிறார்.
விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா, விஷால் நடித்த சண்ட கோழி போன்ற படங்களிலும் இவர் பாடியிருக்கிறார்.
மேலும் பரத் நடித்த காதல், ஜீவா நடித்த தெனாவட்டு, கரண் நடித்த காத்தவராயன் படங்களிலும் பாடியுள்ளார்.
கிஷோர் சினேகா நடித்த 2013 இல் வெளியான ‘ஹரிதாஸ்’ படத்தில் வரும் வெள்ள குதிரை என்ற பாடலை பாடியுள்ளார்.
ஆட்டீசம் (autism) நோய் கொண்ட தனது மகனுக்கு ஒரு தாய் பாடும் பாடலாக அந்த பாடலை தன் இனிமையான குரலில் பாடியிருப்பார் ரமணியம்மாள்.
இந்த நிலையில் இன்று ஏப்ரல் 4ம் தேதி அவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
Rock star Ramani ammaal passed away