தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த ‛எல்.கே.ஜி’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதனையடுத்து அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்தார் ஆர்ஜே. பாலாஜி. இதற்காக இவர் இந்தியன் 2 பட வாய்ப்பை வேண்டாம் என மறுத்திருந்தார்.
தற்போது மீண்டும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
இந்த படத்தை என்ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இருவரும் இணைந்து இயக்குகின்றனர்.
இதில் ஆர்.ஜே. பாலாஜியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம்.
இந்த படத்திற்கு ‛மூக்குத்தி அம்மன்’ என தலைப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு 2020 கோடை விடுமுறையில் வெளியிட உள்ளனர்.
ஏற்கெனவே நயன்தாரா நடித்த ‛நானும் ரவுடி தான்’, ‛வேலைக்காரன்’ படங்களில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
RJ Balaji and Nayanthara team up for Mookuthi Amman