தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
DUBAI GLOBAL VILLAGE ரெடின் கிங்ஸ்லி & சங்கீதா நடத்தும் பொருட்காட்சி.; அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ் சினிமாவில் காமெடி செய்து கொண்டிருந்த நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோக்களாக மாறிவிட்டனர்..
வடிவேலு சந்தானம் சூரி யோகி பாபு சதீஷ் உள்ளிட்ட பல காமெடி நடிகர்களும் தற்போது ஹீரோக்களாக பல படங்களில் நடித்து வருகின்றனர்.
எனவே காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் ரெடின் கிங்ஸ்லி காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
இதனை அடுத்து அவர் ரஜினியுடன் அண்ணாத்த & ஜெய்லர் உள்ளிட்ட படங்களிலும் விஜய்யுடன் பீஸ்ட் படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.
இந்த நிலையில் ஆனந்த ராகம் உள்ளிட்ட பல டிவி சீரியலில் நடித்து வந்த சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிப்புத் துறை மட்டுமில்லாமல் பிசினஸ் செய்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி.. முக்கியமாக கடந்த 15 வருடங்களாக பொருட்காட்சி விழாக்களை நடத்தி வருகிறார்.. இந்த நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு தீவு திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற மிகப்பெரிய பொருட்காட்சியை நடத்தி வருகிறார்.
இதனை தமிழக அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.. இந்த விழாவில் பல அரசியல் பிரமுகர்களும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதாவும் கலந்து கொண்டார்.
இந்தப் பொருட்காட்சியின் நுழைவு கட்டணம் ரூபாய் 100 மட்டுமே.. இங்கு இலண்டன் துபாய் பாரிஸ் சுற்றுலா தலங்கள் தத்ரூபமாக செட்டு போடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் கொண்டாட பல அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவு திடலில் நடைபெறும் துபாய் குளோபல் வில்லேஜ் என்ற பொருட்காட்சி அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.
Redin Kingsley Sangeethas Dubai Global village at Chennai