அல்வா கொடுத்த விஸ்வாச விநியோகஸ்தர்.; திருப்பூர் சுப்ரமணியம் உடைத்த ரகசியம்

New Project (9)இந்தாண்டு தொடக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்துடன் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தையும் மோத விட்டனர்.

இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இதில் விஸ்வாசம் படத்தை சத்யஜோதி தயாரிக்க, கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.

எனவே பேட்ட படத்தை விட விஸ்வாசம் பட அதிக வசூல் என ட்விட்டர் வட்டாரத்தில் பரபரப்பாக வதந்திகளை பரப்பினர். இதற்காகவே சில லட்சங்களையும் செலவு செய்தனர்.

உடனே ரஜினியை முந்திவிட்டார் அஜித் என ட்விட்டர் குருவிகளும் கூவத் தொடங்கியது.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு இணையத்தள பேட்டியில் விஸ்வாசம் வசூல் வதந்தியை உடைத்துள்ளார்.

அஜித் ரசிகர்கள் வேண்டுமென கேட்க, அப்படியொரு வதந்தியை பரப்பினார்களாம்.

அதாவது விஸ்வாசம் படம் ரூ. 150 கோடி வசூல் என கூறிவிட்டு ரூ.80 கோடியை தான் தயாரிப்பாளர்களிடம் கொடுத்தார்களாம்.

இந்த நிலையில் மீண்டும் வேறு வழியில்லாமல் இப்படத்தை விநியோகம் செய்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது புதிய ட்விட்டை போட்டுள்ளது.

அதாவது பொங்கலுக்கு திரையிடப்பட்டு தீபாவளி வரை நாம் இதை பேசிக்கொண்டிருக்கிறோம் எனினும் எத்தனை தீபாவளி வந்தாலும் விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனை மறந்துவிடவோ மறைத்து விடவோ முடியாது. என பதிவிட்டுள்ளனர்.

சரி விடுங்கப்பா.. வாய் வலிக்கிற வரை கத்தட்டும்.

Overall Rating : Not available

Latest Post