வழி தெரியாமல் தடுமாறிய தல..; வேறு வழியில்லாமல் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அஜித் (வீடியோ)

சினிமாவை தவிர நடிகர் அஜித்தை பொது வெளியில் பார்ப்பது அபூர்வம்.

ஆனால் சென்னை வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென வந்தார் அஜித்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அஜித் அங்கு வர என்ன காரணம் ? என்ற கிடைத்த தகவலின் படி…

சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் அஜித்.

வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் அஜித்.

எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்கு பதிலாக இங்கு மாறி வந்துவிட்டதாக தெரியவந்தது.

அந்த கார் ஓட்டுனர் இங்கு மாறி அவரை அழைத்து வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அங்கு அஜித்தை பார்த்ததும் சிலர் அவருடன் செஃல்பி எடுக்க ஆசைப்பட்டனர்.

அங்கிருந்த போலீசார் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்தனர்.

அந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜீத் லேட்டஸ்ட் புகைபடங்கள் இதோ https://www.filmistreet.com/photos/valimai-ajith-images-new-photos-thala-ajith-kumar-latest-stills/

Reason behind Ajith viral photos

Overall Rating : Not available

Latest Post